புதன், 9 செப்டம்பர், 2015

1) கோரம், கனவட்டம் என்பவை குதிரைகள் அல்ல.
கோரம் என்பது சோழ அரசன் அமரும் சிம்மாசனம் ஆகும்;
கனவட்டம் என்பது பாண்டிய அரசன் அமரும் சிம்மாசனம் ஆகும்.
**
2) சோழனுக்குப் பெண் பார்க்கப் போனபோது ஒட்டக்கூத்தர்
இப்படிப் பாடினார் என்பதற்கு எவ்வித வரலாற்று ஆதாரமும்
இல்லை. ஓட்டக்கூத்தரின் பாடல் மட்டுமே உண்மை; பாடல்
யாத்தமை குறித்த சூழல் முற்றிலும் கற்பனையே.
**
3) ஒட்டக்கூத்தரின் இப்பாடலுக்கு மறுமொழியாக, பாண்டி நாட்டாரான  புகழேந்திப் புலவர் பாடிய பாடலை இங்கு குறிப்பிடாமல்
ஒட்டக்கூத்தரின் பாடல் முழுமை பெறாது.
**
4) திரு நெடுமால் அவதாரம் சிறுபுலியோ அம்மானை?
சிவன் முடியில் ஏறுவதும் செங்கதிரோ அம்மானை?
கரை எதிர் ஏடு ஏறியதும் காவிரியோ அம்மானை?
....      ....      .....      ......       .....    .....      .....     .....     .....     ......     
---------------------------------------------
கோரத்துக்கு ஒப்பா?கனவட்டம் அம்மானை!
கூறுவதும் காவிரிக்கு வைகையோ? அம்மானை!
ஆருக்கு வேம்புநிகர் ஆகுமோ? அம்மானை!
ஆதித்தனுக் குநிகர் அம்புலியோ? அம்மானை!
வீரர்க்குள் வீரன்ஒரு மீனவனோ? அம்மானை!
வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ?அம்மானை!!
ஊருக்கு உறந்தைநகர் கொற்கையோ? அம்மானை!
ஒக்குமோ சோணாட்டிற் பாண்டிநாடு? அம்மானை! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக