திமுகவின் பாசிசம்!
---------------------------------
1) கிஷோர் கே சுவாமி என்று ஒரு பாப்பாரப் பையன்.
இவன் ஒரு பூச்சி! அவ்வளவுதான். இவனால் என்ன
செய்ய முடியும்? தமிழ்ச் சமூகத்தில் இவனால்
ஒரு நியூசன்ஸ் வேல்யூ (nuisance value) உண்டாக்க
முடியும். அதைத் தாண்டி வேறெதுவும் இவனால்
செய்ய இயலாது.
இவனை திமுக அரசு குண்டர் சட்டத்தில் சிறையில்
அடைத்தது. ஆறு மாதம் சிறையில் இருந்து விட்டு
வெளியே வந்தான்.
இவன் பேசியதிலோ எழுதியதிலோ தவறு
இருக்குமானால் அதற்குரிய சட்டப் பிரிவுகளின்
கீழ் வழக்குத் தொடர்ந்து உரிய தண்டனை
பெற்றுத் தரலாம். குண்டர் சட்டத்தில்
சிறையில் அடைத்தது அப்பட்டமான பாசிசம்.
நாளை ஆட்சி மாற்றம் நிகழும்போது these fellows
will be at the receiving end.
2) பத்ரி சேஷாத்திரி ஐஐடியில் B.Tech படித்தவர்.
பதிப்பகம் ஒன்றை நடத்தி வருபவர். அவர் மாநில
அரசையோ திமுகவையோ விமர்சிக்கவில்லை.
ஒரு தொலைக் காட்சி விவாதத்தில் ஒரு
கருத்தைக் கூறிய அவரைக் கைது செய்து
சிறையில் அடைத்தது திமுக அரசு. இது பாசிசம்
அல்லாமல் வேறு என்ன?
3) சாவித்திரி கண்ணன் ஒரு free lance பத்திரிகையாளர்.
ஒரு பள்ளி மாணவி இறந்து போன விஷயத்தில்
போலீசுக்கு எதிராக இவர் எழுதினார் என்பதற்காக
இவரை நள்ளிரவில் கைது செய்து கண்காணாத
இடத்திற்கு கொண்டு சென்றது திமுக அரசின் போலீசு.
கைது நடவடிக்கை எவ்விதத்திலும் தேவைப்படாத
நிலையில் வெறித்தனமாக சாவித்திரி கண்ணன்
கைது செய்யப்பட்டது திமுக அரசின் பாசிசம்
அலலாமல் வேறு என்ன?
4) Master of Engineering படித்து விட்டு பொறியியல்
மாணவர்களுக்கு தனிப்பயிற்சி நிலையம்
மூலமாக கல்வி கற்றுத் தந்தவர் மாரிதாஸ்.
இவர் ஒரு யூடியூப் சானலை நடத்தி வருகிறார்.
திமுக அரசை இவர் விமர்சித்தார் என்பதற்காக
இவரைக் கைது செய்து பல ஊர்களுக்கு
அலைக்கழித்து சிறையில் அடைத்தது திமுக அரசு.
இது பாசிசமா அல்லது பருப்புப் பாயாசமா?
மாரிதாஸ் நீதிமன்றத்திற்குச் சென்றார். அவர்
தரப்பில் உள்ள நியாயத்தை அங்கீகரித்த
சென்னை உயர்நீதிமன்றம் அவர் மீதான FIRஐ
ரத்து செய்தது (FIR quashed).
5) பாஜக தலைவர் கல்யாணராமன் என்பவர்
இஸ்லாம் மதத்தை விமர்சித்தார் என்பதற்காக
அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது
திமுக அரசு. ஆறு மாதக் கழித்து விடுதலை ஆனார்
கல்யாணராமன். பின்னர் மீண்டும் இரண்டாவது
முறையாகவும் அவரை குண்டர் சட்டத்தில்
அடைத்தது திமுக அரசு. ஒருவரை இரண்டு முறை
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பது பாசிசமா
அல்லது பாயாசமா?
6) திமுக அரசை விமர்சித்தார் என்ற காரணத்துக்காக
கருத்து சுதந்திர கனவான் திமுக அரசால்
சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில்
அடைக்கப் பட்டார். அவர் மீதான குண்டர் சட்டத்தை
உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுமே இரண்டாம்
முறையாக சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தை
ஏவியது திமுக அரசு. உச்சநீதிமன்ற்ம் இதைக்
கேள்வி கேட்டதும் குண்டர் சட்டத்தை நீக்கிக்
கொண்டது திமுக அரசு.
நீதிமன்றத்தில் நிற்க முடியாத பலவீனமான
பொய்யான வழக்கை வைத்து சவுக்கு சங்கர் மீது
இரண்டு முறை குண்டர் சட்டத்தை ஏவியது பாசிசமா?
அல்லது பூத்துக் குலுங்கும் கருத்து சுதந்திரமா?
*****************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக