சனி, 7 அக்டோபர், 2023

 
திரு பாமரன் அவர்களுக்கு,

சீனா ஏகாதிபத்திய நாடுதான். அது கம்யூனிஸ்ட் 
நாடு அல்ல. சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்று 
பேசும் எவருடனும் விவாதிக்க எனக்கு 
ஒன்றும் இல்லை.

 நியூஸ் கிளிக் பத்திரிக்கை குறித்து எதையும் 
தெரிந்து கொள்ளாமல் நீங்கள் பேசுகிறீர்கள்.
இந்தியாவின் வரைபடம் (map) என்று நியூஸ் கிளிக் 
வெளியிட்ட வரைபடம் அவர்களின் 
இணையதளத்தில் இருக்கிறது. அந்த வரைபடம் 
சீனா வெளியிட்ட வரைபடம் ஆகும். அதாவது 
இந்தியாவின் பகுதிகளை சீனாவின் பகுதியாகக் 
காட்டும் சீனா உருவாக்கிய போலி வரைபடம் ஆகும்.

சீனாவிடம் இருந்து வாங்கிய பணத்திற்கு ஈடாக 
services அனுப்பியதாகக் கூறியது நியூஸ் கிளிக்.
ஆனால் services அனுப்பியதற்கான ஆதாரத்தைக் 
காட்ட முடியவில்லை. 

நீங்கள் வழக்கின் விவரங்களைப் படிக்காமல் 
விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் 
பேசுகிறீர்கள். உங்கள் அறிவின் குறுகிய வரம்புக்கு 
அப்பால் உள்ள உண்மைகளை உங்களால் புரிந்து 
கொள்ள இயலாது. உங்களுக்கு அறிவூட்டி உங்களை 
கன்வின்ஸ் செய்ய வேண்டும் என்று எனக்கு எந்த 
அவசியமும் இல்லை.

நியூஸ் கிளிக் என்னும் கார்பொரேட் இணையதளத்தை
உங்களைப்  போன்றவர்கள்  ஆதரிக்கலாம். 
செந்தில் பாலாஜி முதல் ஜெகத் ரட்சகன் வரை 
ஆதரித்துக் கொண்டு திரிபவர்கள் சீனாக கைக்கூலி 
நியூஸ் கிளிக்கை ஆதரிக்கத்தான் செய்வார்கள்.


நீங்கள் நியூஸ் கிளிக் ஏட்டை வாசித்தது கூட
இல்லை என்பதை நான் அறிவேன். நான் நீண்ட 
காலமாக வாசித்து வருகிறேன் (ஆங்கிலம் மற்றும் 
இந்திப் பதிப்புகள்). BSNL குறித்த 
எனது கருத்துக்களை அந்த ஏடு பலமுறை 
வெளியிட்டு உள்ளது. அவர்களின் இணைய 
தளத்தில் காணலாம்.

திமுகவை ஆதரித்துக் கொண்டு பாதுகாப்பாக 
புரட்சி பேசுவது உங்களைப்போன்ற குட்டி 
முதலாளித்துவ ஆசாமிகளுக்கு, சீன ஆதரவாளர்களுக்கு 
கைவந்த கலை. உங்களை கியூ பிராஞ்சு போலீசுக்கு 
ஆள்காட்டும் ஆசாமி என்று மாவோயிஸ்டுகள் 
சொல்கிறார்கள். நீங்கள் எழுதுவதைப் பார்த்தால் 
அது சரிதான் என்று நிரூபணம் ஆகிறது.

போலிக் கம்யூனிஸ்டுகள், ஏகாதிபத்திய சீனாவை 
கம்யூனிஸ்ட் நாடு என்று சொல்லும் கம்யூனிச 
எதிரிகள் ஆகியோருடன் விவாதிக்க எனக்கு 
ஒன்றுமே இல்லை.



  
    
 
  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக