செவ்வாய், 12 டிசம்பர், 2017

அடுத்து அமையும் திமுக அமைச்சரவையில் 
உதயநிதிக்கு ஒரு அமைச்சர் பதவி
வழங்க வேண்டுமென வைகோ
ஸ்டாலினிடம் கோரிக்கை! ஸ்டாலின் மந்தஹாசம்!

வைகோ மதுரையில் நடத்தும்
தமிழர் மான உணர்வு எழுச்சி மாநாட்டை
துர்கா ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
ஏற்பாட்டில் வைகோ தீவிரம்!

ஜனவரியில் வைகோ அமெரிக்கா செல்கிறார்!
ஆஸ்கார் அதிகாரிகளை சந்தித்து
உதயநிதிக்கு ஆஸ்கார்  வழங்க
தீவிர முயற்சி மேற்கொள்கிறார்!

உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதையா!
--------------------------------------------------------------------
ஆர்கே நகர் தேர்தல் பரப்புரை மேடையில்
நிகழ்ந்த காட்சியும் அதன் மாட்சியும்!
செயல் தலைவரின் வேட்டியில் தேநீர்க்கறை
படித்ததும் துடிதுடித்துப்போன வைகோ
தானே அதைத் துடைத்து விடுகிறார்!
அருகில் நமக்கு இந்த வாய்ப்பு
கிடைக்கவில்லையே என்று
ஏக்கப் பெருமூச்சு விடும்
இந்தியக் கம்யூனிஸ்ட் முத்தரசன்!
***********************************************
அருள் கூர்ந்து சினிமா உதாரணங்களை இங்கு
எழுத வேண்டாம். என்னால் புரிந்து கொள்ள
முடியாது. நான் சினிமா பார்ப்பதில்லை.
இது வைகோ அவர்களின் அரிய செயல்களைப்
பாராட்டும் பதிவு. எனவே வைகோவை
பாராட்டி எழுதப்படும் பின்னூட்டங்கள் மட்டுமே
இங்கு வரவேற்கப் படுகின்றன.
   

திமுகவை ஆதரிக்குமாறு
தமிழகப் பாதிரியார்களும்
இந்திய, வெளிநாட்டுப் பாதிரியார்களும்
இட்ட கட்டளைப்படியே வைகோ திமுகவை
!ஆதரிக்கிறார்!
     

வைகோ திமுகவை ஆதரிப்பதன்
உள்  மர்மம் என்ன?
===================================
1) வைகோ பணம் வாங்கிக் கொண்டு திமுகவை
ஆதரிக்கிறார் என்பதில்  உண்மை இல்லை.
திமுக பணம் கொடுக்கிற கட்சி அல்ல.
கலைஞர் யாருக்கும் காசு கொடுக்க மாட்டார்
என்பது உலகறிந்த செய்தி.

2) வைகோ திமுகவிடம் பணம் வாங்கவில்லை
என்று அடித்துக் கூறுகிறேன்.(நன்கு கவனிக்கவும்:
திமுகவிடம்)  


3) கிறிஸ்துவத் தலைமைப் பீடம் தந்த
நெருக்கடியின் விளைவாகவே வைகோ
திமுகவிடம் சரண் அடைந்தார். திமுகவானது
பாஜக பக்கம் சென்று விடாமல் பார்த்துக்
கொள்ளும் பொறுப்பும் வைகோவிடம்
ஒப்படைக்கப் பட்டுள்ளது.

4) தமிழக, இந்திய மற்றும் வெளிநாட்டுப்
பாதிரியார்கள் வைகோவிடம் திமுகவை
ஆதரிப்பதன் மூலம் பாஜக தமிழகத்தில்
பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முடியும்
என்றும் எனவே வைகோ திமுகவை
ஆதரிக்க வேண்டும் என்றும் கட்டளை
இட்டுள்ளனர்.

5) பாதிரியார்களின் கட்டளையை ஏற்ற வைகோ
அதன்படியே திமுகவை ஆதரிக்கிறார்.

6) மோடி பிரதமர் ஆனதும், மதவாத பாஜக
செல்வாக்குப் பெற்று வருவது, பிற மதவாத
சக்திகளுக்கு கவலை அளிக்கும் விஷயம் ஆகும்.
எனவே இந்து மதவாத பாஜகவை எதிர்த்து
கிறிஸ்துவ மதவாத சக்திகள் நடத்திய
காய் நகர்த்தலின் விளைவே வைகோவின்
திமுக ஆதரவு.
*****************************************************    

தோழர்களுக்கு,

1) மார்க்சும் எங்கல்சும் மதம் பற்றி என்ன சொல்லி
இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டும்
பணியை மட்டுமே என்னுடைய கட்டுரை செய்கிறது. .

2) என்னுடைய கட்டுரை விமர்சனக் கட்டுரை அல்ல.

3) மார்க்ஸ்  எங்கல்ஸ் இருவரும் முதல் மூல ஆசான்கள்.
அவர்களின் கருத்து என்ன என்பதைக்  கூட தோழர்கள்
அறியாமல் இருக்கும்  சூழலில், விமர்சனம் எதுவும்
செய்ய இயலாது.

4) எங்கல்ஸ் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று
நான் சொன்னதுமே பலர் அதிர்ச்சியில் மூர்ச்சை
ஆகி விட்டார்கள் என்பது எனக்கு மிகுந்த
வருத்தத்தைத் தருகிறது.

4) முதலில் மார்க்ஸ் எங்கல்ஸ் என்ன சொன்னார்கள்
என்பதைத் தோழர்கள் தெரிந்து கொள்ளட்டும்
என்ற ஒரே நோக்கத்துடன், அதைத் தெரியப்
படுத்தும் வேலையை மட்டுமே நான் செய்து
வருகிறேன். 
5) இதை அனைத்துத் தோழர்களின் கவனத்துக்கும்
கொண்டு வருகிறேன். நன்றி.வணக்கம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக