சனி, 4 ஏப்ரல், 2015

சந்திர கிரகணம் நிகழ்ந்தது! எளிய அறிவியல் விளக்கம்!
(04 ஏப்ரல் 2015 வெள்ளிக்கிழமை) 
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------
04.04.2015 தேதிய சந்திர கிரகணம். வட அமெரிக்கா, பசிபிக், 
ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் தெரிந்தது. 
-----------------------------------------------------------------
1) கிரகணம் என்றால் என்ன? மிக எளிமையாகப் புரிந்து 
கொள்ளலாம்.
2) கிரகணம் என்றால் மறைப்பு. அப்படியானால், 
மறைப்பது எது? மறைக்கப் படுவது எது?
3) சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றில், சூரியனுக்கு 
மட்டுமே சுய ஒளி உண்டு. சுயஒளி உள்ள சூரியன் மட்டுமே 
எப்போதும் மறைக்கப் படும். அதாவது SOURCE OF LIGHT தான் 
மறைக்கப் படும்.
----------------------------------------------------------------------------------------
4) அடுத்த கேள்வி: மறைப்பது யார்?
5) பூமி, சந்திரன் இவை இரண்டுமே சூரியனை மறைக்கும்.
6) பூமி மறைத்தால், அது சந்திர கிரகணம்.
அதாவது, சூரியனை பூமி மறைத்தால், சந்திரன் 
இருட்டாகி விடும். இதுதான் சந்திர கிரகணம்.
----------------------------------------------------------------------------
7) சந்திரன் மறைத்தால் அது சூரிய கிரகணம் எனப்படும்.
அதாவது, சூரியனை சந்திரன் மறைத்தால், பூமி 
இருண்டு விடும். இதுதான் சூரிய கிரகணம் ஆகும்.
------------------------------------------------------------------------------------
நன்கு கவனிக்கவும்:
---------------------------------
எப்போதும் சூரியன்தான் மறைக்கப் படும்.
பூமி மறைத்தால் அது சந்திர கிரகணம்.
சந்திரன் மறைத்தால் அது சூரிய கிரகணம்.
*********************************************************************88.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக