புதன், 9 செப்டம்பர், 2015

சாரு  நிவேதிதா ஒரு பின் நவீனத்துவ எழுத்தாளர்!
ஜீரோ டிகிரியில் எழுதும் எழுத்தாளர்!
----------------------------------------------------------------------------------
சாரு  நிவேதிதா அண்மையில் சற்றுப் பிரபலமாகி 
இருக்கிறார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும் 
மனநிறைவையும் தருகிறது.
**
பின் நவீனத்துவம் குறித்தும் அதன் தீமைகள் குறித்தும் 
கரடியாய்க் கத்தி வருகிறோம். என்றாலும் அந்தக் கருத்துக்கள் 
வாசகர்களைச் சென்று அடையாமலும், சென்று அடைந்தாலும் 
புரிந்து கொள்ளப் படாமலும் இருக்கின்றன. இந்த நிலையில் 
சாரு  நிவேதிதா வருகிறார். இனி எங்கள் வேலை சுலபம்.
சாரு  நிவேதிதா எழுதுவதைப் படித்தாலே போதும்.
பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பது எளிதில் 
விளங்கி விடும். நாங்கள் ஏன் அதை எதிர்க்கிறோம் 
என்பதும் விளங்கி விடும்.
**
சாருவின் ஜீரோ டிகிரி நாவலைப் படியுங்கள். சாரு 
ஒரு 'தலை சிறந்த' பின் நவீனத்துவ எழுத்தாளர். ( இங்கு 
'தலை சிறந்த' என்பதை அதன் சரியான அர்த்தத்தில் 
புரிந்து கொள்ளுங்கள்).
**
"இதுவரை எழுதப்பட்ட எழுத்துக்கள் அனைத்துமே 
ஒரு பக்கச் சார்பான எழுத்துக்கள். அதாவது inclined writings.
எழுத்தாளன் என்பவன் எந்த விதமான சார்பும் இல்லாமல் 
எழுத வேண்டும். அப்படி எழுதப்படும் எழுத்து ஜீரோ டிகிரி 
எழுத்து என்று அழைக்கப் படும் .
இவ்வாறு சொல்கிறது பின் நவீனத்துவம்.
**
பின் நவீனத்துவம் சொல்லும் இந்தக் கோட்பாட்டைப் 
பின்பற்றித்தான், சாரு தமது ஜீரோ டிகிரி நாவலை 
எழுதினார்.
மேலும் அவரின் எக்சிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும் 
என்ற நூலையும் படியுங்கள். பின் நவீனத்துவம் முன்வைக்கும் 
இலக்கியக் கோட்பாடுகளை விளங்கிக் கொள்ளலாம்.
**
சாரு பின் நவீனத்துவத்தின் பிரதிநிதி. அவரை எதிர்ப்பதை 
விட அதிகமாக பின் நவீனத்துவத்தை எதிர்க்க வேண்டும்.
அதற்கு பின் நவீனத்துவம் என்றால் என்ன என்பதைப் 
புரிந்து கொள்ள வேண்டும்.
**
பின் நவீனத்துவத்தைப் பகடி செய்து (பகடி = கிண்டல்)
அண்மையில் மூன்று கவிதைகளை எழுதி இருக்கிறேன்.
அதைப் படியுங்கள், எனது டைம்லைனில். இவை அனைத்துமே 
esoteric தன்மையிலான கவிதைகள். வேறு வழியில்லை.
அதிகமானவர்கள் படிக்கப் படிக்க esoteric தன்மை மறைந்து விடும்.

************************************************************ 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக