திங்கள், 11 டிசம்பர், 2023

 பதவி பறிக்கப்பட்ட திரிணமூல் கட்சியின் பெண் எம்பி 
மெஹுவா மொய்த்ரா புரிந்த கிரிமினல் குற்றங்கள்!
இக்குற்றங்கள் யாவும் நிரூபிக்கப் பட்டுள்ளன!
திஹார் சிறையில் அடைக்கப் படுகிறார் மெஹுவா! 
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
மெஹுவா மொய்த்ரா பற்றிய RDX கட்டுரை!
---------------------------------------------------------------------------
1) 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2023 செப்டம்பர் 30ஆம் 
தேதி வரையிலான நாலே முக்கால் ஆண்டுகளில் 
மெஹுவா மொய்த்ரா துபாய்க்கும் அமீரகத்திற்கும் 
நான்கு முறை பயணம் செய்துள்ளார்.

அமீரகத்தில்தான் (UAE) தொழிலதிபரும் கோடீஸ்வரரும் 
ஆகிய ஹிராநந்தனி வசித்து வருகிறார். அவரைச்  
சந்திக்கவே மெஹுவா  அமீரகம் சென்றுள்ளார்.

2) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓர் இணையதள 
ஏற்பாடு உண்டு. இது MP Portal என்று அழைக்கப்படும்.
ஒரு எம்பியானவர் இந்த போரட்டலுக்குள் log in 
செய்து நுழைந்து நிகழ்வுகளில் பங்கேற்கலாம்;
பார்க்கலாம்.

இவ்வாறு log in செய்வதற்கான user id,  pass word உள்ளிட்ட 
credentialsஐ ஒரு எம்பியானவர் வேறு யாருக்கும் 
கொடுக்கக் கூடாது; அவர் மட்டுமே பயன்படுத்த 
வேண்டும். ஆனால் மெஹுவா மொய்த்ராவின் 
MP Portal துபாயில் இருந்து 47 முறை பயன்படுத்தப் 
பட்டுள்ளது. இந்த 47 முறையும் அதைப் பயன்படுத்தியவர் 
கோடீஸ்வரர் ஹிரா நந்தனி. 

இதை மெஹுவா மறுக்கவில்லை. தான் password உள்ளிட்ட 
log in credentialsஐ எம்பி அல்லாத இன்னொருவருக்குக் 
கொடுத்ததாகவும், அப்படிக் கொடுத்ததில் தவறில்லை 
என்றுமே முட்டாள்தனமாக வாதாடினார் மெஹுவா.

இபோது வாசகர்களுக்கு அரசாங்க நடைமுறை 
சார்ந்த ஒரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன்.
நான் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றிக் 
கொண்டு இருந்தபோது என்னுடைய பொறுப்பில் 
பல்வேறு கணினிகள், சிஸ்டம்கள் இருந்தன. சில 
சர்வர்களின் accessம் எனக்கு இருந்தது. அனைத்தும் 
password network ஆகும். இதற்காக எனக்கு நிர்வாகம் 
வழங்கியிருந்த passwords அனைத்தும் HR Passwords ஆகும்.  
அதாவது எனது HR numberன் அடிப்படையில் 
வழங்கப்பட்ட பாஸ்வேர்டு ஆகும். அதை என்னைத் 
தவிர வேறு யாருக்கும் தருவதற்கு எனக்கு 
உரிமை இல்லை. இதுதான் அரசாங்கத் சட்டம்!
இதுதான் அரசாங்க நடைமுறை! அரசுப் 
பணியாளர்களுக்கான இந்தச் சட்டம்தான் 
எம்பிக்களுக்கும். 

எம்பிக்களுக்கு கொம்பு முளைத்து இருப்பதாகவும் 
எம்பிக்கள் தங்களின் பாஸ்வேர்டுகளையும் பிற 
credentialகளையும் யாருக்கு வேண்டுமானாலும் 
கொடுக்கலாம் என்பதாகவும் தற்குறித் தனமாக
வாதாடினார் மெஹுவா. அதாவது அவருக்கு 
சட்டம் தெரியாது என்று சொல்லித் தப்பிக்கப் 
பார்க்கும் முயற்சியே இது. But ignorance of law 
is not an excuse என்பது இந்தியச் சட்டம் மட்டுமல்ல; 
உலகச் சட்டமும் ஆகும்.
   
3) MP Portal மூலம் மொத்தம் 61 கேள்விகளைக் கேட்டுள்ளார் 
மெஹுவா. இந்த 61ல் 50 கேள்விகள் இவருக்குப் 
படியளக்கும் கோடீஸ்வரத் தொழிலதிபர் ஹிரா 
நந்தனியின் வணிகநலன்களை முன்னிறுத்தியவை என்று 
கண்டறியப் பட்டுள்ளது.

மேற்கூறிய மிகத் தீவிரமான கிரிமினல் குற்றங்கள்
அனைத்தும் ஆதாரங்களுடனும் மெஹுவாவின் 
ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் 
ஐயம் திரிபற நிரூபிக்கப் பட்டுள்ளன என்பதால் 
மெஹுவா மொய்த்ராவை மக்களவை உறுப்பினர் 
பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மக்களவையின் 
நன்னெறிக்குழு (Ethics committee) முடிவெடுத்துள்ளது.

எம்பி பதவி நீக்கம் மட்டுமல்ல, மெஹுவா புரிந்த 
தேசத்துக்கு எதிரான கிரிமினல் குற்றங்கள் மிகவும் 
தீவிரமானவை என்பதால், அவரின் குற்றங்களை 
விசாரித்து மத்திய விசாரணை அமைப்புகள் (Central 
Investigative agencies) நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என்றும் நன்னெறிக்குழ முடிவெடுத்து உள்ளது.

அதாவது CBI, RAW, அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய 
புலன் விசாரணை அமைப்புகள் மெஹுவா புரிந்த 
கிரிமினல் குற்றங்களை விசாரித்து தண்டிக்க 
வேண்டும் என்பதே நன்னெறிக் குழுவின் முடிவு.

நன்னெறிக்குழுவின் முதல்கட்ட பரிந்துரைப்படி, 
மெஹுவா மொய்த்ரா எம்பி பதவியில் இருந்து 
மக்களவையால் பதவிநீக்கம் செய்யப் பட்டு
உள்ளார் (expelled).

 அடுத்து, நன்னெறிக்குழுவின் இரண்டாம் கட்ட 
பரிந்துரைப்படி, மெஹுவா மீது CBI மற்றும் 
அமலாக்கப் பிரிவின் விசாரணை தொடங்கும்.
 அதையொட்டி மெஹுவா மொய்த்ரா கைது 
செய்யப்பட்டு திஹார் சிறையில்  அடைக்கப் 
படுவார். நன்னெறிக குழுவின் பரிந்துரைகள் 
முற்றிலுமாகச் செயல்படுத்தப் படும்.

2005ல் நமது நாடாளுமன்றத்தின் 11 எம்பிக்கள் கேள்வி 
கேட்க லஞ்சம் வாங்கினர். 10 மக்களவை எம்பிக்களும் 
ஒரு மாநிலங்களவை எம்பியும் ஆக மொத்தம் 11 பேர். 
இது குறித்து ஏற்கனவே முகநூலில் எழுதி இருக்கிறேன். 
அதைத் தேடி எடுத்து வாசகர்கள் படிக்க வேண்டுமாய்க் 
கேட்டுக் கொள்கிறேன். மக்களவை உறுப்பினர்கள் 10 
போரையும் பதவி நீக்கம் செய்தார்  மார்க்சிஸ்ட் 
கட்சியைச் சேர்ந்த அன்றைய நாடாளுமன்ற சபாநாயகர் 
சோம்நாத் சட்டர்ஜி. அது போல ராஜ்யசபா உறுப்பினரும் 
பதவிநீக்கம் செய்யப் பட்டார்.

சோம்நாத் சட்டர்ஜி 10  எம்பிக்களை பதவிநீக்கம் 
செய்தபோது எந்த நாயும் குரைக்கவில்லை. அனால் 
இன்று ஒரு எம்பி பதவிநீக்கம் செய்யப்பட பிறகு 
போலி முற்போக்கு முகாமில் குரைப்புச் சத்தம் 
கேட்கிறது.

இந்தியாவிலேயே அதிகமான குரைப்புச் சத்தம்
தமிழ்நாட்டின் போலி முற்போக்குகளிடம் இருந்துதான் 
வருகிறது.
போலி நக்சல்பாரிகள்,
போலி இடதுகள்,
போலி முற்போக்குகள்,
அமெரிக்ககோடீஸ்வரர் ஜார்ஜ் சோரசிடம் இருந்து 
எச்சில் காசு பெற்றுக்கொண்ட வேசி ஊடகங்கள் 
(அறம், முறம் போன்ற போலி முற்போக்குகள் ஆகியோர் 
மட்டுமே மெஹுவா மொய்த்ராவுக்கு ஆதரவாகக் 
குரைத்து வருகிறார்கள்.

கணினி சார்ந்த அறிவுடைமை இருந்தால் மட்டுமே 
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டின் போலி நக்சல்பாரி மூடர்களில் 99.99 
சதவீதம் பேருக்கு கணினி குறித்தோ 
Science and Technology குறித்தோ ஒரு இழவும் 
தெரியாது. அவர்கள் மெஹுவாவை ஆதரித்து 
நாயுடன் போட்டியிட்டு நரகலை உண்ணட்டும்.
அது குறித்து நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.
--------------------------------------------------------------------
பின்குறிப்பு-1
மெஹுவா மொய்த்ரா புரிந்த குற்றங்களுக்கு 
குறைந்தபட்சம் ஏழு ஆண்டு சிறை தண்டனை 
கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.

பின்குறிப்பு-2: :
IQ < 110 உள்ளவர்கள் பிறழ்புரிதலைத் தவிர்க்கும் பொருட்டு 
அருள்கூர்ந்து இக்கட்டுரையைப் படிக்காமல் இருந்து 
ஒத்துழைப்புத் தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.
*********************************************************


 ,
 
     
   

       
 
   
   
        

  
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக