ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

நெடுமாறனை சந்தி சிரிக்க வைத்த எம்.ஜி.ஆர்.
------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
-------------------------------------------------------------------------------- 
பாசிச இந்திராவின் அடிவருடி நெடுமாறன், ஒரு ஈழ ஆதரவு நாடகத்தை, எம்.ஜி. ராமச்சந்திர மேனனின் ஆட்சிக் காலத்தில்
நடத்தினார். ராமச்சந்திர மேனனோ அது ஒரு போலி நாடகம்
என்பதை அம்பலப் படுத்தி, நெடுமாறனை சந்தி சிரிக்க வைத்தார்.
சிறு வயது முதலே, பாய்ஸ் நாடகக் கம்பெனியில் பயிற்சி
பெற்று, சிறந்த நாடக நடிகராகவும், சினிமா நடிகராகவும்,
அரசியல் நடிகராகவும் திகழ்ந்த ராமச்சந்திர மேனனிடம்,
கத்துக்குட்டி நடிகரான நெடுமாறன் தோல்வி அடைந்தார்.
அது என்ன நிகழ்வு என்பதைக் கீழே காணவும்.
---------------------------------------------------------------------------------------------
"தியாகப் பயணம்"என்ற பெயரில் ஒரு நாடகத்தை, அதாவது,
போராட்டத்தை நெடுமாறன் அறிவித்தார். படகுகளை
ஏற்பாடு செய்து கொண்டு, ராமேஸ்வரம் கடற்கரையில்
இருந்து, யாழ்ப்பாணத்துக்குத் தியாகப் பயணம்(!!)
செல்வது என்பதுதான் அந்தப் போராட்டம். ஆட்களுடனும்
வாடகைப் படகுகளுடனும் ராமேஸ்வரம் கடற்கரையில்
திரண்டார் நெடுமாறன். படகுகளில் யாழ்ப்பாணம் செல்வது
என்பதுதான் அந்த நாடகம். ஆனால் உண்மையிலேயே
யாழ்ப்பாணம் போவது என்பது நெடுமாறனிடம் கற்பனையில்
கூடக் கிடையாது. எப்படியும் போலிசார் கைது செய்வார்கள்;
புரட்சி வேடம் போடலாம் என்று காத்திருந்தார் நெடுமாறன்.
-------------------------------------------------------------------------------------------------
 ஆனால், முதல்வர் மேனன் இதைத் திறம்பட முறியடித்தார்.
எந்தக் காரணம் கொண்டும் நெடுமாறனையோ அவரது
ஆட்களையோ கைது செய்யக் கூடாது; என்ன நடந்தாலும்
கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டுமே தவிர, வேறு
எதுவும் செய்யக் கூடாது என்று போலிஸ் அதிகாரிகளுக்குக்
கறாரான உத்தரவு பிறப்பித்தார் மேனன். வீரவுரை ஆற்றி
முடிந்ததும் படைகளில் ஏறப் போவதாகப் பாசாங்கு
செய்தார் நெடுமாறன். ஆனால் காவல் துறை அவர்களைக்
கைது செய்ய முன்வரவே இல்லை. மணிக்கணக்காகக்
காத்திருந்தும் போலிசார் மௌனச் சாமியார்களாக வேடிக்கை
பார்த்தனரே தவிர, கைது செய்யவில்லை.
ஏமாந்துபோன நெடுமாறன் வீடு திருப்பினார். அப்போது
செய்தியாளர்களிடம், தாங்கள் கைது செய்யப் பட்டதாகப்
பொய் கூறினார். சிறிது நேரத்தில் இந்தப் பொய்யை
காவல்துறை உயர் அதிகாரி மறுத்து உண்மையை
விளக்கினார். இவ்வாறு நெடுமாறனின்  போராட்ட நாடகம்
சந்தி சிரிக்க வைத்தது. பெரிய மீன் சிறிய மீனை
விழுங்கி விடுவதைப் போல, பெரிய நடிகர் மேனன்,
குட்டி நடிகர் நெடுமாறனை விழுங்கி ஏப்பம் விட்டார்.
-----------------------------------------------------------------------------------------------------     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக