வியாழன், 9 ஏப்ரல், 2015

ராமானுஜர் மீது திடீர் மோகம் எதுவும் கலைஞருக்கு
ஏற்படவில்லை. ஆட்சியில் இருந்தபோதே, 2010இல்,
ராமானுஜர் பற்றி, நீண்ட சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்.
திரு ஆர்.எம் வீரப்பன், ஜகத் ரட்சகன் முன்னின்று நடத்திய
ஆழ்வார்கள் ஆய்வு மையக் கூட்டங்களில் ராமானுஜர் பற்றிச்
சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்.சேமகரமானது
**
சாதி என்பது தமிழ் மண்ணின் விளைபொருள் அன்று; அது
ஆரிய இறக்குமதியே என்ற கருத்தை யாப்புறுத்தும்
பொருட்டும்,  புத்த சமண மதங்களில் தொடங்கி ராமானுஜர்
வரலாற்றையும் கடந்து நிற்கும் சாதி எதிர்ப்புப் போர் நீண்ட
பாரம்பரியம் உடையது என்று உணர்த்தும் பொருட்டும்
கலைஞர் ராமானுஜ காவியத்தைப் படைக்கிறார்.
***
சாதி வாழ வேண்டும் என்றும், தீண்டாமை  நீடிக்க வேண்டும்
என்றும் கருதும் ஆரியச் சாதி வெறியர்கள் மட்டுமே கலைஞர்
எழுதுகிறார் என்றதும் உடைவாளை உருவுகிறார்கள்.
சூத்திரக் கலைஞர் எழுதட்டும்! ஒரு சூத்திரரிடம் இருந்து
எழுத்தாணியைப் பறிக்க முயல வேண்டாம்!
--------------------------------------------------------------------------------------------------         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக