வெள்ளி, 8 டிசம்பர், 2023

 2024 தேர்தலில் வெற்றி யாருக்கு?
பாஜகவா, காங்கிரசா, ஆட்சி அமைக்கும் கட்சி எது?
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
அரசியல் ஆய்வுக் கட்டுரை! 
---------------------------------------------------------
அண்மையில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை 
ஆராய்வோம். இதில் மிசோரம் மாநிலத்தை நாம் கணக்கில் 
கொள்ள வேண்டாம். மிசோரம் மாநிலத்தின் மொத்த 
மக்கள்தொகை பத்து லட்சமே. முற்றிலும் பழங்குடிகள் 
Scheduled Tribe) நிறைந்த மாநிலம் அது. அங்குள்ள இரு 
மாநிலக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து 
கொண்டிருக்கும் மாநிலம் அது. மொத்தமுள்ள 40 சட்டமன்ற 
இடங்களில் பாஜக இரண்டு இடங்களையும், காங்கிரஸ் 
ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. தேசியக் கட்சிகளின்
செல்வாக்கு இந்த மாநிலத்தில் இவ்வளவுதான்.

மீதி நான்கு மாநில முடிவுகளையும் (மபி, ராஜஸ்தான்,
சட்டிஸ்கர், தெலுங்கானா) ஆராய்ந்தால் 2024 தேர்தலின் 
போக்கு எப்படி இருக்கும் என்று தெரியும். இந்த நான்கில்   
மூன்று வட இந்திய மாநிலங்கள். தெலுங்கானா 
தென்னிந்திய மாநிலம்.

தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்புகள் பலவும் 
சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் 
என்றே எழுதின. மபி, ராஜஸ்தானிலும் காங்கிரசுக்கே 
வாய்ப்புகள் அதிகம் என்றும் கருத்துக் கணிப்புகள் 
தெரிவித்தன. இந்தக் கருத்துக் கணிப்புகள் 
அனைத்துமே அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸ் 
(George Soros)  என்பவரின் பணத்தில் நடத்தப பட்டவை.

ஜார்ஜ் சோரஸ் மோடி எதிர்ப்பாளர். எனவே பாஜகவுக்கு 
எதிராகவே கருத்துக் கணிப்புகள் அமைந்தன. இதில் 
மிகப்பெரிய இழிவு என்னவென்றால், எக்சிட் போல்கள் 
(Exit polls) கூட ஜார்ஜ் சோரசின் காசுக்கு விலை 
போனவையாகவே இருந்தன. தேர்தல் முடிவுகளைத் 
துல்லியமாகக் கணிக்க உதவுபவை எக்சிட் போல்கள்.

48 மணி நேர ஆயுள் மட்டுமே உடைய இந்த எக்சிட் 
போல்கள் உண்மையைப்பிரதிபலிக்க வேண்டும். 
ஆனால் சோர்சின் விருப்பத்தைப் பிரதிபலித்தன
எக்சிட் போல்கள். இவ்வாறு தவறான எக்சிட் போல்களை 
வெளியிட்ட நிறுவனங்களை ஓராண்டு காலமேனும் 
கருத்துக் கணிப்பு வெளியிட இயலாதவாறு தடை 
விதிக்க வேண்டும். இதைத் தேத்தல் ஆணையம் 
செய்ய வேண்டும்.  

மத்தியப் பிரதேசம்!
------------------------------
மபியில் கடும் போட்டி நிலவும் என்றும், தொங்கு 
சட்டமன்றம் அமையும் என்றும் உளறினார்கள் 
விலைபோன கருத்துக் கணிப்புக் கிரிமினல்கள். 
ஆனால் மபியில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு 
பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. 

மபியில் மொத்தமுள்ள 230 இடங்களில் 163 இடங்களில் 
பாஜக வென்றுள்ளது.154 இடங்களில் வென்றால் 
மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆகும். பாஜக 
மூன்றில் இரண்டையும் தாண்டி 9 இடங்களை அதிகம் 
பெற்றுள்ளது. இது 70 சதவீதத்தையும் விட அதிகம்.

மபி 2023  சட்டமன்றம் மொத்த இடம் =230.
பாஜக = 163. (வாக்கு சதவீதம் = 48.55) 
காங் = 66. (வாக்கு சதவீதம் = 40.40)
இடங்களைப் பொறுத்து காங்கிரசை விட பாஜக
97 இடங்கள் அதிகம். வாக்குகளைப் பொறுத்து
பாஜக காங்கிரசை விட 8.15 சதவீதம் அதிகம்.

மூன்று இந்தி மாநிலங்களிலும் முதல்வர் வேட்பாளர் 
என்று யாரையும் பாஜக அறிவிக்கவில்லை. சிவராஜ் 
சிங் சவுஹான் (மபி), வசுந்தரா ராஜ சிந்தியா (ராஜஸ்தான்),
ராமன் சிங் (சட்டிஸ்கர்) ஆகிய முன்னாள் முதல்வர்கள் 
முதல்வர் வேட்பாளர்களாக அறிவிக்கப் படவில்லை.
மோடிக்காகவே வாக்களிக்க வேண்டும் என்று பாஜக
கேட்டுக்கொண்டது. அதை அப்படியே ஏற்றுக்கொண்ட 
மக்கள் மோடிக்காகவே மூன்று மாநிலங்களிலும் 
வாக்களித்தனர்.

ராஜஸ்தான்!
--------------------
ராஜஸ்தானில் மொத்த இடங்கள் 199. பெரும்பான்மைக்கு 
100 இடங்கள் வேண்டும். பாஜக 115 இடங்களைப் பெற்று 
ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 69 இடங்களை 
மட்டுமே பெற்றுள்ளது.

பாஜக = 115 இடம் (வாக்கு சதவீதம் = 41.69)
காங்கிரஸ் = 69 இடம் (வாக்கு சதவீதம் = 39.53)
பாஜக காங்கிரசை விட 46 இடங்கள் அதிகம்.
வாக்குகளைப் பொறுத்து பாஜக காங்கிரசை விட 
2.16 சதவீதம் அதிகம்.

ராஜஸ்தானில் பொதுவாக ஐந்தாண்டுக்கு ஒருமுறை 
ஆட்சி மாறுகிறது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு 
வரும்போதெல்லாம் அது சொந்த பலத்தில் போதிய 
இடங்களைப்  பெறாமல் சுயேச்சைகள் சிறிய கட்சிகளுடன் 
கூட்டுச் சேர்த்தே ஆட்சி செய்துள்ளது. ஆனால் பாஜக 
ஆடசி அமைக்கும்போதெல்லாம், தனது சொந்த பலத்தில் 
பெரும்பான்மையை விட அதிக இடங்களைப் பெற்றே 
ஆட்சி அமைக்கிறது.
  
2008 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி
அமைக்கும்போது, காங்கிரஸ் பெற்ற இடங்கள் 96 மட்டுமே.
காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அப்போது பாஜக 78 இடங்களைப் பெற்று எதிர்க்கடசியாக 
இருந்தது.

ஆனால் 2013ல் பாஜக வென்று ஆட்சி அமைக்கும்போது
பாஜக பெற்ற இடங்கள் 163. Simple majority, Two third majority,
Three fourth majority என்பன அனைத்தையும் தாண்டி 
81 சதவீதப் பெரும்பான்மையை பாஜக பெற்றது.
அப்போது காங்கிரஸ் வெறும் 21 இடங்களில் 
சுருங்கிக் கொண்டது.

கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது 
காங்கிரஸ் பெற்ற இடங்கள் சரியாக 100 மட்டுமே.
அப்போது பாஜக 73 இடங்களைப் பெற்றிருந்தது.
தற்போது 2023ல் பாஜக 115 இடங்களைப் பெற்று 
ஆட்சி அமைக்கிறது.காங்கிரசோ 69 இடங்களில் 
தன்னைச்சுருக்கிக் கொண்டது.

சட்டிஸ்கர்!
----------------
சட்டிஸ்கரில் பாஜக ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸிடம் 
இருந்த ஆட்சியை பாஜக பறித்து விட்டது. சட்டிஸ்கரில்  
மொத்த இடங்கள் 90. பெரும்பான்மை பெறுவதற்கு 
46 இடங்கள் வேண்டும். பாஜக 54 இடங்களைப் பெற்று
ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் 35 இடங்களோடு சுருங்கிக் 
கொண்டது.

பாஜகவின் வாக்கு சதவீதம் = 46.27.
காங்கிரசின் வாக்கு சதவீதம் =  42.23.
பாஜக காங்கிரசை விட 4.04 சதவீதம் வாக்குகள் அதிகம்.
காங்கிரசை விட 19 இடங்கள் அதிகம்.

தெலுங்கானா!
--------------------
இறுதியாக தெலங்கானாவைப் பார்ப்போம். தென்னிந்திய 
மாநிலங்களில் கர்நாடகம் தவிர பிற இடங்களில் 
பாஜகவுக்கு செல்வாக்கு மிகவும் குறைவு. பாண்டிச்சேரி 
யூனியன் பிரதேசத்தில் பாஜக மற்றும் மாநிலக் கட்சியின் 
கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

தெலுங்கானாவில் தொடர்ந்து இரண்டு முறையாக 
ஆட்சியில் இருந்த BRS கட்சியிடம் இருந்து காங்கிரஸ் 
ஆட்சியைப் பறித்திருக்கிறது. தெலுங்கானாவில் 
மொத்த இடங்கள் = 119. பெரும்பான்மைக்குத் தேவை 
60 இடங்கள். காங்கிரஸ் 64 இடங்களைப்  பெற்று
ஆட்சி அமைக்கிறது. BRS கட்சி 39 இடங்களைப் பெற்று
எதிர்க்கடசியாக அமர்கிறது. ஓவாய்சியின் மஜ்லிஸ் 
கட்சி 7 இடங்களைப் பெற்றுள்ளது.

காங்கிரசின் வாக்கு சதவீதம் = 39.40 ஆகும்.
BRS கட்சியின் வாக்கு சதவீதம் =  37.35 ஆகும்.
ஆட்சியை இழந்த BRS கட்சிக்கும், ஆட்சியைப்
பிடித்த காங்கிரசுக்கும் இடையிலான வாக்கு 
வித்தியாசம் வெறும் 2.05 சதவீதம்தான்.  
பாஜக இங்கு 8 இடங்களைப் பெற்றுள்ளது. பெற்றுள்ள 
வாக்கு சதவீதம் = 13.90 ஆகும். ஏழு இடங்களைப் பெற்றுள்ள 
மஜ்லிஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 2.22 மட்டுமே.   

மேலே பகுத்தாய்ந்த மூன்று வட இந்திய மாநிலங்களிலும் 
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இப்போதைய நிலைமையே 
நீடிக்கும்.
மபியில் மக்களவை இடங்கள் = 29.
ராஜஸ்தானில் மக்களவை இடங்கள் =  25.
சட்டிஸ்கரில் மக்களவை இடங்கள் = 11.
தெலுங்கானாவில் மக்களவை இடங்கள் = 17. 

2024 தேர்தலில் பாஜகவுக்கு மபியில் 24; ராஜஸ்தானில் 20;
சட்டிஸ்கரில் 8;ஆக மூன்றிலும் சேர்த்து 52 இடங்கள் 
பாஜகவுக்கு கிடைக்கும். 50 இடங்களை பாஜக 
பெறுவது உறுதி. 

தெலுங்கானாவில் BRS கட்சியுடன் 
கூட்டணி அமைந்தால் (அமைய வாய்ப்பு அதிகம்)
இங்கு பாஜக+ BRS கூட்டணி 10 இடங்களையேனும் 
பெறும்.     
    
ஆகவே, எப்படிப் பார்த்தாலும் காங்கிரசுக்கு இந்த நான்கு 
மாநிலங்களிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பெரிதாக 
ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. இந்த நான்கு 
மாநிலங்களிலும் உள்ள மொத்த மக்களவை இடங்கள் = 82.
இந்த 82ல் பாஜக 60 இடங்களையும் காங்கிரசும் பிற 
கட்சிகளும் சேர்ந்து 22 இடங்களையும் பெறும்.

அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் 
நடப்பதற்கு முன்னாள் உள்ள நிலைமை இது.
கும்பாபிஷேகம் நடந்து முடிந்து விட்டால் வட 
மாநில இடங்களில் 90 சதவீதம் இடங்களை பாஜக 
பிடிடித்து விடும் என்கிறார்கள் வட இந்திய அரசியல் 
விமர்சகர்கள்.
---------------------------------------------------------------------
தொடரும்....
காங்கிரஸ் தோற்பதும் பாஜக வெற்றி பெறுவதும் ஏன்? என்ற பகுதி 
அடுத்த கட்டுரையாக வெளிவரும்.
*********************************************
 


   




    

  
 
  

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக