ஞாயிறு, 17 ஜனவரி, 2021

 கணித மேதை ராமானுஜனின்

நினைவு நூற்றாண்டில் (2020) 

அவரின் நினைவைப் போற்றும் அறிவியல் ஒளி!

--------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------

2020 என்பது கணித மேதை ராமானுஜனின் 

நினைவு நூற்றாண்டு. இதையொட்டி 

அறிவியல் ஒளி ஏட்டின் ஆசிரியர் திரு 

நா சு சிதம்பரம் அவர்கள் இந்த ஆண்டு 

முழுவதும் ராமானுஜன் பற்றிய 

கட்டுரைகளை அறிவியல் ஒளியில் 

பிரசுரிக்கிறார்.


12 இதழ்களிலும் சேர்த்து 12 கட்டுரைகள் 

வெளியாகும், மாதம் ஒன்று என்ற கணக்கில்.

இது அரிய வாய்ப்பு.ராமானுஜன் பற்றி 

ஒவ்வொரு இதழிலும் ஒரு கட்டுரை என்பது 

மிகப்பெரிய விஷயம். அவ்வளவும் தமிழ்க் 

கட்டுரைகள். கணிதத்தில் பெரும் புலமை 

பெற்றவர்களிடம் இருந்து கட்டுரைகள் 

பெறப்படுகின்றன.


எனவே அறிவியலில் ஆர்வம் உடைய 

அன்பர்கள்  அறிவியல் ஒளி ஏட்டுக்குச் 

சந்தா செலுத்துங்கள்.


ஆண்டுச் சந்தா = ரூ 240

ஆயுள் சந்தா = ரூ 3000.


கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்தின் 

அறிவியல் விளக்கம் இவ்விதழில் 

வெளிவந்துள்ளது (ஜனவரி 2021).

அத்துடன் ராமானுஜன் பற்றிய 

முதல் கட்டுரை வெளியாகி இருக்கிறது.


அறிவியல் ஒளி ஏடு கடைகளில் 

கிடைக்காது. எனவே சந்தா செலுத்தி 

வரவழைத்துப் படியுங்கள்.


நீங்கள் அறிவியல் படிக்காதவராக 

இருக்கலாம். அதனால் என்ன?

உங்கள் குழந்தைகள் அறிவியல் கற்க 

வேண்டும் அல்லவா? அவர்களுக்கு 

அறிவியல் ஒளி தேவைப்படும்.



அறிவியல் ஒளிக்கு சந்தா செலுத்துங்கள்!

அறியாமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

--------------------------------------------------------

பின்குறிப்பு:

சந்தா செலுத்த என்ன செய்ய வேண்டும்?

ஆசிரியர் திரு நா சு சிதம்பரம் அவர்களை 

தொடர்பு கொள்ள வேண்டும். அவரின் 

அலைபேசி 94440 63497

மின்னஞ்சல் ariviyaloli@yahoo.co.in  

***************************************************  

  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக