திங்கள், 11 ஜனவரி, 2021

வாட்சப்பை விவாகரத்து செய்! 

சிக்னலுக்குத் தாலி கட்டி குடும்பம் நடத்து!

எலான் மஸ்க் அறிவுரை!

-----------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------

நடப்பது கலியுகம் அல்ல;; சைபர் யுகம் (cyber age). அதாவது 

இது கணினிகளின் யுகம்; தகவல் தொழில்நுட்பம் உலகை 

ஆளும் யுகம்.   

 

வாட்சப் (WhatsApp) என்ற ஒன்றைப் பலரும் பயன்படுத்தி  

வருகிறோம். வாட்சப்பின் பயன்பாடு உலகளாவியது.

வாட்சப் என்பது ஒரு ஆப் (app) ஆகும். பிரதானமாக 

மொபைல் போன்களுக்கு என உருவாக்கப்பட்ட போதிலும் 

இது கணினி, லேப்டாப்களிலும் வேலை செய்யும். பல்வேறு 

OS களிலும் வேலை செய்யும்.


நமது தமிழ் முட்டாள்கள் ஆப் (app) என்ற சொல்லுக்கும் சரி,

பிராசஸர் (processor) என்ற சொல்லுக்கும் சரி, "செயலி" என்ற 

ஒரே சொல்லைப் பயன்படுத்தி தங்களின் மூளைவறட்சியை 

வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழையும் கெடுத்து 

வருகின்றனர்.

 

ஆப்புக்கு (app) நிகராக ஒரு புதிய சொல்லை சற்றுமுன் 

உருவாக்கி உள்ளேன். 200 நொடிகளுக்குள் உருவான 

அச்சொல் "உறுபேறு" என்பதே. App = உறுபேறு.  

ஆக, ஆப் (app) என்ற சொல்லுக்கு நிகராக இனி 

ஒவ்வொருவரும் உறுபேறு என்ற சொல்லையே 

பயன்படுத்த வேண்டும். ஆப்புக்கு (app) செயலி என்று 

எழுதுபவன் தற்கொலை செய்து கொண்டு செத்துப் 

போக வேண்டும். தற்கொலை செய்துகொள்ள மறுப்பவனை 

அடித்துக் கொல்ல வேண்டும். ஆம், வேறு வழியில்லை.

வன்முறையைக் கையாளாமல் தமிழ் வளராது.


ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவது அன்றுஇவ் வுலகத்து இயற்கை.

(புறநானூறு, சந்தி பிரித்து எழுதப் பட்டுள்ளது)  


உறுபேறு என்ற சொல்லின் பொருளையும் அதன் 

பயன்பாட்டையும் தமிழன் அறிவான். உறுதல், 

கருவுறுதல் ஆகிய சொற்கள் பள்ளிப் பாடங்களில் 

இடம் பெறுபவை. பேறு, மக்கட்பேறு ஆகிய சொற்களும் 

வழக்கில் உள்ளவை. எனவே ஆப்புக்கு (app) உறுபேறு 

என்பதே ஆகச் சிறந்த சொல் என்பது இயல்பாக 

நிறுவப்பட்டு விடுகிறது. நிற்க.உறுபேறு, பயனுறுபேறு

ஆகிய சொற்கள் பயிலட்டும்!   

  

தற்போது ஒரு மாபெரும் exodus நடந்து வருகிறது.அமெரிக்க 

நாவலாசிரியர் லியான் அரிஸ் (Leon Uris) எழுதிய Exodus 

என்ற நாவலைப் படித்து இருக்கிறீர்களா? இல்லை. 

சரி, பைபிளில் EXDOUS பற்றி இருக்கிறதே! அதையாவது 

படித்து இருக்கிறீர்களா? இல்லை. 


Exodus என்றால் கூட்டம் கூட்டமாக வெளியேறுவது என்று 

பொருள். வாட்சப்பில் இருந்து கூட்டம் கூட்டாமாக  

வெளியேறுகிறார்கள். வெளியேறியவர்களைக் கணக்கெடுத்தால் கோடிக்கணக்கில் இருக்கிறது.


வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை 

எங்களின் தேவைக்கு ஏற்ப நாங்கள் பயன்படுத்துவோம் 

என்று அறிவித்து விட்டது வாட்சப். வரும் 8 பெப்ரவரி 2021 

முதல் இப்புதிய விதிகள் செயல்பாட்டுக்கு வருகின்றன.

இவ்விதிகளிடம் தங்களின் அந்தரங்கத் தகவல்களை 

இழக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.


"We require certain information to deliver our Services and without this 

we will not be able to provide our Services to you" என்று தெள்ளத் 

தெளிவாகச் சொல்லி விட்டது வாட்சப். நேர்மையாளர்கள்;

சொல்லிச் செய்கிறார்கள்.  


என்னுடைய தகவல்களை வாட்சப் எடுத்துக் கொள்வது 

ஆக்கிரமிப்பு ஆகும்.  அது என் சுதந்திரத்தைப் பறிக்கிறது. 

எனவே வாட்சப்பில் நீடிக்க நான் விரும்பவில்லை என்று முடிவு 

எடுத்தவர்கள் வாட்சப்பில் இருந்து வெளியேறுகிறார்கள்/


வாட்சப்பை விட்டு வெளியேறினால் வேறு எங்கே 

செல்வது? போக்கிடம் உண்டா? உண்டு. வாட்சப்பைப் போல 

SIGNAL என்று  ஒரு உறுபேறு (app) உள்ளது. இதுவும் 

அமெரிக்க நிறுவனமே. எனினும் வாட்சப்பைப்போல 

இவர்கள் நமது தகவல்களைக் கேட்பதில்லை. எனவே 

அந்த அளவுக்கு இது பாதுகாப்பானது.


உண்மையில், சைபர் உலகில் பாதுகாப்பு (safety and security 

of our data) என்ற பதத்துக்கெல்லாம் அர்த்தம் கிடையாது. 

கற்பிழந்த பெண்கள்  என்பதைப்போல, safety security 

ஆகியவை  அர்த்தம் இழந்த சொற்கள். போஸ்ட் கார்டு 

எனப்படும் அஞ்சலட்டை நினைவு இருக்கிறதா? பல 

ஆண்டுகளுக்கு முன்பு, (1970களில்) இதன் விலை 15 பைசா. 

பின்னர் 50 பைசா. அஞ்சல் அட்டையில்  எழுதிப் போட்டால் 

எவன் வேண்டுமானாலும் படிப்பான்  அல்லவா? அதைப் 

போலத்தான் இன்றுள்ள சைபர் யுகத்தில்  நமது அந்தரங்கத் 

தகவல்களின் பாதுகாப்பு. எனவே  பாதுகாப்பு 

பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதால் 

பயனில்லை.


வாட்சப்பை விவாகரத்து செய்யுங்கள்; சிக்னலுக்குத் தாலி 

கட்டுங்கள் என்கிறார் எலான் மாஸ்க். யார் இவர்? அமெரிக்கர்.

மின்சாரத்தால் இயங்கும் டெஸ்லா கார் நிறுவனத்தின் 

அதிபர். வெறும் தொழிலதிபர் மட்டுமா? இல்லை. இவர் 

மிகச் சிறந்த தொழில்நுட்ப அறிஞர். உலகின் பணக்காரர்களில் 

முதலிடத்தில் இருக்கிறார். இவரைப் பற்றி எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை என்றால் நீங்கள் முட்டாள் என்று அர்த்தம்.


நீங்கள் முட்டாளாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்,

எலான் மஸ்க் பற்றி விரிவான ஒரு கட்டுரையை எழுதினேன். 

அறிவியல் ஒளி ஏட்டில் அது பிரசுரம் ஆகியுள்ளது. சில 

மாதங்களுக்கு முந்திய அறிவியல் ஒளியைப் பாருங்கள்.

அதில் உலகைக் குலுக்கும் எலான் மஸ்க் என்னும் 

தலைப்பிலான கட்டுரையைப் படியுங்கள். அந்தக் 

கட்டுரையைப் படித்தீர்களா? இல்லை. 


சரி, அதை விடுங்கள்; உங்கள்  வாழ்க்கையில் என்றாவது 

யாராவது ஒருவர் எழுதிய  அறிவியல் கட்டுரையை 

முழுசாகப் படித்தது உண்டா? கிடையாது. நல்லது. 

உங்களுக்கு உயிர் வாழும் உரிமை உண்டா? கிடையாது.


சிக்னல் என்னும் உறுபேறு(app) end-to-end encryption  

செய்கிறது. வாட்சப்பும் இது போல end-to-end 

encryption செய்து நீங்கள் அனுப்பும் செய்திகளை 

unintelligible மற்றும் unreadableஆக மாற்றுகிறது.

ஆனால் வாட்சப்புக்கும் சிக்னலுக்கும் உள்ள 

பெரிய வேறுபாடு என்னவெனில், நமது தரவுகளை 

வாட்சப் கோருகிறது; சிக்னல் கோரவில்லை. அதாவது 

தற்போது கோரவில்லை. இன்னும் ஐந்து ஆண்டுகளின் 

பிறகு இவர்களும் கோரலாம். அப்போது பார்த்துக் 

கொள்ளலாம். அதுவரை சிக்னல் என்னும் உறுபேறு 

பாதுகாப்பானதுதான்.


எனவே உங்களின் தகவல்களின் பாதுகாப்பைப் 

பற்றி (safety and security of your data) அதிகம் அலட்டிக் 

கொள்பவரா நீங்கள்? அப்படியானால் உடனடியாக 

நீங்கள் வாட்சப்பை விவாகரத்து செய்து விடுங்கள். 

இரண்டாம் தாரமாக சிக்னலுக்குத் தாலி கட்டி 

குடித்தனம் நடத்துங்கள். இதுவே நியூட்டன் அறிவியல் 

மன்றத்தின் வழிகாட்டுதல். 

------------------------------------------------------------------------

பின்குறிப்பு:

1) தொழில்நுட்பம் சார்ந்து இன்னும் அதிக விவரங்களை 

எழுத வேண்டும். தொழில்நுட்பம் குறித்து எந்த அறிவும் 

இல்லாமலே, தொழில்நுட்பத்தின் பயனை மட்டும் 

அனுபவிக்கும் கூட்டம் தமிழ்நாட்டில் அதிகம். 


2) 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, 

வாட்சப், சிக்னல் போன்று ஒரு உறுபேற்றை (app) 

தனக்கென்று உருவாக்கிக் கொள்ளலாம். அது எளிது.

இது குறித்து கரடியாகக் கத்தி இருக்கிறேன். எவரும் 

செவிசாய்க்கவில்லை. ஏனெனில் இந்தியா ஒரு 

scientifically illiterate state. எவன் செவி சாய்ப்பான்?

*********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக