புதன், 12 ஆகஸ்ட், 2015

கற்பனைக் காலம் (IMAGINARY TIME)
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் நம் நாட்டில் இருந்தனர்
என்று நாம் பெருமை அடைகிறோம். ஆயினும் அவர்களில்
ஒருவரேனும் கற்பனைக் காலம் பற்றி அறிந்திருக்க முடியாது.
ஏனெனில், கற்பனைக் காலம் என்பது நவீன அறிவியலின்
கண்டுபிடிப்பு. அதாவது, ஸ்டீபன் ஹாக்கிங் என்ற
விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு.
**
கற்பனை எண்கள் (IMAGINARY NUMBERS) பற்றி அறிந்து
இருந்தால், கற்பனைக் காலம் பற்றி எளிதில் புரிந்து
கொள்ளலாம். மேனிலைப் பள்ளிக் கணிதப் பாடங்களில்
கற்பனை எண்கள் மற்றும் கலவை எண்கள் (COMPLEX NUMBERS)
இடம் பெற்றுள்ளன. Square root of minus 1 is equal to i where i stands
for imaginary என்பதைப் பள்ளி மாணவர்கள் அறிவர்.
**
மைனஸ் 16இன் வர்க்க மூலம் 4i ஆகும். இந்த 4i என்பதில்
உள்ள i என்பது கற்பனை எண் ஆகும். கற்பனை எண் 
போன்றதே கற்பனைக் காலம் ஆகும். மெய்யான காலம்
X அச்சிலும் (கிடைமட்ட அச்சு) கற்பனைக் காலம் Y அச்சிலும்
உள்ள வரைபடத்தை மனதில் கருதவும். ஆதிமத்தில் (ORIGIN)
இருந்து வலப்புறம் எதிர்காலமும், ஆதிமத்தில் இருந்து
இடப்புறம் இறந்த காலமும் அந்த வரைபடத்தில் அமைந்து
இருக்கும். Y அச்சில் (செங்குத்து அச்சு) கற்பனைக் காலம்
அமைந்திருக்கும்.  
**
அது சரி, கற்பனைக் காலம் என்ற ஒன்று உண்மையில் 
இருக்கிறதா அல்லது வெறும் கற்பனைதானா? .
கி.பி 1554 என்றோ 15.08.2015 என்றோ கூறும்போது அது 
உண்மை என்று புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், 
கி.பி மைனஸ் 1554 என்று எந்த ஆண்டும் கிடையாது.
ஆகஸ்டு 15 என்பது போல், ஆகஸ்டு மைனஸ் 15 என்று 
எந்த ஒரு தேதியும் கிடையாது. 8இல் இருந்து 5ஐக் கழித்தால் 
3 கிடைக்கிறது. அதுபோல, 5இல் இருந்து 8ஐக் கழித்தால் 
மைனஸ் 3 கிடைக்கிறது. எனவே, நெகடிவ் நம்பர்கள் 
இது போன்ற இடத்தில் உயிர் பெறுகின்றன. அது போலவே,
கற்பனைக் காலமும் குவாண்டம் இயற்பியலில் உயிர் 
பெறுகிறது.
**
சுருங்கக் கூறின், நெகடிவ் நம்பர்களைப் போலவே,
கற்பனைக் காலமும் ஒரு கணிதக் கட்டுமானமே. 
(A mathematical construction).
******************************************************************    
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக