வியாழன், 7 டிசம்பர், 2017

சந்திரனில் பெரிய குகை உள்ளது!
ஜப்பானிய விண்கலன் கண்டறிந்தது!
அண்மைச் செய்தி!
------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------
1) ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்பு, அக்டோபர் 2017இல்
சந்திரனில் ஒரு பெரிய குகை இருப்பது கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது.

2) இதைக் கண்டு பிடித்தது ஒரு ஜப்பானிய விண்கலன்.
அதன் பெயர் செலன். (SELENE). இந்த விண்கலன்
ஒரு orbiter ஆகும்.

3) orbiter என்றால் கோள்சுற்றி என்று பொருள். அதாவது
கோளைத் தொடாமல், நெருங்காமல், கோளைச் சுற்றி
வருவது கோள்சுற்றி (orbiter) ஆகும்.

4) விண்கலன்கள் கோள்சுற்றி (orbiter), தரையிறங்கி (lander),
தரையுலாவி (rover) எனப் பலவகைப் படும். 100கிமீக்கு
50 கிமீ அளவுள்ளது இந்தக் குகை.

5) சந்திரனில் நிலவும் வெப்பநிலை எப்போதுமே
அதீதமானது (extreme). அதாவது பகலில் அதிக வெயிலும்
இரவில் அதிகக் குளிரும் இருக்கும். எனவே சந்திரனின்
மேற்பரப்பில் தங்குவது என்பது இயலாதது.

6) இந்நிலையில் தரைக்கு அடியில் செல்கிற
இக்குகை போன்ற அமைப்புகள் விண்வெளி வீரர்கள்
நிலவில் இறங்கினால், தங்குவதற்கு வசதியானது.

7) எதிர்கால மனிதன் நிலவில் தங்குவான்.
******************************************************************
சந்திரனின் மேற்பரப்பில் பகலில்
அடுப்போ நெருப்போ இல்லாமல்
பால் காய்ச்ச முயலுகிறார் நயன்தாரா.
அவரால் பால் காய்ச்ச முடியுமா? எப்படி?
          .
பீத்தோவனின் 5th symphony!
யூக்ளிட்டின் 5th postulate! இரண்டும் பிரசித்தம்!
5th postulateஐ ஏற்க முடியாததால் பிற வகை
geometry தோன்றியது.

விடையும் விளக்கமும்!
-----------------------------------------
சந்திரனின் மேற்பரப்பில் பகல் நேரத்தில் வெப்பநிலை
சர்வ சாதாரணமாக 100 டிகிரி செல்சியசுக்கு மேல்
இருக்கும். பெரும்பாலான நேரத்தில் 125 டிகிரி
செல்ஸியஸ் இருப்பது இயல்பு. இந்த வெப்பநிலையை
நாசா அளந்துள்ளது. எனவே சந்திரனில் பாத்திரத்தில்
பாலை வைத்த உடனேயே பால் காய்ந்து விடும்.
அடுப்போ நெருப்போ தேவையில்லை. எனவே
நயன்தாரா பாலைக் காய்ச்சி விடுவார்.
பாலின் கொதிநிலை (boiling point) நீரின் கொதிநிலையை
விட மிகச் சிறிதே அதிகம். எனவே 100 டிகிரி வெப்பத்தில்
பால் காய்ச்சப்பட்டு விடும். காய்ந்த பால் ஆவியாகாமல்
தடுப்பதில்தான் நயன்தாராவின் திறமை உள்ளது.
அத்திறமை அவரிடம் இருக்க வேண்டுமெனில்,
அவர் physics படித்திருக்க வேண்டும்.


c v raman
h j bhaba
vikram sarabhai
s n bose
meghnad saha
j c bose




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக