புதன், 9 அக்டோபர், 2024

காலமும் கடிகாரமும் 
---------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------
வயது என்பது காலத்தின் ஓர் அளவு. நீண்ட அளவுள்ள 
காலத்தைச் சுட்ட வயது என்ற அலகைப் 
பயன்படுத்துகிறோம். ஆக வயது என்பது 
காலத்தின் ஒரு அலகு (unit).

காலத்தை அளக்க ஒரு கருவி வேண்டும்.
பண்டைத் தமிழர்கள் காடடுத்  துரும்பையும் 
இன்றைய தமிழர்கள் சீசியம் அணுக்கடிகாரத்தைக் 
கொண்டும் காலத்தை அளக்கிறார்கள்.

பண்டைத் தமிழனுக்கு காட்டுத்துரும்பு 
கடிகாரமாகப் பயன்பட்டது.
"காட்டுத்  துரும்பெடுத்து கண்டம் பதினாறாக்கி 
நீட்டிக்க கிடந்தது போக நின்றது நாழிகை"    
என்று காலத்தை அளந்தான் பண்டைத் தமிழன்.
இந்த வரலாற்றை அறிந்தவே எத்தனை பேர்?

ஆக, கடிகாரம் என்பது காலத்தை அளக்கும் 
ஓர் கருவி. அனலாக் கடிகாரமோ அல்லது 
டிஜிட்டல் கடிகாரமோ எதுவாக இருப்பினும் 
அதன் வேலை காலத்தை அளப்பதே.

தெர்மாமீட்டர் வெப்பத்தைச் சுட்டிக் காட்டுவது 
போல கடிகாரம் காலத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
காலம் மெதுவாகப் போனால் கரிகாரமும் 
மெதுவாக ஓடும். காலம் வேகமாகப் போனால் 
கடிகாரமும் வேகமாக ஓடும்.

காலம்தான் மெதுவாகச் செல்லுமே தவிர, கடிகாரம் 
இயல்பான வேகத்தில்தான் செல்லும் என்பது 
அபத்தம். 11அம வகுப்பு இயற்பியல் பாடப்புத்தகத்தில் 
முதலாவது அத்தியாயமே Units and Measurementsதான்.
அதைப் படித்து எவரும் தெளிவு பெறலாம்.
    
காலம்தான் மெதுவாக ஓடுமே தவிர,  
அதற்கு ஏற்ப கடிகாரம் மெதுவாக 
ஓடாது என்பது 100 சதம் பிழையானதும் 
அறிவியலுக்குப் புறம்பானதுமான கருத்து.

1905, 1915 ஆண்டுகளில் முன்மொழியப்பட்ட 
ரிலேட்டிவிட்டி தியரி தொடக்க காலத்தில் 
மக்களால் புரிந்து கொள்ளப் படாமல் 
இருந்தது. இன்று இந்த நூறாண்டுகளில் 
ப்ளஸ் டூ மாணவன்கூட முயற்சி செய்து 
புரிந்து கொள்ள இயலும் என்ற 
அளவிற்கு அறிவியல் வளர்ந்துள்ளது.

அதீத வேகத்தில் காலம் மெதுவாக ஓடும் 
என்பது அனந்தகோடிப் பரிசோதனைகளில்
நிரூபிக்கப் பட்டுள்ளது. 
********************************************




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக