செவ்வாய், 3 அக்டோபர், 2017

பொருளாதாரக் கூகைகள்!
--------------------------------------------------
1) பொருளாதாரம் பற்றிய கொள்கைகள் (theories)
அனைத்தும், விதிவிலக்கின்றி, கறார் ஆனவை அல்ல.
எல்லாச் சூழலுக்கும் எல்லாக் காலத்துக்கும்
பொருந்துவன அல்ல.

2) கணிதம் இயற்பியல் கோட்பாடுகளைப் போல
கறார் ஆனதும் துல்லியமானதும் பிரபஞ்சத் தன்மை 
உடையனவும் அல்ல பொருளாதாரக் கொள்கைகள்.

3) sin தீட்டாவை cos தீட்டாவால் வகுத்தால் tan தீட்டா
கிடைக்கும் என்கிறது டிரிகனாமெட்ரி. டிரிகனாமெட்ரி
கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து இந்த விதி
மாறவில்லை. பாயில் விதியும் ஹூக் விதியும்
அன்று முதல் இன்று வரை மாறவில்லை. ஆனால்
பொருளாதாரக் கோட்பாடுகள் இத்தன்மை
உடையவை அல்ல.

4) எனவேதான் economic laws are hypothetical tendencies என்று
சொல்வார்கள். இது உண்மையே.

5) ஒரு தவறான கொள்கை என்று சொல்லப்படும் ஒரு
பொருளாதாரக் கொள்கை 100 சதமும் தவறானதாக
இருக்காது. குறைந்தது, say, 33 சதமேனும்  சரியானதாக
இருக்கும். அது போல, சரியான கொள்கை என்று
கொண்டாடப்படும் ஒரு பொருளாதாரக் கொள்கையானது
say, 33 சதம் சூழல்களில் தவறானதாக இருக்கும்.

6) இது பொருளாதாரக் கோட்பாடுகளின் இயல்பு.

7) சில பொருளாதார நிபுணர்களை நான் அறிவேன்.
கடந்த 40 ஆண்டுகளாக, தினமும் ஆங்கில இந்து
ஏட்டையும் எக்கனாமிக் டைம்ஸ் ஏட்டையும்
படித்து வருபவர்கள் அவர்கள்.

8) எதையும் படிக்காமல், எந்த அறிவும் இல்லாமல்,
பொருளாதாரக் கோட்பாடுகளைப் பற்றி கருத்துச்
சொல்லும் ஒரு பெரும் மூடர் கூட்டம் இந்தியாவில்
உண்டு. இதற்குக் காரணம், பொருளாதாரம் என்ற
subjectன் தன்மை. சகல விதமான மூடத்தனங்களுக்கும்
இடமளிக்கும் பண்பு பொருளியலுக்கு உண்டு.

9) பொருளாதாரம், வரலாறு, இலக்கியம் ஆகிய
பாடங்களை யார் யாரெல்லாம் படித்து பட்டம்
வாங்குகிறார்கள் என்ற உண்மையை இங்கு உடைத்துச்
சொன்னால் பலருக்கு மனவருத்தம் ஏற்படும்.
எனவே அதைத் தவிர்த்து விடலாம்.

10) பணமதிப்பு நீக்கம், GST ஆகியவை குறித்து
முட்டாள்தனத்தின் உச்சம் தொடுகிற மூட
வெளிப்பாடுகளை (revelations) பரவலாகக் காண
நேர்கிறது. Almost everyone is living in Fools' paradise!

11)  Let them live there and why should I disturb them?
********************************************************** 
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக