திங்கள், 25 டிசம்பர், 2023

 தொலைதொடர்பு மசோதா நிறைவேறியது!
அலைக்கற்றை ஒதுக்கீட்டில் புதிய முறை!
---------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------
முன்குறிப்பு:
போதிய அளவு அறிவியல்-தொழில்நுட்ப அடிப்படை 
வாய்க்கப்பெறாத அன்பர்கள் பிறழ்புரிதலைத் தவிர்க்கும் 
பொருட்டு இக்கட்டுரையைப் படிக்காமல் ஓத்துழைப்பு 
வழங்குமாறு வேண்டுகிறோம்.
-------------------------------------
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொலைதொடர்பு 
மசோதா 2023 நிறைவேறியது. அதன் முக்கிய அம்சங்கள் 
வருமாறு:-

1) Indian Telegraph Act 1885
Indian Wireless Telegraphy Act 1933
Telegraph Wires (Unlawful possession) Act 1950
ஆகிய மூன்று புராதனச் சட்டங்களும்
தொலைதொடர்பு மசோதா நிறைவேற்றத்தைத் 
தொடர்ந்து விடை பெற்றுக் கொண்டன.

2) தேசப் பாதுகாப்பை முன்னிட்டு, எந்த ஒரு 
தொலைதொடர்பு சேவையையோ, நிறுவனத்தையோ,
தொலைதொடர்பு வலைப்பின்னலையோ இந்திய அரசு 
எடுத்துக் கொள்ளும்; எடுத்துக் கொண்டு நடத்தும்;
அல்லது அதன் நடவடிக்கைகளை நிறுத்தும்.

3) தொழில்நுட்ப மேதைமையும் 30 ஆண்டுக்குக் 
குறையாத அனுபவமும் உடைய நிபுணர் தனியார் 
துறையில் இருப்பினும், அவர் டிராய் (TRAI) அமைப்பின் 
தலைவராக நியமிக்கப் படுவார்.

4) தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் 
வாடிக்கையாளரின் பயோமெட்ரிக் அடையாளங்களின் 
அடிப்படையில் சேவை வழங்கும்.

5) தரவுகளின் encryption Data processing, Cyber security
ஆகியவை குறித்து தேவையான விதிமுறைகளை 
அரசு வகுக்கும்.

6) தொலைதொடர்பு என்றால் என்ன என்று இந்த மசோதா 
துல்லியமாக வரையறுக்கிறது. 
   
7) அலைக்கற்றை ஒதுக்கீடு தற்போதைய ஏல 
முறைப்படி (auction) நடைபெறும். இருப்பினும் 
ஒரு சில தனித்தன்மை வாய்ந்த சேவைகளுக்கான 
அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலமுறைப்படி அல்லாமல் 
நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்படும்.
(பார்க்க: அத்தியாயம்-II, ஷரத்து 4(4).
(The Telecom Bill 2023 explicitly states that spectrum allocation 
for telecommunication shall be through auction, whereas for 
purposes listed in Schedule I, it shall be done only through 
administrative process).

8) Spam calls ஒடுக்கப் படுகின்றன. உரிய 
அமைப்பில் DND (Don't disturb) என்ரூ பதிவு 
செய்து கொண்ட வாடிக்கையாளர்கள் உரிய 
பாதுகாப்பைப் பெறுவார்கள்.   
---------------------------------------------------------------
பின்குறிப்பு: 
ஏலமுறை இல்லாமலும் அலைக்கற்றை ஒதுக்கீடு 
செய்யப்படும். இது ஏன்? இது சரிதானா;
ஏலமுறை இல்லாவிடில் ஆ ராசா மேற்கொண்ட 
முறைகேடு ஏற்படும் அல்லவா?

அனைத்துக் கேள்விகளுக்கும் நியூட்டன் அறிவியல் 
மன்றத்தின் பதில்கள் அடுத்த கட்டுரையாக 
வெளியிடப்படும்.  
*********************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக