சனி, 9 டிசம்பர், 2017

குரோதம் எதுவும் இல்லை. மெய்யான கள நிலவரத்தை எழுதுகிறேன். குரோதம் என்று நீங்கள் கூறுவது
முற்றிலும் நான் சென்ஸ். இந்தப் பதிவு கூறுகிற
விஷயத்தின் உண்மை சுடுகிறது போலும்! இதை
ஜீரணிக்க இயலாமல் அவதூறை அள்ளித்
தெளிக்க வேண்டாம்.

விடுதலைச் சிறுத்தைகளை தன கூட்டணியில் சேர்க்க
திமுக விரும்பவில்லை என்பது என்னுடைய கருத்து அல்ல.
அது திமுகவின் கருத்து. திமுக உயர்மட்டத் தலைமை,
இரண்டாம் கட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள்.
தொண்டர்கள் என்று அனைவரின் கருத்தாக
அது இருக்கிறது. இது உங்களுக்கு ஏற்புடையதாக
இல்லை என்றால், நீங்கள் போய் அறிவாலயத்தில்
முறையிடலாம். இங்கு என்னிடம் பேசுவதில்
பயனில்லை.இது ஏதோ என்னுடைய கருத்து என்பது
போலப் பேசுவது அறியாமை ஆகும். 


திருமாவளவன் ஒரு குட்டி முதலாளித்துவ
பிழைப்புவாதத் தலைவர் (petty bourgeois careerist).
பிழைப்புவாதம் என்பது எப்போதுமே நேர்மைக்கு
எதிரானது. இங்கு நேர்மை என்பது கொண்ட
கொள்கையில், ஏற்றுக்கொண்ட நிலைப்பாட்டில்
உண்மையாக இருப்பது என்று பொருள்.
2016 சட்ட மன்றத் தேர்தலில் திமுக ஊழல் கட்சி
என்று கூறி மநகூவை ஆரம்பித்த திருமாவளவன்
இன்று, திமுக தன்னுடைய வேட்பாளரை
அறிவிப்பதற்கு முன்னாலேயே வலிந்து போய்
ஆதரவு கொடுக்கிறார். இதுதான் நேர்மையா?
மநகூ என்னாச்சு? ஏன் அதற்கு கருமாதி செய்தீர்கள்
என்று மக்கள் கேட்கக் கூடாதா?
**
2016ல் திமுக எதிர்ப்பு. 2017ல் திமுக ஆதரவு?
இதற்கு என்ன விளக்கம் என்று மக்கள்
கேட்கத்தான் செய்வார்கள். இதில் எங்கே
நேர்மை இருக்கிறது?
**
ஆனால் மணிசங்கர் ஐயர் அப்படியல்ல. அவரின்
கொள்கை பார்ப்பனீயம். அவர் தன் கொள்கையை
ஒருபோதும் வீட்டுக் கொடுக்க மாட்டார். அவர்
என்றாவது பார்ப்பனீயத்தை விட்டுக் கொடுத்தார்
என்று சொல்ல முடியுமா?
**
எதிரி தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக
இருக்கும்போது நாமும் அதுபோல உறுதியாக
இருக்க வேண்டாமா?
**
எனவே கொள்கையில் நேர்மையற்ற எவர்
ஒருவரையும் நேர்மையாளர் என்று கூற இயலாது.

   











வன்மம். உளறல் என்றெல்லாம்
இங்கு வந்து எழுத வேண்டாம். இந்தப் பதிவு
உங்களுக்குப் புரியவில்லை என்றால் புரிந்து கொண்டு
அதன் பிறகு கருத்தை எழுதவும்.
**
தேர்தல் களத்தில் அதிமுக அரசின் ஊழலும்
கையாலாகாத தன்மையும் பேசுபொருளாக இருந்தன.
திருமாவளவனின் இந்தப் பேச்சுக்குப் பிறகு,
அதிமுகவும் பாஜகவும் ஆதாயம் அடைகின்றன.
திமுக ஒரு இந்து எதிர்ப்புக் கட்சி என்ற பிரச்சாரம்
இவர்களால் கொண்டு செல்லப் படுகிறது.
**
தினமும் தொகுதிக்குச் செல்கிறேன். ஸ்கூட்டரில்
10 நிமிடப் பயணத்தில் தொகுதி வந்துவிடும்.
எதை எந்த நேரத்தில் பேசுவது என்று ஒரு விவஸ்தை
வேண்டாமா?       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக