செவ்வாய், 26 ஜனவரி, 2021

 பட்டியிலும் பட்டி பாண்ட பட்டி மத்தளம் பாறை! 

வாட்சப்புக்கு மாற்றாக "அரட்டை"! 

ஸோஹோவின் (ZOHO) ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ! 

-------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------

ஸ்ரீதர் வேம்புவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப் படுகிறது.

விஷயம் தெரிந்தவனும் மூளை உள்ளவனும் இதை 

வரவேற்பான். அதே நேரத்தில், செய்தியைக் 

கேள்விப்பட்டதில் இருந்து வாட்சப்பின்  

அதிபர் மார்க் ஸக்கர்பெர்க்கிற்கு பேதி நிற்கவில்லை.

வாட்சப்புக்கு சங்கு ஊதிவிடுவார் ஸ்ரீதர் வேம்பு என்று 

அஞ்சுகிறார் மார்க்.


யார் இந்த ஸ்ரீதர் வேம்பு? எங்கு இருக்கிறார்?

தென்காசிக்கு அருகில் உள்ள மத்தளம்பாறை 

என்னும் ஊரில் வசித்து வருகிறார் ஸ்ரீதர் வேம்பு.

அவர் மிகவும் திறமை வாய்ந்த ஒரு தொழில்நுட்ப 

நிபுணர் (technocrat) இவரின் IQ அதிகம். 


நீங்கள் மத்தளம்பாறைக்குப் போய் இருக்கிறீர்களா?

இல்லை; போகவில்லை! அப்படித்தானே! நான் 

போயிருக்கிறேன். திருநெல்வேலிக்காரனாகிய 

நான் தென்காசிக்குப் பக்கத்து ஊரான 

மத்தளம்பாறைக்குப் போனதில் என்ன ஆச்சரியம் 

இருக்க முடியும்? 


1970களில் போனேன். அப்போது நான் படித்துக் 

கொண்டிருந்தேன்.பெட்டிக்கடையில் வில்ஸ் 

கேட்டோம். இல்லை என்றான். சிசர் கேட்டோம்.

அதுவும் இல்லை என்றான்.என்னதான் இருக்கிறது 

என்று கேட்டபோது, யானைசிகரெட்டும் தானா பினா 

சொக்கலால் பீடியும் இருக்கிறது என்றான். எனக்கு 

யானை சிகரெட் பிடிக்காது. எனவே சொக்கலால் பீடியை 

வாங்கிக் கொண்டேன். உடன் வந்த நண்பர் யானை 

சிகரெட்டை (Bear's Elephant) வாங்கி கொண்டார். 


அந்தக் காலத்தில் ஒரு ஊரில் பெட்டிக் கடையில் 

போய், வில்ஸ் கேட்டு அவன் இல்லையென்று சொன்னால் 

அந்த ஊர் பட்டி என்று பொருள் (பட்டி = பட்டிக்காடு). Wills, Scissors 

ஆகியவை சிகரெட்டுகள்; வெவ்வேறு பிராண்டுகள்.


.மத்தியான நேரம் ஆகிவிட்டது. சாப்பாட்டுக்கடையைத் 

தேடினோம். அப்போதெல்லாம் 1970களில் நெல்லை 

மாவட்டத்தின் கிராமங்களில் ஓட்டல்கள் எதுவும் கிடையாது.

ஓட்டல் என்ற சொல்லும் பேச்சு வழக்கில் கிடையாது.

சாப்பாட்டுக்கடை என்றுதான் சொல்லுவார்கள்.


ஒரு சாப்பாட்டுக் கடைக்குப் போனோம். சோறு உண்டா 

என்று கேட்டேன். உண்டு, .விலை முக்கா ரூவா என்றார்கள்.

சரி என்று சாப்பிட உட்கார்ந்தோம். பிள்ளைமார் சமையல்! 

அற்புதமாக இருக்கும். பேறு  பெற்றவர்களுக்கே பிள்ளைமார் 

சமையல் வாய்க்கும்.அதுவும் ஒரு பாண்ட பட்டியில்! .


உலகில் உள்ள சாப்பாடுகளில் பிள்ளைமார் சமையலே 

தலைசிறந்தது என்று அடித்துக் கூறுவேன். பிராமணாள் 

சமையல் இதற்கு உறைபோடக் காணாது. அம்பாசமுத்திரம் 

ஐயர் ஓட்டலில் சாப்பாடு மயிர் மாதிரி இருக்கும்; ஆனால் 

அல்வா நன்றாக இருக்கும். கல்லிடைக் குறிச்சியில் 

சாப்பாடு சுமாராக இருக்கும். வீரவநல்லூரில் பஸ் ஸ்டாண்ட் 

ஐயர் ஓட்டலில் சாப்பாடு நனறாக இருக்காது. ஆனால் வடை, 

தவலை  வடையில் வீரவநல்லூர் ஐயருக்கு நோபல் பரிசே 

கொடுக்கலாம்!


சாப்பாட்டுக் கடையை நடத்துபவர் நெல்லையப்ப பிள்ளை.

சமையலும் இவரின் சமையல்தான்! இவர் தியாகி 

சாவடி அருணாசலம் பிள்ளை வகையறா என்று 

கேள்விப்பட்டதும் அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. சாவடி 

அருணாசலம் பிள்ளை யார் என்று தமிழ் நாட்டில் உள்ள

SSLC, ப்ளஸ் டூ படிக்கிற பையனைக் கேளுங்கள். 

ஒரு பயலுக்கும் தெரியாது.


கலெக்டர் ஆஷ்  துரையை வாஞ்சிநாதன் சுட்டுக் 

கொன்றபோது, அவரோடு கொலைச்சதியில் பங்கு 

பெற்றவர்களில் ஒருவர் சாவடி அருணாசலம் பிள்ளை.

வழக்கில் ஒரு எதிரியாகச் சேர்க்கப்பட்டு தண்டனை 

அடைந்தவர். 


சரி. ஸ்ரீதர் வேம்புவுக்கு வருவோம். தமது தலைநகரை 

சென்னையில் இருந்து மத்தளம்பாறைக்கு மாற்றிக் 

கொண்டவர் ஸ்ரீதர் வேம்பு. சென்னையில் உள்ள வசதிகள் 

மத்தளம்பாறையில் உண்டா? கிடையாது. என்றாலும் 

மத்தளம்பாறைக்கே போய்விட்டார் ஸ்ரீதர் வேம்பு.

பத்மஸ்ரீ மட்டுமல்ல இன்னும் பல்வேறு விருதுகளுக்குத் 

தகுதியானவர்தான் ஸ்ரீதர் வேம்பு. தமிழக அரசின் 

அதிகாரிகளுக்கு மூளை இருந்தால், அவர்கள் ஸ்ரீதர் 

வேம்புவுக்கு கலைமாமணி விருதை இந்நேரம் 

வழங்கி இருக்க வேண்டும்.


ஸோஹோ (ZOHO) என்று ஒரு நிறுவனத்தை நடத்தி 

வருகிறார் ஸ்ரீதர் வேம்பு. து ஓர் IT நிறுவனம். வாட்சப் 

போன்று ஒரு MESSAGING APPஐ  உருவாக்கி அதற்கு 

தமிழில் அரட்டை என்றும் பெயர்  வைத்துள்ளார் 

ஸ்ரீதர் வேம்பு. இது இப்போதுதான் உருவாக்கப் பட்டுள்ளது.

தற்போது trialல் இருக்கும் இதன் commercial launch 

விரைவில் அறிவிக்கப்படும்.


இது வெற்றி அடைந்தால் வாட்சப் பின்னுக்குப் போகும்.

வாட்சப் கொடிய ஒரு ஏகபோக மறுவனம். இந்தியாவில் 

34 கோடி வாடிக்கையாளர்களையும் உலக அளவில் 

200 கோடி வாடிக்கையாளர்களையு வைத்துள்ள      

 வாட்சப் messagingல் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

       

சுனில் மிட்டலின் மகன் கவின் மிட்டல் ஒரு messaging 

நிறுவனத்தை நடத்தி வந்தார். ஹைக் (HIKE) என்று 

அதற்குப் பெயர். 16 கோடி வாடிக்கையாளர்களைக் 

கொண்ட நிறுவனம் அது. என்றாலும் சந்தையில் நிலவும் 

போட்டியில் வாட்சப்பின் ஏகபோகத்தால் தகர்ந்து போன 

நிறுவனங்களில் கவின் மிட்டலின் ஹைக்கும் ஒன்று.   

ஹைக்கை ஆதரிக்க வேண்டும் என்று கட்டுரை எழுத 

நினைத்த சமயத்தில், ஹைக்கை மூடிவிட்டார் கவின் 

மிட்டல். எனவே தற்போது வாட்சப்புக்குப் போட்டியாக 

ஸ்ரீதர் வேம்புவின் அரட்டை இருக்கும் என்று 

எதிர்பார்க்கிறோம்.


நியூட்டன் அறிவியல் மன்றம் ஸ்ரீதர் வேம்புவை வாழ்த்தி 

அருளுகிறது. அவருடைய சேவை நாட்டுக்குத் தேவை.

அரட்டை என்னும் அவருடைய MESSAGING APP வெற்றி 

அடைய வேண்டும் என வாழ்த்துகிறோம். வாட்சப்பின்  

 வாடிக்கையாளர்களை அரட்டையானது வென்றெடுக்க 

வேண்டும்  என விரும்புகிறோம். இவரின் ஆற்றலை 

சேவையை நாட்டுப்பற்றை இனங்கண்டு, பத்ம விருதுக்குத் 

தகுதியானவர் என அடையாளம் கண்டு  விருது வழங்கிய 

இந்திய அரசைப் பாராட்டுகிறோம்.

******************************************************** 

  

     


      








      

 

 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக