திங்கள், 11 டிசம்பர், 2017

"அடிமைகளின் மதமாகவே கிறிஸ்துவம்
முதலில் தோன்றியது. அது அடிமைகளை
விடுதலை செய்தது". இதைக் கூறியவர் யார்?
இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
-------------------------------------------------------------
இதைக் கூறியவர் மார்க்சிய மூல ஆசான்களில்
ஒருவராகிய பிரடெரிக் எங்கல்ஸ். கூறிய
ஆண்டு 1894. தமது இறப்புக்கு ஓராண்டுக்கு முன்பு
இதைக் கூ றினார். ஆரம்ப காலக் கிறிஸ்துவத்தின்
வரலாறு என்ற நூலில் இவ்வாறு கூறியுள்ளார்.
(On the history of early Christianity). 
-----------------------------------------------------------------------------------
காரல் மார்க்ஸ் அப்படிக் கூறவில்லை!

மதம் பற்றி மூல ஆசான்கள் மார்க்ஸ் எங்கல்ஸ்!
-------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------------------
"மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிர்களின் நிம்மதிப்
பெருமூச்சு. இதயமற்ற உலகில் ஓர் இதயம். மானுட
சாரமற்ற நிலைமைகளில் மானுட சாரம். மதம்
மக்களின் வலியை மறக்கடிக்கும் மரப்பு மருந்து." 

இதுதான் மதம் பற்றி மார்க்சிய மூல ஆசான்
காரல் மார்க்ஸ் கூறியது. மார்க்ஸ் ஜெர்மன்
மொழியில் இதைக் கூறினார். அதன் ஆங்கில
மொழிபெயர்ப்பு கீழே தரப்பட்டு உள்ளது.

"Religion is the sigh of the oppressed creature, the heart of the
heartless world, and the soul of the soulless conditions.
It is the opium of the people."

மார்க்சின் இந்த ஆங்கில வாக்கியம் இதுவரை
மோசமாகவே தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு
வந்துள்ளது. அதன் சரியான மொழிபெயர்ப்பு
இக்கட்டுரையின் தொடக்கத்தில் கொடுக்கப்
பட்டு உள்ளது.(மொழிபெயர்ப்பு: இக்கட்டுரை
ஆசிரியர்).

மார்க்ஸ் இதைக் கூறியது 1843 டிசம்பரில்.
ஹெகல் எழுதிய உரிமையின் தத்துவம் என்ற
நூலின் மீதான விமர்சனமாக மார்க்ஸ் எழுதிய
நூலில் மதம் பற்றிய பிரசித்தி பெற்ற
இந்த வாக்கியம் எடுக்கப்பட்டு உள்ளது.
(பார்க்க: A contribution to the critique of Hegel's Philosophy
of Right: Karl Marx)

"மதம் மக்களுக்கு அபின் போன்றது" என்று மார்க்ஸ்
கூறினார் என்பதாக மார்க்சியத்தை சரியாகக்
கற்காத அரைகுறைகள் சொல்லிக்கொண்டு
திரிகிறார்கள். இது உண்மையல்ல.

அறுவை சிகிச்சை செய்யும்போது,நோயாளிக்கு
வலி தெரியாமல் இருப்பதற்காகக் கொடுக்கப்படும்
மரப்பு மருந்து (anesthesia) என்ற பொருளில் மார்க்ஸ்
ஜெர்மன் மொழியில் எழுதியதானது ஆங்கிலத்தில்
ஓபியம் (opium) என்று மொழிபெயர்க்கப் பட்டதால்,
தமிழிலும் அபின் என்றே கூறப்படுகிறது. ஆனால்
மார்க்ஸ் அபின் என்ற பொருளில் எழுதவில்லை.
இதுவே உண்மை. (anesthesia = an agent which causes partial
or total loss of sensation with or without consciouness).

மதம் பற்றிய முற்றிலும் எதிர்மறையான கருத்தை
மார்க்ஸ் கொண்டிருக்கவில்லை. இதுதான் உண்மை.
மார்க்ஸ் மட்டுமல்ல, பிரடெரிக் எங்கல்சும்
மதம் பற்றிய எதிர்மறையான கருத்தைக்
கொண்டிருக்கவில்லை.

கிறிஸ்துவ மதம் பற்றி எங்கல்ஸ் பின்வருமாறு
கூறுகிறார்:
"அடிமைகளின் மதமாகவே கிறிஸ்துவம்
முதலில் தோன்றியது. அது அடிமைகளை
விடுதலை செய்தது"

("Christianity was originally a movement of oppressed people: it first appeared as the 
religion of slaves and emancipated slaves, of poor people deprived of all rights, 
of peoples subjugated or dispersed by Rome.")

1894ல் தமது இறப்புக்கு ஓராண்டுக்கு முன்பு எங்கல்ஸ்
இதைக் கூ றினார். ஆரம்ப காலக் கிறிஸ்துவத்தின்
வரலாறு என்ற நூலில் இவ்வாறு கூறியுள்ளார்.
(On the history of early Christianity).

மார்க்ஸ் ஒரு யூதக் குடும்பத்தைச் சார்ந்தவர்.
அவரின் குடும்பம் முதலில் யூத மதத்தைப்
பின்பற்றியது. பின்னாளில் பிராட்டஸ்டன்ட்
மதத்தைத் தழுவினார் காரல் மார்க்சின் தந்தை.

பிராட்டஸ்டன்ட் மதத்தை மக்களின் கலகக்
குரலாகவே பார்த்தார் மார்க்ஸ். அம்மதத்தின்
மீது மார்க்சுக்கு மரியாதை இருந்தது.

மார்க்சின் காலத்திலும் அதற்கு முன்னரும்
உலகில் நிலவிய பல்வேறு மதங்கள் குறித்து
மார்க்ஸ் எவ்வித ஆராய்ச்சியையும்
மேற்கொள்ளவில்லை.குறிப்பாக, கீழ்த்திசை
மதங்களான புத்த மதம், சீனத்தின் தாவோ மதம்
(Taoism), ஆகியவை குறித்தோ இஸ்லாம் குறித்தோ
எத்தகைய ஆய்வையம் மார்க்ஸ் மேற்கொள்ளவில்லை. ஐரோப்பாவில் நிலவிய கத்தோலிக்க. யூத,
பிராட்டஸ்டன்ட் மதங்களுடன் மார்க்ஸ் நின்று
கொண்டார்.

இதற்குக் காரணம் மதங்கள் குறித்த எத்தகைய
தீவிரமான எதிர்மறைக் கண்ணோட்டமும்
மார்க்சுக்கும் எங்கல்சுக்கும் இருக்கவில்லை
என்பதே. அப்படி இருந்திருப்பின், மதங்கள்
குறித்த அகல்விரிவானதும் ஆழமானதுமான
ஆய்வை அவர்கள் மேற்கொண்டிருக்கக் கூடும்.

இருப்பினும் மார்க்சுக்குப் பின்வந்த லெனின்,
டிராட்ஸ்கி, புகாரின், ஸ்டாலின் ஆகியோர்
மதங்களின் மீது மார்க்சும் எங்கல்சும்
கொடிருந்த மென்மையான அணுகுமுறையைக்
கொண்டிருக்கவில்லை. நவம்பர் புரட்சியின்
வெற்றியைத் தொடர்ந்து மத நிறுவனங்களின்
மீதும் மக்களின் மத நம்பிக்கை மீதும் தீவிரமான
போர் தொடுத்தனர். மக்களை மதத்தின்
நுகத்தடியில் இருந்து விடுவிப்பதில் அவர்கள்
வெற்றி அடைந்தனர்.

லெனின் டிராட்ஸ்கி அளவுக்கு மதங்களின்பால்
தீவிரமான அணுகுறையை சீனத்தில் மாவோ
கொண்டிருக்கவில்லை. என்றாலும் மத
நிறுவனங்களின் மீதும் மக்களின் மத நம்பிக்கை
மீதும் மாவோ கடுமையான போர் தொடுத்தார்
என்பது வரலாறு.

அல்பேனியா நாட்டின் மார்க்சிய அதிபரான
அன்வர் ஹோக்சா, தம் நாட்டில் பொது
இடங்களின் வழிபாடு செய்வதைத் தடை
செய்தார் என்ற செய்தியும் இங்கு கருதத் தக்கது.   

சமகால உலகில் கொடிய பயங்கரவாத
நிகழ்ச்சி நிரலுடன் மதம் உலகையே
அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.இஸ்லாமின்
பெயரால் பல்வேறு பயங்கரவாதக் குழுக்கள்
மக்களை பலி வாங்கிக் கொண்டிருக்கின்றன.
எனவே மதம் பற்றிய லெனினிய அணுகுமுறையே
இன்றைய நிலையில் சரியான தீர்வாக அமையும். 
*************************************************************

சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் )நூல்களில்)
மார்க்சும் எங்கல்சும் மதம் பற்றிக் கூறியுள்ளனர்.
அவை அனைத்தையும் படிக்க வேண்டும்.
அப்போதுதான் மதம் பற்றிய மார்க்ஸ் எங்கல்ஸின்
அணுகுமுறை என்னவாக இருந்தது  என்று அறிய
இயலும்.

இதன் தமிழ் மொழிபெயர்ப்பு "கிறிஸ்துவம் பற்றி
காரல் மார்க்ஸ்" என்ற தலைப்பில் அடுத்ததற்கு
அடுத்த பின்னூட்டத்தில் உள்ளது. முழுமையான
தொடர்ச்சியான ஆங்கில வாசகங்கள் அடுத்த
பின்னூட்டத்தில் உள்ளன.



கிறிஸ்துவம் பற்றி காரல் மார்க்ஸ்!
-------------------------------------------------------------

இயேசுவை கடவுளாக அல்லாமல் சிறந்த
நல்லொழுக்க ஞானியாகக் கருதி வழிபடும் ஒருவிதமான
சூட்சும வழிபாட்டு முறையும். கிறிஸ்துவத்தின்
முதலாளித்துவ வளர்ச்சியின் விளைவான
பிராட்டஸ்டன்ட் மதம் மற்றும் நல்லொழுக்க
மதம் (Deism) முதலியனவும் மதத்தின் மிகவும்
தகுதியான வடிவங்கள் ஆகும்.
(பார்க்க: காரல் மார்க்ஸ், மூலதனம் முதல் தொகுதி,
பகுதி-1. அத்தியாயம் ஒன்று)
(மொழிபெயர்ப்பு: இக்கட்டுரை ஆசிரியர்)
இதன் ஆங்கில மூலம் பின்வருமாறு:

----------------------------------------------------------------------------
எந்தவொரு புரட்சிகர இயக்கத்தையும்
போன்றே கிறிஸ்துவமும் மக்களால்
உருவாக்கப் பட்டதே!(எங்கல்ஸ், ஆண்டு 1883,
The book of Revelation).
Christianity, like every great revolutionary movement, was made by the masses. 


விமர்சனம் செய்கிறவர்கள் பற்றி இங்கு எதுவும்
கூறப்படவில்லை. இக்கட்டுரை ஏங்கல்சுக்கு
எதிரானது என்று கருதும் குட்டி முதலாளித்துவ
மூடர்களைப் பற்றி மட்டுமே அவ்வாறு
குறிப்பிடப் படுகிறது.
தயவு செய்து சரியாகப் படிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக