சனி, 26 அக்டோபர், 2024

திரு காலன்துரை அவர்களுக்கு,
2018ல் மார்க்சியப்  பார்வையில் அத்வைதம் என்ற 
நூலை எழுதினேன். தங்களுக்கும் அந்த நூலைக் 
கொடுத்துள்ளேன்; தாங்களும் அதைப் 
படித்துள்ளீர்கள். 

அந்நூலில், ஆதிசங்கரர் கூறிய பிரதிபாஷிக  சத்யம், 
வியவகாரிய சத்யம், பரமார்த்திக சத்யம் ஆகிய 
மூன்று விதமான சத்தியங்களைப் பற்றி 
நூலின் பக்கங்கள் 26, 27ல் குறிப்பிட்டுளேன்.

தங்களின் முகநூல் பதிவில் நான் எழுதிய 
ஆதிசங்கரரின் மூன்று விதமான சத்தியங்கள் 
பற்றி தாங்கள் எடுத்தாண்டு உள்ளீர்கள்.
ஆனால் எனது நூலில் இருந்து எடுக்கப் பட்டது 
என்பதையோ நூலின் பெயரையோ கூறாமல் 
விட்டு விட்டீர்கள். எனவே அருள்கூர்ந்து 
என் பெயரையும் நூலின் பெயரையும் 
குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி.

என்னுடைய நூலில் இருந்து அல்ல; வேறொரு நூலில் 
இருந்து அந்த மேற்கோளை எடுத்தேன் என்று 
தாங்கள் கூறுவதானால், அது எந்த நூல், யார் 
எழுதியது என்பதையும் குறிப்பிடுமாறு அன்புடன் 
வேண்டுகிறேன்.

ஒன்றுதான், ஒன்றுதான், சத்தியம் ஒன்றுதான் என்று  
கத்திக் கொண்டிருந்த ஆதி சங்கரர் ஒன்றல்ல மூன்று 
சத்தியங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். 
இது அத்வைதத்தை கணிசமாக பலவீனப் படுத்தி 
விட்டது.இது பற்றியும் எனது நூலில் எழுதி உள்ளேன்.  



.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக