செவ்வாய், 12 டிசம்பர், 2017

மரண தண்டனை வரவேற்கப்பட வேண்டியதே!
மரண தண்டனை குறித்த மார்க்சியப் பார்வை!
-----------------------------------------------------------------------------------
1) மார்க்சிய லெனினியம் மரண தண்டனையை
ஏற்கிறது; வரவேற்கிறது. சட்டத்தில் இருக்க வேண்டிய
தண்டனையே மரண தண்டனை என்று மார்க்சியம்
கருதுகிறது.

2) உலகில் எல்லா கம்யூனிச நாடுகளிலும் மரண
தண்டனை இன்று வரை நடப்பில் இருக்கிறது.
நாளையும் தொடரும்.

3) மரண தண்டனை கூடாது என்பது பிற்போக்கான
தாராள முதலாளித்துவக் கருத்து.

4) நிலவுடைமைச் சமூக அமைப்பின் கூறுகள் உள்ள
இந்தியாவில் மரண தண்டனை கண்டிப்பாக
இருக்க வேண்டும். அதை நீக்கக் கூடாது.

5) விடுதலைப் புலிகள், PLO (பாலஸ்தீன விடுதலை இயக்கம்)
உள்ளிட்டா எல்லா விடுதலை இயக்கங்களிலும்
மரண தண்டனை நடப்பில் இருந்தது மற்றும்
இருக்கிறது.

6) சோவியத் நாட்டிலும் சீனாவிலும் எதிர்ப்
புரட்சியாளர்கள் (counter revolutionaries) தூக்கில்
இடப்பட்டார்கள். வேறு வழி இல்லை.

7) இந்தியாவில் சாரு  மஜூம்தார் தலைமையில்
வெடித்தெழுந்த நக்சல்பாரி இயக்கம், வர்க்க
எதிரிகளை அழித்தொழிப்பது (படுகொலை செய்வது)
என்ற முடிவை எடுத்து நடைமுறைப் படுத்தியது.

8) எனவே மரண தண்டனை வேண்டும் என்பதே
மார்க்சியக் கோட்பாடு ஆகும்.

9) மரண தண்டனையை எதிர்ப்பது என்பது இழிந்த
குட்டி முதலாளித்துவ, தாராள முதலாளித்துவக்
கோட்பாடு ஆகும்.

10) நாடெங்கும் பின்நவீனத்துவக் கயவர்கள்
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று
கூச்சலிட்டு வருகின்றனர். இவர்களில் நாலைந்து
பேரைப் பிடித்து தூக்கில் ஏற்றினால் மட்டுமே
இந்தக் கீழ்மை முடிவுக்கு வரும்.

11) மரண தண்டனை கூடாது என்று சொல்பவன்
எவனும் மார்க்சியவாதி அல்ல. மரண
தண்டனையை ஆதரிப்பவனே மார்க்சியவாதி.

12) மரண தண்டனை வேண்டாம் என்று சுயஇன்பம்
,அனுபவிப்பதை  அனுமதிக்க முடியாது.

13) இவையே மரண தண்டனை குறித்த
கோட்பாட்டு ரீதியான மார்க்சியப் பார்வை ஆகும்.
************************************************************** .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக