செவ்வாய், 3 அக்டோபர், 2023

கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியாவுக்கு
நோபல் பரிசு வழங்காமல் புறக்கணித்தது நியாயமா?
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------------
நடப்பாண்டிற்கான(2023) மருந்தியல் நோபல் பரிசு 
கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த இரு அமெரிக்க 
விஞ்ஞானிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. 
பெண் விஞ்ஞானி காட்டலின் காரிக்கோ மற்றும் 
டிரூ வெயிஸ்மான் ஆகிய இருவரும் mRNA 
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொரோனா 
தடுப்பூசி உருவாக்கினர். mRNA தொழில்நுட்பம் 
கொரோனாவைத் தடுப்பதில் அதிகபட்சத் திறன் 
கொண்டது. இத்தடுப்பூசிகளை Pfizer நிறுவனமும் 
Moderna நிறுவனமும் தயாரித்தன.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் 
கோவாக்சின் தடுப்பூசி முற்றிலும் சுதேசித் தயாரிப்பு. 
செயலற்ற வைரசை (inactivated virus)  பயன்படுத்தும் 
தொழில்நுட்பத்தில்  உருவான இதன் நோய் தடுக்கும் 
திறன் 81 விழுக்காட்டிருக்கும் அதிகம் என்று 
உலகளாவிய அறிக்கைகள் நிரூபித்துள்ளன.

mRNA தொழில்நுட்பத்திலும் இந்தியா ஒரு 
தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. மேலும்
DNA தொழில்நுட்பத்தில் உலகிலேயே முதன் 
முதலாக இந்தியா சைக்கோவ் டி (ZyCoV-D)
என்ற தடுப்பூசியைத் தயாரித்துள்ளது. 

கொரோனாவின் முடிவில் இந்தியாவில் 219 கோடி 
டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 
219 கோடி என்பது அசுரத்தனமான 
எண்ணிக்கை! இது ராட்சஸத் தனமான சாதனை!

இந்தியத் தடுப்பூசிகளின் நோய்த்தடுப்புத் திறன்
very effective. இந்தியாவில் கொரோனா மரணங்கள் 
குறைவாக இருந்ததற்குகான காரணங்களில் 
ஒன்று நமது தடுப்பூசிகளின் திறனே.

உலகில் கொரோனா மரணங்கள் = 69 லட்சம்.
அமெரிக்காவில் மரணங்கள் = 11.27 லட்சம்.
இந்தியாவில் மரணங்கள் = 5.32 லட்சம்.

உலக அளவில் கொரோனா மரணங்களில்
அமெரிக்கா 20ஆவது இடத்தில் உள்ளது. இந்தியா 
152ஆவது இடத்தில் உள்ளது.  
----------------------------------------------------------
எனவே இந்தியாவிற்கும் மருந்தியல் நோபல் பரிசு 
வழங்கப் பட்டிருக்க வேண்டும். இந்தியா எல்லா 
விதத்திலும் மருந்தியல் நோபல் பரிசுக்குத் 
தகுதி உடையதே! வழங்கப்படாதது வருந்தத் 
தக்கதும் கண்டிக்கத் தக்கதும் ஆகும். 

இந்தியத் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 
நோபல் பரிசு வழங்கச் சொல்லி பரிந்துரையோ 
விண்ணப்பமோ நோபல் பரிசு வழங்கும் ராயல் 
சுவீடிஷ் அகாடமிக்கு இந்திய அரசின் சார்பில் 
அனுப்பப் பட்டுள்ளதா? இதற்கு பதில் அறிய 
விரும்புகிறேன்.

இந்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்
துறையின் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் MD  
அவர்கள். இவர் மருத்துவப் பேராசிரியர்.
ஸ்டான்லி  மருத்துவக் கல்லூரியில் MBBS 
பட்டம் பெற்ற இவர் மருத்துவ ஆராய்ச்சியாளரும்
ஆவார். இவர் அறிவியல் துறையின் இணையமைச்சர் 
(தனிப்பொறுப்பு).

இந்தியாவுக்கு 2023ஆம் ஆண்டிற்கான மருந்தியல் 
துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது 
குறித்த 140 கோடி இந்திய மக்களின் அதிருப்தியை 
ராயல் சுவீடிஷ் அகடாமிக்கு இந்திய அரசின் 
சார்பில் அறிவியல் அமைச்சர் அவர்கள் தெரிவிக்க 
வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.   

         
 

    
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக