வியாழன், 2 ஏப்ரல், 2015

திரு சிவகுமார் சுப்பு அவர்களுக்கு,
---------------------------------------------------------------
அதிகாரமும் அதன் முறைமைப் படுத்தலும்
(power and legitimisation) பற்றி ஃபூக்கோ  பேசி உள்ளார்.
அரசு போன்ற நிறுவங்கள் அதிகாரத்தை மக்கள் மீது
பிரயோகிக்கின்றன. இதனால் அதிகாரம் என்ற மையத்தை
எதிர்த்து விளிம்புநிலை மக்கள் போராடுகின்றனர்.
ஃபூக்கோ இந்த மக்களின் போராட்டத்தை, அதாவது
மற்றமைகளின் (other) போராட்டத்தை ஆதரிக்கிறார்.
"உரையாடலும் அதிகாரமும்" என்ற அவரின் கட்டுரையை,
மன்னிக்கவும், பிரதியைப் படிக்கவும். ஃபூக்கோவின்
கருத்துக்களில் நீட்சேயின் தாக்கம் இருப்பதை
பின்நவீனத்துவ அறிஞர்கள் பலரும் ஒப்புக்
கொண்டு உள்ளனர். அதிகாரத்தை யார் பெறுவது என்ற
பொட்டீல்தான் உலகம் இயங்கிக் கொண்டு
இருக்கிறது என்ற கருத்து நீட்செவுக்கும் இருந்தது.
ஃபூக்கோவுக்கும் இருந்தது.
**
மேற்கோள்வாதியாக இருந்து ஏதேதோ மேற்கோள்களைக்
காட்டி ஒரு தத்துவத்தை விளக்கும் பாங்கை நான்
ஏற்பதில்லை. மேற்கோள்களை விட, உள்வாங்கப்பட்ட
சாரமே சரியானது. ஃபூக்கோ அதிகாரத்தைக் களைவது
பற்றிப் பேசவில்லை என்றால், அதிகாரத்தின்
உரையாடல்களை அவர் எதிர்த்து நின்றதை எப்படிப்
புரிந்து கொள்வது?
-----------------------------------------------------------------------------------------        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக