செவ்வாய், 13 செப்டம்பர், 2016

உங்கள் தெருவில் உள்ள பெட்டிக் கடைகளில்
12 வோல்ட் பாட்டரி, அதுவும் கோல்டன் பவர்
கம்பெனியின் பாட்டரி கிடைக்கிறதா என்று
வாசகர்கள் சோதித்துப் பார்க்கலாம்.

இதற்காக பேரறிவாளன் வெளியே வரவேண்டியதில்லை.
நீங்கள் திலீப் சோர்டியா என்னும் சேட்டு கடைக்குச்
செல்லுங்கள். அங்குதானே பேரறிவாளன் வாங்கினார்.


அவர்களை விடுவிப்பது இங்கு பிரச்சினையே அல்ல.
அவர்களை வைத்து, பொய்களைச் சொல்லி,
மக்களை ஏமாற்றி, பித்தலாட்டம் செய்து கொண்டு வரும்
மோசடிக் கும்பல் கூறும் பொய்களை அம்பலப் படுத்துகிறோம்.

ஈழ ஆதரவுப் போலிகள் யாரும் அந்த ஏழு பேரும்
விடுதலையாவதை விரும்பவில்லை. அவர்கள் விடுதலை
ஆகிவிட்டால் இவர்களின் பிழைப்பு முடிவுக்கு
வந்து விடும். இந்த ஏழு பேரின் விடுதலை என்பது
ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அதை போராட்டம்
என்ற பெயரில் அறுத்துப் பார்க்க இவர்கள் யாரும்
விஉம்பவில்லை. எனவே கண்துடைப்புப் போராட்டம்
நடத்துவார்கள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம்
கோடி கோடியாகப் பணம் கறந்து விடுவார்கள்.

அவர் தன் உண்மையான பெயரைச் சொல்லி
வாங்கவில்லை. ராஜன் என்ற போலிப் பெயரில்தான்
வாங்கியுள்ளார். தன்  உண்மையான ஜோலார்பேட்டை
முகவரியைக் கொடுக்கவில்லை. நளினியின் தாயார்
நர்ஸ் பத்மாவின் வீட்டு முகவரியைக் கொடுத்துள்ளார்.
இது நீதியரசரின் தீர்ப்பில் உள்ளது. தயவு செய்து
ஆங்கிலத்தில் எழுதி உள்ள பகுதியைப் படிக்கவும்.

மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டார்.

நமக்கான எல்லாக் கதவுகளும் மூடிக்
கிடக்கும்போது..... நம் தர்க்கம் எல்லாம் மடிந்து
விழுந்து விட்ட பின்னால்..... மனப்பூர்வமாக உண்மையை
ஒப்புக் கொள்வதைத் தவிர அவருக்கு ( அவருக்கு மட்டுமல்ல,
மற்ற எவருக்கும்) வேறு என்ன வழி இருக்கிறது.
hardcore criminal என்றால் எந்த நேரத்திலும் உண்மையைச்
சொல்ல மாட்டான். இவர் அப்படி hardcore அல்ல.
பணம் காசுக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் இறங்கிநார்.
இன்று அனுபவிக்கிறார்.


கிரிமினல்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு அந்த
நேரத்தில் ஒரு ஞானியின் மனநிலை வந்து விடும்.
எனவே எல்லா உண்மைகளையும் கொட்டி விடுவார்கள்.


மிக முக்கிய அறிவிப்பு:
------------------------------------------
இந்தப் படத்தில் உள்ள பாட்டரிகள் தற்போது 2016இல்
உள்ளவை. மிக நவீனமானவை. இவ்வளவு நவீனமான
பாட்டரிகள் அன்று இல்லை. அதிலும் green பாட்டரிகள்
என்பதே 1991இல் கிடையாது. 1991ஆம் ஆண்டுக்
காலத்திய பாட்டரியின் படம் கிடைக்கவில்லை.

அன்று 1991இல் எங்கள் பகுதியில் புரசைவாக்கத்தில் ஒரு கடையிலும்,
டவ்டனில் ஒரு கடையிலும் மட்டுமே கோல்டன் பவர்
பாட்டரி கிடைக்கும். வேறு கடைகளில் கிடைக்காது.
நாங்கள் அலுவலகப் பயன்பாட்டுக்கு வாங்கி
இருக்கிறோம். எனேர்ஜைசெர் அன்று அவ்வளவு
பிரபலம் இல்லை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக