கலைஞரின் எழுத்தாணியைப் பறிக்க முயலும்
சில திராவிடத் திரிபுகள்!
--------------------------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
----------------------------------------------------------------------------------------
வைணவர்களால் இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்து
வணங்கப் படுகிற, உயர்வெய்திய ராமானுஜரின் வரலாற்றை,
தாழ்குலத்தைச் சேர்ந்த சூத்திரரான கலைஞர் எழுதுவதா என்று
ஆத்திரத்தோடும் வன்மத்தோடும் பார்ப்பன சாதி வெறியர்கள்
வசை பாடுகின்றனர். முற்போக்கு வேடம் தரித்துக் கொண்டு
நமது முகாமில் இருக்கும் பார்ப்பன அடிவருடிகள் சிலரும்
இதுபோன்றே நஞ்சைக் கக்குகின்றனர்.
***
'எழுத்துச் சித்தர்' பாலகுமாரன், "கடவுளைத் தேடி"என்ற தொடரை
கல்கியில் எழுதுகிறார். ஏழு வயது முதல் எழுபது வயது
வரையிலான இறை தரிசனப் பயணமாம் அது! பார்ப்பன
எழுத்தாளர்கள் எவ்விதத் தடையும் இன்றி, தாங்கள் நினைத்ததை
எழுதுகிறார்கள். ஆனால், சூத்திர எழுத்தாளரான கலைஞர்
எழுதுகிறார் என்றதுமே, தடை விதிப்பதில், பார்ப்பனர்களை முந்திக் கொண்டு விடுகிறார்கள் பார்ப்பன அடிவருடிகள்.
***
கலைஞர் எழுதிய பின், அதில் ஏதேனும் கொள்கைச் சமரசம்
இருப்பின், அப்போது கலைஞரை நார்நாராகக் கிழித்துத்
தொங்க விடலாம். அதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு.
ஆனால், எழுதத் தொடங்கும் முன்பே, எழுத்தாணியைப்
பறிப்பது தகாத செயல்.
**
திராவிட இயக்கம் என்பது திமுகவையும் உள்ளடக்கியதுதான்.
பெரியார் முடிவு எடுத்தார்; அண்ணாவும் கலைஞரும்
அந்த முடிவுகளை நிறைவேற்றிக் காட்டினார்கள். திக-திமுக
உறவு என்பது DECISION MAKER and EXECUTER உறவு போன்றது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம்
செய்தவர் கலைஞர்.
**
தோழமை அமைப்பாகக் கருதி விமர்சனம் செய்வது ஏற்கத்
தகுந்த ஒன்று. ஆனால், ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாகி,
பார்ப்பானை மிஞ்சிய வன்மத்துடன் சேற்றை வாரி இறைப்பது
அடாத செயல்.
--------------------------------------------------------------------------------------------------
திரு வே மதிமாறனின் பிற்போக்குத்தனமான பதிவுக்கு
எனது எதிர்வினையே இக்குறுங் கட்டுரை ஆகும்.
***************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக