சனி, 9 டிசம்பர், 2023

கேள்வி கேட்க லஞ்சம் வாங்கிய 11 எம்பிக்களை 
பதவிநீக்கம் செய்தது இந்திய நாடாளுமன்றம்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------
இன்றைக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு! ஆண்டு 2005.
UPA-I எனப்படும் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டு
இருந்தது. மன்மோகன் சிங் பிரதமர். அப்போது 
Cobrapost என்னும் இணையப் பத்திரிக்கை ஒரு 
sting operationஐ நடத்தியது. அதில் 11 எம்பிக்கள் 
மாட்டினார்கள். 10 பேர் மக்களவை எம்பிக்கள்; 
ஒருவர் ராஜ்யசபா எம்பி.

இந்த 11 எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட 
லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்கள்.
இவர்கள் லஞ்சம் வாங்கியதும் பிடிபட்டதும் 2005 
டிசம்பரில்தான். இக்காட்சிகள் ஒரு தனியார் டிவியில் 
காட்டப்பட்டன. இதன் மூலம் நாடு முழுதும் 
இந்த எம்பிக்கள் அசிங்கப்பட்டுப் போனார்கள்.

இந்த எம்பிக்கள் காங்கிரஸ், பாஜக, மாயாவதியின் 
பகுஜன், லல்லு யாதவ்வின் ஆர் ஜே டி ஆகிய 
கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 11 பேரையும்
இந்திய நாடாளுமன்றம் பதவிநீக்கம் செய்தது (expelled).

காங்கிரசின் ராம் சேவக் சிங், பாஜகவின் சுரேஷ் 
சண்டெல், பகுஜன் கட்சியின் ராஜா ராம்பால்,
லாலு கடசியான ஆர் ஜே டியின் மனோஜ் குமார் 
ஆகியோர் மாட்டிக்கொண்டு பதவி இழந்த 
எம்பிக்களில் சிலர்.   .

லஞ்சம் வாங்கிய மக்களவை எம்பிக்கள் 10 பேரையும்
பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அன்றைய அவை 
முன்னவர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் கொண்டு 
வந்தார். தீர்மானம் நிறைவேறியது.

இதே போல, லஞ்சம் வாங்கிய அந்த ஒரு ராஜ்யசபை
எம்பியை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை 
பிரதமரும் ராஜ்யசபா உறுப்பினருமான டாக்டர் 
மன்மோகன் சிங் ராஜ்யசபையில் கொண்டு வந்தார்.
தீர்மானம் நிறைவேறியது. இவ்வாறு லஞ்சம் வாங்கிய 
11 எம்பிக்களையும் இந்திய நாடாளுமன்றம் பதவிநீக்கம் 
செய்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வு 
நடைபெற்றபோது மக்களவையின் சபாநாயகராக 
இருந்தவர் மார்க்சிஸ்ட் கட்சியின் சோம்நாத் சட்டர்ஜி.

இக்காலக் கட்டத்தில் (2005-2007) இந்தியாவின் துணை 
ஜனாதிபதியாக இருந்து ராஜ்ய சபாவை நடத்தும் 
பொறுப்பில் இருந்தவர் அன்றைய துணை ஜனாதிபதியான 
பைரோன் சிங் ஷெகாவத் அவர்கள்.  

அதே போல, இதே காலக்கட்டத்தில் (2005-2007) ராஜ்யசபாவின் 
துணைத் தலைவராக (deputy chairman of the Rajya Sabha)     
இருந்து அவையை நடத்தியவர் காங்கிரசின் 
கே ரகுமான் கான். இது அனைத்தும் வரலாறு.

History repeats itself because men repeat their mistakes என்றார் 
மேனாட்டு அறிஞர் ஆஸ்கார் ஒயில்டு. 2005ல் இந்திய 
நாடாளுமன்றத்தின் 11 எம்பிக்கள் செய்த தவறை,
18 ஆண்டுகள் கழித்து, 2023ல் திரிணமூல் கட்சியின்
பெண் எம்பி மெதுவா மொய்த்ரா வெட்கமின்றிச் 
செய்திருக்கிறார். மாட்டிக் கொண்டார். டிசம்பர் 2023ல்
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் 
இவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

மெஹுவா மொய்த்ரா எப்படி மாட்டிக் கொண்டார்?
இதுவரை அம்பலப் படுத்தியது யார்? ஏதேனும் 
sting operation நடந்ததா என்றால் அதெல்லாம் இல்லை 
என்பதே பதில். பின் எப்படி மாட்டிக் கொண்டார்?
எப்படி வசமாகச் சிக்கிக் கொண்டார்?

இவரை அம்பலப் படுத்தியவர் இவரின் பாலுறவுப் 
பங்காளியே! மெஹுவா மொய்த்ரா ஒரு பின்நவீனத்துவப் 
பெண்மணி. இவர் எழுத்தாளர் அருந்ததி ராயைப் 
பின்பற்றி வாழ்ந்து வருபவர். திருமணம், குடும்பம் 
ஆகியவற்றை பின்நவீனத்துவம் வேம்பென 
வெறுக்கிறது. எனவே அருந்ததி றாயைப் போன்றே 
பலருடனும் பாலுறவை முன்னிறுத்தி living together
முறையில் வாழ்ந்து வருபவர் மெஹுவா மொய்த்ரா.

இவருக்கும் இவரின் பாலுறவுப் பங்காளிக்கும் இடையே 
பூசலும் சண்டையும் ஏற்பட்டன. நாளாக ஆக சண்டை 
முற்றியது. இவரின் ரகசியங்கள் அனைத்தையும் தெரிந்த 
இவரின் பாலுறவுப் பங்காளி இவரை அம்பலப் படுத்தி 
விட்டார். மெஹுவா மொய்த்ரா முற்றிலுமாக அம்பலப் 
பட்டுப் போய்விட்டார். காமவெறி அவரின் அரசியல் 
வாழ்க்கையைக் காவு கொண்டு விட்டது.

தற்போது காங்கிரசின் மூத்த தலைவரான ஒரு 
உமனைசருடன் இவருக்கு பாலியல் ரீதியிலான உறவு 
இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. 

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை 
வீயாது அடியுறைந் தற்று.
****************************************************    
  
  .  

      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக