ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

ஆகஸ்ட் 9இல் இரண்டாவது அணுகுண்டு வீசப் பட்ட பின்னும் 
உடனடியாக ஜப்பான் சரண் அடையவில்லை. போரை நீட்டித்துக் 
கொண்டே போனது. இறுதியில் ஆகஸ்ட் 15 அன்றுதான் ஜப்பான் 
பேரரசர் "சரண் அடைகிறோம்" என்று அறிவிக்கிறார்.
**
லிட்டில் பாய் போடப்பட்ட உடனே ஜப்பான் சரண் அடைந்து 
இருந்தால், நாகசாகி மீது பேட்மேன் குண்டு போடப் பட்டு 
இருக்குமா? ஜப்பானின் போர்வெறி என்ன சாதாரணமானதா?
ஜெர்மனியும் இத்தாலியும் சரண் அடைந்த பின்னும் போரைத் 
தொடர்ந்து நடத்தியது ஜப்பான் என்றால், ஜப்பானின் நாசகர 
கொலைவெறி கட்டுப் படுத்த முடியாமல் அல்லவா இருந்தது.
**
1945 ஏப்ரல் 27 அன்று முசோலினி கொல்லப் பட்டான். இத்தாலி 
சரண் அடைந்தது. 1945 ஏப்ரல் 30 அன்று ஹிட்லர் தற்கொலை 
செய்து கொண்டான். ஜெர்மனி சரண் அடைந்தது.
**
அச்சு நாடுகள் (AXIX POWERS)  மூன்றில், ஜெர்மனியும் 
இத்தாலியும் சரண் அடைந்த பிறகும் கூட, 
சரண் அடைந்து மூன்று மாதங்கள் ஆன  பிறகும் கூட 
ஜப்பானின் போர்வெறி நிற்க வில்லை. எனவேதான் 
அணுகுண்டு போடப்பட்டது. 
**********************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக