வியாழன், 31 அக்டோபர், 2024

துகள்கள், அணுக்கள், பொருட்கள் அனைத்தும் 
சுற்றுகின்றன!
--------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------- 

1) பொருட்கள் அணுக்களால் ஆனவை.

2) அணுக்களில் துகள்கள் (particles) உள்ளன.

3) புரோட்டான் நியூட்ரான் ஆகிய துகள்கள் 
அணுவின் உட்கருவில் உள்ளன. எலக்ட்ரான் 
அணுவின் வெளிப்புறத்தில் அதைச் சுற்றி 
வருகிறது.

4) என்னிடம் ஒரு பம்பரம் இருக்கிறது. நான் 
அதைச் சுற்றினால் மட்டுமே அது சுற்றும்.
பம்பரம் தானாகச் சுற்றாது. ஆனால் யாரும் 
சுற்றி விடாமலேயே புரோட்டான் தானாகச் 
சுற்றும். இதை தற்சுழற்சி என்கிறோம்.
ஆங்கிலத்தில் spin என்கிறோம்.

5) நியூட்ரானும் தானாகச் சுற்றுகிற துகள்தான்.
இதற்கும் spin உண்டு.

6) எலக்ட்ரானும் தானாகச் சுற்றுகிற துகள்தான்.   
இதற்கும் spin உண்டு.

7) அனைத்து fermion துகள்களுக்கும், அனைத்து
boson துகள்களுக்கும் spin உண்டு.

 சுற்றாத துகள் எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை.
************************************************  


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக