சனி, 2 ஜனவரி, 2021

இரண்டு வேறுபட்ட இயக்கங்கள்!

ஆனால் ஒரே கருத்தில் அமைந்த போஸ்டர்கள்!

மார்க்சிய அமைப்பு என்ற பெயரில் வலதுசாரிகள்! 

--------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

-----------------------------------------------------

ஜனவரிப் புத்தாண்டை எதிர்த்து, மார்க்சிய லெனினிய 

அமைப்பான புரட்சிகர இளைஞர் முன்னணி சுவரொட்டி 

அடித்துள்ளது. ஜனவரிப் புத்தாண்டு ஏகாதிபத்தியப் 

புத்தாண்டு என்று அந்த அமைப்பு கூறுகிறது.


இன்னொரு சுவரொட்டியை ஆர் எஸ் எஸ் பாஜகவின் 

சார்பாக ஒருவர் வெளியிட்டு உள்ளார். இவரும்

ஜனவரிப் புத்தாண்டை எதிர்க்கிறார். 


நக்சல்பாரி அமைப்பான பு இ முன்னணியும் ஆர் எஸ் எஸ்சும்

ஒரே பிற்போக்கு நிலைபாட்டில் உள்ளன. இரண்டும் 

அறிவியல் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 

உலகளாவிய ஜனவரிப் புத்தாண்டை எதிர்க்கின்றன.


ஜனவரிப் புத்தாண்டை ஏகாதிபத்தியப் புத்தாண்டு என்று 

கூறுகிறது புரட்சிகர இளைஞர் முன்னணி. இது 

அடிமுட்டாள்தனமானது.


பூமியும் சூரியனும் உலக மனித குலம் அனைத்துக்கும்

பொதுவானவை. ஏகாதிபத்திய பூமி என்றோ நிலப்பிரபுத்துவ 

சூரியன் என்றோ எதுவும் கிடையாது.


செவ்வாய் கிரகத்தைச் சுற்றிலும் அமெரிக்க நாசாவின் 

ஏழு செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன.

இதனால் செவ்வாய் கிரகமானது ஏகாதிபத்திய 

செவ்வாய் ஆகி விடுமா?    


புத்தாண்டுப் பிறப்பு என்பது ஒரு வானியல் நிகழ்வு. பூமி 

சூரியனை ஒரு சுற்றுச் சுற்றி முடிக்கும்போது ஓர் ஆண்டு 

முடிகிறது. சூரியனில் இருந்து 15 கோடி கிலோமீட்டர் 

தூரத்தில் உள்ளது பூமி. நொடிக்கு 30 கிமீ வேகத்தில்,

அதாவது மணிக்கு ஒரு லட்சம் கிமீ வேகத்தில் (சற்றுத் 

தோராயமாக) பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது.

இந்தச் சுற்றுப்பாதை (orbit) 0.0167 மையப் பிறழ்ச்சியுடன் 

கூடிய ஒரு நீள்வட்டப்பாதை ஆகும் (an elliptical orbit with 

eccentricity 0.0167).  


இவ்வாறு சுற்றி வருகையில் பூமியானது 94 கோடி கிமீ 

தூரத்தைக் கடக்கிறது. இதற்கு 365.25 நாட்கள் ஆகின்றன.

இதுதான் ஓர் ஆண்டு ஆகும்.


இதில் ஏகாதிபத்தியம் எங்கிருந்து வருகிறது? ஜனவரிப் 

புத்தாண்டு என்னும் இந்தக் காலண்டர் இல்லாமல் 

உலகம் இயங்குவதில்லை.  இந்தக் காலண்டர் முற்றிலுமாக 

விஞ்ஞானிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத பீடங்கள் 

காலண்டரைத் தீர்மானிக்கும் நடைமுறை முடிவுக்கு 

வந்து பல காலம் ஆகிறது.


சமூகத்தின் பொருள் உற்பத்தி உலகம் முழுவதும்  எந்தப் 

புத்தாண்டின் அடிப்படையில் நடக்கிறது?


ரயில்களும் விமானங்களும் புறப்படும் நேரங்கள் 

எந்தக் காலண்டரின்படி தீர்மானிக்கப் படுகின்றன?


பத்திரப் பதிவு அலுவலகங்களில் சொத்துக்கள் எந்தக் 

காலண்டரின் அடிப்படையில் பதிவு செய்யப் படுகின்றன?


பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் எந்தக் காலண்டரின் 

அடிப்படையில் நடக்கின்றன?


மாநகராட்சிகளில்  எந்தக் காலண்டரின் பேரில் 

பிறப்பு  இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப் படுகின்றன?

 

அனைத்தும் உலக மக்களுக்குச் சொந்தமான, மொத்த 

மானுடத்துக்கும் பொதுவான ஜனவரி காலண்டரின் 

அடிப்படையில்தானே நடக்கின்றன? இதில் எங்கு 

இருக்கிறது ஏகாதிபத்தியம் மூடர்களே!


ஜனவரிப் புத்தாண்டு மக்களுக்குச் சொந்தம். 

அதை ஏகாதிபத்தியத்துக்குக் சொந்தம் என்று 

முட்டாள்தனமாக உளறாதே! அப்படி உளறுவது 

தன்னுடைய பொண்டாட்டியை அடுத்தவன் பொண்டாட்டி 

என்று சொல்லும் இழிவுக்குச் சமம். 


அன்பார்ந்த வாசக அன்பர்களே,

இடதுசாரிகள் என்றும் மார்க்சிஸ்டுகள் என்றும் 

நக்சல்பாரிகள் என்றும் கூறிக் கொள்பவர்கள் 

மிகப்பலரும் முட்டாள்களாக தற்குறிகளாக 

இருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு முறையும் 

நான் நிரூபித்து வருகிறேன். இதனால் போலி 

இடதுசாரிகளான இந்தத் தற்குறிக் கூட்டம்

என்னை வெறி கொண்டு எதிர்த்து, இரும்புப் 

பாறையில் மோதிய கண்ணாடி ஜாடியாய் 

சுக்கல் சுக்கலாகச் சிதறுகிறது.


போலி நக்சல்பாரி அமைப்பான புரட்சிகர இளைஞர் 

முன்னணி ஒரு வலதுசாரிப் பிற்போக்கு அமைப்பாகும்.

அதற்கும் பாஜகவுக்கும் வேறுபாடு இல்லை. இதை 

இந்தக் கட்டுரையில் நிரூபித்து உள்ளேன்.

*******************************************************.

GMT என்பது ஒரு Time Zone. இங்கிலாந்து மற்றும் 

ஐரோப்பாவில் இது நேரத்தைக் கணிக்கிறது.

UTC என்பது Time Zone அல்ல. எனவே geographically 

எந்த நாட்டுக்கும் சொந்தமானதல்ல. ஆனால்

உலகம் முழுவதற்குமான நேரத்தை UTC தருகிறது.

UTC தரும் நேரம் GMT நேரமே.

      


 

         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக