புதன், 1 ஏப்ரல், 2015

நையாண்டி மேளமும் ராஜ மேளமும்!
------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
----------------------------------------------------------------------
தமிழின் காட்சி ஊடகத் துறையில் தந்தி டி.வி.யின் 
திரு ரங்கராஜ் பாண்டே அதிகப் பிரபலம் உள்ளவராக 
இருக்கிறார். He is very much articulate.அவர் சிறப்பான 
communicative skills கொண்டு இருப்பவர்.
**
எனினும் அவர் ஒரு INTELLECTUAL அல்லர். தமிழின் 
காட்சி ஊடகங்களில் INTELLECTUALS சிறிது உண்டு.
பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால்,
திரு பாண்டே அத்தகைய அறிவுஜீவி அல்லர்.
**
ஒரு முதல்தர வித்துவான் ராஜமேளம் வாசிக்கும்போது,
எல்லோராலும் ரசிக்க முடியாது. ஏனெனில், ராஜமேளத்தை
ரசிக்க இசையறிவு அவசியம்.
**
ஆனால் ஒரு நாலாந்தர வித்துவான் நையாண்டி மேளம் 
வாசித்தால் எல்லோரும் ரசிப்பார்கள். ஏனெனில், 
நையாண்டி மேளம் நுட்பமானது அல்ல என்பதால் 
எல்லோருக்கும் புரியும். முட்டாளும் ரசிக்க முடியும்.
**
திரு பாண்டே நையாண்டி மேளம் வாசிப்பவர். இதனால் 
அவர் பிரபலம் ஆகிறார். அவரால் ஒருநாளும் 
நுட்பங்களைக் கோரும் ராஜமேளம் வாசிக்க முடியாது.
**
கல்விக்கு அழகு கசடற மொழிதல் என்பார்கள். திரு பாண்டே 
கசடற மொழிந்து யாரும் பார்த்து இருக்க முடியாது.
சட்டியில் இல்லை; எனவே அகப்பையில் வரவில்லை. 
திரு பாண்டேக்கு வாழ்த்துக்கள்!
***************************************************************888   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக