செவ்வாய், 10 அக்டோபர், 2017

சந்திரனின் ஒளி பூமியை வந்தடைய
எவ்வளவு நேரம் ஆகும்?
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------
1) சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம்
15 கோடி கி.மீ ஆகும். சந்திரனுக்கும் பூமிக்கும்
இடையிலான தூரம் ( சராசரியாக mean distance)
384,402 கி.மீ ஆகும்.
2) சூரியனில் இருந்து புறப்படும் ஒளி பூமியை வந்தடைய
தோராயமாக 8 நிமிடங்கள் ஆகும். சந்திரனில் இருந்து
புறப்படும் ஒளி பூமியை வந்தடைய எவ்வளவு
நேரம் ஆகும்?
3) மிக எளிமையான கணக்கீடு. எவரும் செய்து பார்த்து
அறியலாம்.
தூரம் = 384,402 கி.மீ
ஒளியின் வேகம் = வினாடிக்கு 300,000 கி.மீ
நேரம்= தூரம்/வேகம்
= 384402/300000
= 1.28 வினாடி.
4) ஆக, சந்திரனில் இருந்து வரும் ஒளி பூமியை
வந்தடைய தோராயமாக ஒன்றேகால் வினாடி
ஆகிறது.
*********************************************************
பின்குறிப்பு: அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி
போன்ற நட்சத்திரங்களை நாம் அறிவோம். அஸ்வினி
நடச்சத்திரம் பூமியில் இருந்து எவ்வளவு  தூரத்தில்
இருக்கிறது? இந்தக் கேள்விக்கு வாசகர்கள் விடையளிக்க
வேண்டுகிறோம்.
----------------------------------------------------------------------------------------------------------

27 நட்சத்திரங்களும் வெறும் நம்பிக்கை அல்ல; மாறாக
அவை உண்மையான இருப்பைக் கொண்டவை. எந்த
மதமும் தோன்றுவதற்கு முன்னரே ஆதி மனிதன்
நட்சத்திரங்களை அடையாளம் கண்டான். அவற்றின்
வடிவத்தை வைத்து அவருக்குப் பெயரிட்டான். அஸ்வினி
நட்சத்திரம் குதிரை வடிவம் கொண்டது. வராஹ மிகிரர்
தமது நூலில் இந்த நட்சத்திரத்திற்கு அஸ்வினி என்று
பெயரிடுகிறார். உலகின் வெவ்வேறு பிரதேசங்களில்
வாழ்ந்த மக்கள் தத்தம் மொழிகளில் நட்சத்திரங்களுக்கு
பெயரிடுகிறார்கள்.
**
துருவ நட்சத்திரம் என்று நாம் கூறுவதை pole star என்று
மேற்கில் உள்ள மக்கள் கூறுகிறார்கள்.மொழிதான்
வேறு; பொருள் ஒன்றுதான். அஸ்வினி என்று நாம்
பெயரிட்ட நட்சத்திரத்தை மேற்கத்திய மக்கள்
ஆல்பா பீட்டா என்று குறிப்பிடுகிறார்கள்.
**
பின்னாளில் வானியல் சங்கம் நட்சத்திரங்களுக்கு
வானியல் பெயரை (astronomical name) அளிக்கிறது.
தாவரங்களுக்கு botanical name இருப்பது போல.
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக