வியாழன், 12 அக்டோபர், 2017

ஆர் கே நாராயணன் எழுதிய My English Teacher என்ற
சிறுகதை நினைவுக்கு வருகிறது. கதையில்,
அன்றைக்கு ஷேக்ஸ்பியர் பாடம். ஆசிரியரோ
தயாரிப்பு இல்லாமல் வகுப்புக்குச் சென்று விடுவார்.
இரண்டு நிமிடத்திற்கு மேல் அவரால் வகுப்பில்
தாக்குப் பிடிக்க முடியாது. கடிகாரத்தைப் பார்த்துக்
கொண்டே எப்போது இந்த period முடியும் என்று
ஏங்கிக்கொண்டே அந்த ஆசிரியர் படும் அவஸ்தையை
மிகுந்த கலைநயத்துடன் சொல்லி இருப்பார் ஆர் கே
நாராயணன்.
**
ஆக, ஒரு ஆசிரியருக்கு stuff மிகவும் முக்கியம்.
ஆசிரியத் தொழிலை விரும்பி மேற்கொள்வோர்
மட்டுமே காலந்தோறும் தங்களின் அறிவைப்
புதுப்பித்துக் கொண்டே இருப்பர். பிழைப்புக்கு
ஓர் வழியாக ஆசிரியப் பணியை மேற்கொள்வோரிடம் 
அர்ப்பணிப்பு  இல்லை என்பதையே இந்த நிகழ்வுகள்
உணர்த்துகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக