செவ்வாய், 1 டிசம்பர், 2015

மார்க்சிஸ்ட் கட்சியின் வெகுஜன அமைப்பான DYFI
நாத்திகப் பிரச்சாரம் செய்யாமல் இருந்தாலும் கேடில்லை.
ஆனால், பிள்ளையார் விழாவை DYFI பதாகையின் கீழ்
கொண்டாடுவது ஏற்கத்தக்கது அல்ல. "நான் ஏன் நாத்திகன்
ஆனேன்" என்ற பகத்சிங் எழுதிய நூலைத் தமிழில்
மொழிபெயர்த்த  மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர்
ஜீவானந்தம் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப் பட்டார்.
பகத்சிங் படத்துடன் பிள்ளையார் படத்தையும் போட்டு
DYFI  இளைஞர்கள் பேனர்  வைப்பது நாணத்தக்க செயல்.
இது கம்யூனிசக் கொள்கைகளுக்கு எதிரானது.
**
நாணத்தக்க செயலுக்கு நாண  வேண்டும். அதை விட்டு
பெருமிதம் கொள்பவர்களை என்ன செய்வது? தோழர்
ஜி ராமகிருஷ்ணன் அவர்கள் கவனத்திற்கும் தீக்கதிர்
ஆசிரியரின் கவனத்திற்கும் இதை நான் எடுத்துச்
சென்றுள்ளேன்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக