வேதியியல் கேள்வித்தாள் அவுட்!
வீரவநல்லூரில் கொந்தளிப்பு!
இசக்கிமுத்து அண்ணாச்சி அப்செட்!
------------------------------------------------------------------
இணைக்கப்பட்ட பட்டியலைப் படியுங்கள்.
வெவ்வேறு தனிமங்களின் அணு நிறை உள்ளிட்ட
பண்புகள் எப்படி மாறுகின்றன என்று பாருங்கள்.
ஹைட்ரஜனின் atomic mass = 1.008 u
யுரேனியத்தின் atomic mass = 238.03 u
ஒரு கோடி ஹைட்ரஜன் அணுக்கள் இருக்கின்றன
என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஒரு கோடி
அணுக்களையும் ஒவ்வொன்றாக எடுத்துப்
பரிசீலித்துப் பார்த்தால் ஒவ்வொன்றின்
atomic massம் சமமாக இருக்கும். ஒவ்வொன்றும்
1.008 u atomic mass கொண்டதாகவே இருக்கும்.
அது மட்டுமல்லா, ஒவ்வொரு ஹைட்ரஜன் அணுவும்
ஒரே அளவு (size) கொண்டதாக இருக்கும்.
அதே நேரத்தில் ஒரு ஹைட்ரஜன் அணுவின் atomic massம்
வேறு ஒரு தனிமத்தின் atomic massம் சமமானதாக
இருக்காது. ஹைட்ரஜனின் atomic mass 1.008 u.
யுரேனியத்தின் atomic mass 238.03 u.
இதிலிருந்து தெரிவது:
ஒரு தனிமத்தின் அணுக்கள் அனைத்தும் சம நிறை ,
சம அளவு, சமமான பண்புகள் கொண்டிருக்கும்.
வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் அணுநிறை,
அளவு, பண்புகள் ஆகியவற்றில் ஒரு தனிம
அணுக்களில் இருந்து வேறொரு தனிம
அணுக்கள் வேறுபட்டு இருக்கும்.
இன்று மாலை நடைபெற உள்ள வகுப்பில்
ஒரு revision test வைக்கிறார் இசக்கிமுத்து
அண்ணாச்சி. வெற்றி பெற்றால் தலைக்கு
ஒரு பாக்கட் அணுகுண்டுப் பட்டாசு பரிசு!
பதில் தெரியாவிட்டால் முதுகில் பழுக்கக் காய்ச்சிய
இரும்புக் கம்பியால் சூடு!
வீரவநல்லூர்ப் பிள்ளைகள் யாரும் சூடு வாங்க
வேண்டாம் என்பதற்காக
கேள்வித்தாளை அவுட் செய்து விட்டேன்.
கேள்வி இதுதான்!
Periodic tableல் இரண்டாவது இடத்தில் இருக்கும்
ஹீலியம் அணுவின் atomic mass என்ன?
----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
வாசகர்கள் பதிலளிக்க வேண்டும்.
பதிலளிக்க முயல வேண்டும்.
**********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக