ஞாயிறு, 3 ஜனவரி, 2021

உள்பாவாடையில் இன்டர்நெட் வந்திருப்பது உண்மையே!

எலக்ட்ரானிக் கருவிகளாய் செயல்படும் ஆடைகள்!

இதில் பாலியல் நாட்டத்தின் வெளிப்பாடு எதுவும் இல்லை! 

---------------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------------------------

அறிவியலும் தொழில்நுட்பமும் நாலுகால் பாய்ச்சலில் 

போனால் பரவாயில்லை! நானூறு கால் பாய்ச்சலில் 

போகிறது. அதிலும் தொழில்நுட்பம் நாலாயிரம் கால் 

பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது.


சில நாட்களுக்கு முன்பு, ஐஓடி (IoT) எனப்படும் 

Internet of Things பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

"மச்சினியின் உள்பாவாடையில் இன்டர்நெட்" என்ற 

வாக்கியம் அக்கட்டுரையில் இடம் பெற்று இருந்தது.

இது பாலியல் நாட்டம் சார்ந்த விஷயம் என்று சிலர் 

முகச் சுளிப்புக்கு ஆளாகியதாக அறிந்தேன்.


மேற்படி வாக்கியத்தில் பாலியலோ அது சார்ந்த 

நாட்டமோ எதுவும் இல்லை. மாறாக அவ்வாக்கியம் 

இன்றைய உண்மை நிலையை வெளிப்படுத்துகிறது.

உங்களில் சிலரால் நம்ப முடியாதுதான்! என்றாலும் 

உண்மையிலேயே உள்பாவாடையில் இன்டர்நெட் 

வந்து விட்டது. கற்பனைக்கும் எட்டாத விதத்தில் 

தொழில்நுட்பம் ராட்சஸத் தனமாக ஓடிக் கொண்டு 

இருக்கிறது. அது பற்றி எதுவும் தெரியாத 

தற்குறித்தனமானது "உள்பாவாடையில் இன்டர்நெட்" 

என்றால் பாலியல் நாட்டம் என்று முட்டாள்தனமாக 

உளற வைக்கிறது. 


e commerce e governance e learning என்பதையெல்லாம் நாம் 

அறிவோம். e textile என்றால் என்ன என்று தெரியுமா?

அப்படி ஒன்று இந்த உலகில் இருக்கிறது; அது தெரியுமா?

தெரியாது! ஒரு இழவும் தெரியாது! 


ஒரு துணியிலோ ஆடையிலோ எலக்ட்ரானிக்ஸ் 

செயல்படுமானால், அது e textile எனப்படுகிறது.

அது ஸ்மார்ட் டெக்ஸ்டைல் என்றும் வழங்கப் படுகிறது.

அதாவது அந்த ஆடையில்  துணியும் எலக்ட்ரானிக் 

கூறுகளும் ஒன்றிணைந்து இருக்கின்றன 

(a combination of textile and electronic components). இத்தகைய 

தொழில்நுட்பம் wearable technology எனப்படுகிறது.


அணிமணிகளின் தொழில்நுட்பம் (wearable technology) 

என்பது மிகவும் விரிவான ஒன்று. காதில் அணியும் 

ஹியரிங் எய்டு, பெண்கள் காதில் அணியும் தோடு 

ஆகியவையும் wearable technologyயில் வரும். உள்பாவாடை, 

எம்பிராய்டரி வேலை செய்யப்பட்ட புடவை, ரவிக்கை,

கோட் மற்றும் காலில் அணியும் ஷூக்கள் ஆகியவையும் 

wearable technologyயே. 2014 ஜூலையில் இந்தியாவில் 

ஹைதராபாத்தில்  எலக்ட்ரானிக் ஷூக்கள் அறிமுகம் 

ஆயின. 


எலக்ட்ரானிக் ஆடைகள்  இன்றோ நேற்றோ உண்டாக்கப் 

பட்டவை  அல்ல. 1967ஆம் ஆண்டிலேயே பிரான்சு தேசத்து 

futuristic  ஃபாஷன் டிசைனர் ஒருவர் எலக்ட்ரானிக்

ஆடைகளை (robe electronique) LED விளக்குகளைப் பயன்படுத்தித் 

தயாரித்து இருந்தார்.  ஹோலோகிராம், மின் கடத்தும் மசி 

(electrically conductive ink) ஆகியவை எலக்ட்ரானிக் ஆடைகளை 

உருவாக்கப் பயன்படுகின்றன.  


இது எதுவுமே தெரியாத புழுத்த தற்குறிகள், எலக்ட்ரானிக் 

உள்பாவாடை என்றதுமே அவநம்பிக்கை கொள்கிறார்கள்..

ஆம், மூடர்களே, உள்பாவாடை உட்பட சகல விதமான 

 ஆடைகளிலும் எலக்ட்ரானிக் செயல்பாடு வந்து விட்டது.

 ஊர் உலகத்தில் இல்லாத எதையும் .நான் சொல்லவில்லை.

எலக்ட்ரானிக் உள்பாவாடைகள் இந்த உலகில் இருக்கின்றன.

அவை .அழகிய பெண்களால் உடுத்தப் படுகின்றன.


எனது கட்டுரைகளை அறிவுள்ளவர்களும் IQ >105 

உள்ளவர்களும்  வேண்டும்.  தற்குறிகளுக்கு இங்கு 

 இடமில்லை.அவர்கள் வெளியேறலாம்.

-----------------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

மச்சினியின்  உள்பாவாடையில் இன்டர்நெட் 

என்பதைப் படித்த ஒரு புழுவினும் இழிந்த 

தற்குறி இப்படி எழுதுவது அறக்கழிவு என்று 

உளறியது. முதல் வேலையாக அந்த 

ஈனத் தற்குறியை பிளாக் செய்தேன். 

கூடவே வேறு இரண்டு ஈனப்பயல்களையும் 

block செய்தேன்.

********************************************************* 


ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களோடு 

update செய்து கொள்வதே இன்று பெரும்பாடாக 

இருக்கிறது. அவ்வளவு வேகத்தில் தொழில்நுட்பம் 

பாய்ந்து பாய்ந்து ஓடுகிறது.


     

 நான் எழுதுகிற விஷயங்களில் சர்வ நிச்சயமாக 

.நான்தான் அத்தாரிட்டி.

             


    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக