இப்போதைய சூரியனை எப்போது பார்க்க முடியும்?
எப்போதுமே பழைய சூரியனைத் தான் பார்க்க வேண்டுமா?
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------------------
சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் எவ்வளவு?
பள்ளிக் குழந்தைகளைக் கேட்டால் சரியான விடையைச்
சொல்வார்கள். அது 15 கோடி கி.மீ என்பதே. வானவியலில்
இதை, இந்த 15 கோடி கிலோ மீட்டரை வானியல் அலகு,
AU அதாவது Astronomical Unit என்பார்கள். சூரியனுக்கும்
பூமிக்கும் இடையிலான தூரமே 1 AU ஆகும்.
**
உங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வானத்தைப்
பாருங்கள். பகலில் பாருங்கள். சூரியனின் ஒளியைப்
பார்க்கிறீர்கள். நீங்கள் பார்க்கும் சூரிய ஒளி பழைய ஒளியே.
அதாவது, அந்த நிமிடத்துச் சூரியனை நீங்கள் பார்க்கவில்லை.
எட்டு நிமிடங்களுக்கு முன்பு இருந்த பழைய சூரியனைத்தான்
நீங்கள் பார்க்கிறீர்கள்.
**
எந்த நேரத்தில், அதாவது எந்த நொடியில் பார்க்கிறீர்களோ,
அந்த நொடியில் உள்ள சூரியனைப் பார்க்க முடியாதா?
முடியாது; முடியவே முடியாது. ஏன் இப்படி?
**
சூரியனில் இருந்து புறப்படும் வெளிச்சமானது பூமியை
வந்தடைய எட்டு நிமிடங்கள் ஆகி விடுவதால், நம்மால்
எட்டு நிமிடங்களுக்கு முன்பு உள்ள பழைய சூரியனைத்தான்
பார்க்க முடிகிறது.
**
இதை நம்ப முடியவில்லையா? சந்தேகம் ஏற்படுகிறதா?
கவலை வேண்டாம்; சொல்லப்பட்ட செய்தி சரியா,
இல்லையா என்பதை கணக்குப் போட்டுப் பார்த்து
எது சரி என்று கண்டு பிடித்து விடலாம். இந்தக் கணக்கை
எவரும் போடலாம்; ஆறாங்கிளாஸ் கணக்குத்தான்.
**
தூரம், காலம், வேகம் இம்மூன்றையும் இணைக்கும் ஒரு
சூத்திரம் உங்களுக்குத் தெரியும். உண்மையில், இது ஒரு
Universal formula.
**
தூரம் = வேகம் X காலம். (Distance = speed x time)
Therefore, காலம் = தூரம் divided by வேகம்
சூரியன்-பூமி தூரம் = 1 AU = 150 000 000 km
ஒளியின் வேகம் = 300 000 km per second
Therefore, காலம்= தூரம் divided by வேகம்
= 150 000 000 divided by 300 000 second
= 500 second = 8.33 நிமிடம்.
**
ஆக, சூரியனில் இருந்து பூமிக்கு ஒளியானது வந்து சேர
8.33 நிமிடங்கள் ஆகிறது.
**
எனவே, எட்டு நிமிடத்துக்கு முந்திய சூரியனைத்தான் நம்மால்
பார்க்க முடியும். சரி, அந்த நொடியின் சூரியனை அந்த
நொடியிலேயே பார்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய
வேண்டும்?
**
ஒன்று: ஒளியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். எவ்வளவு
அதிகரிக்க வேண்டும்? கணக்குப் போட்டுப் பாருங்கள்.
அறிவியல் கட்டுரையைப் படிப்பது என்பது வெறுமனே
வாசிப்பது மட்டுமல்ல; கணக்குப் போட்டுப் பார்க்கவும்
வேண்டும். ஆனால், ஐன்ஸ்டின் வகுத்த சிறப்புச் சார்பியல்
கொள்கைப்படி, ஒளியின் வேகத்தை விட அதிகமாக
எந்த வேகமும் கிடையாது. அதாவது, நொடிக்கு
மூன்று லட்சம் கிலோ மீட்டர் என்பதை விட அதிக வேகம்
இந்தப் பிரபஞ்சத்திலேயே கிடையாது. எனவே இந்த
வேகத்தை அதிகரிக்க வாய்ப்பே இல்லை.
**
அடுத்த வாய்ப்பு: நாம் சூரியனுக்கு மிகவும் கிட்டத்தில்
போக வேண்டும். எவ்வளவு கிட்டத்தில்? சூரியனுக்கும்
நமக்கும் உள்ள தூரம் இரண்டரை லட்சம் கிலோ மீட்டர்
என்று சொல்லும் அளவுக்குக் கிட்டே போக வேண்டும்.
(தற்போது சூரியனுக்கும் நமக்கும் உள்ள தூரம்
15 கோடி கிலோ மீட்டர்.) அவ்வளவு கிட்டத்தில் போக
முடியாது. ஏனெனில், சூரிய வெப்பம் நம்மை எரித்துச்
சாம்பலாக்கி விடும்.
**
ஆனாலும், கற்பனையில் போகலாம். பீனிக்ஸ் பறவை
போகிறது அல்லவா!
******************************************************************
பின்குறிப்பு: In SI units, no plural form of the units is permitted. We
wrote correctly as second.So please don't write as seconds. For accurate
values, please refer the appropriate tables.
--------------------------------------------------------------------------------------------------------
Like   Comment