வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

காவிரித் தீர்ப்பை வரவேற்போம்!
-----------------------------------------------------------
1) தொலைநோக்குப் பார்வையில் காவிரி குறித்த
உச்சநீதிமன்றத்தின் இன்றைய (16.02.2018) தீர்ப்பை
வரவேற்கலாம்; வரவேற்போம்.

2) இத்தீர்ப்பை எதிர்த்து ஏதேனும் ஒரு வகையில்
மேல்முறையீடு செய்தால், தற்போது கிடைத்துள்ள
177.25 டிஎம்சி தண்ணீர் மேலும் குறையவே வாய்ப்பு
உள்ளது.In a bargaining counter we cannot get exactly one pound of flesh!

3) இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக் கூடாது
என்கிறது உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு
மட்டுமே செல்லுபடியாகும் என்கிறது உச்சநீதிமன்றம்.

4) நடுவர்மன்றத் தீர்ப்பு அறிவித்த 192 டிஎம்சியையே
உச்சநீதிமன்றமும் தீர்ப்பாக வழங்கி இருக்குமானால்
அதை ஒருபோதும் கர்நாடகம் செயல்படுத்தாது.

5) தற்போதைய தீர்ப்பானது, கர்நாடகத்தைப் பொறுத்த
மட்டில், நடைமுறைப் படுத்துவதற்கு உகந்தது என்று
நீதிமன்றம் கருதுகிறது.

6) இந்திய ஒன்றியத்தில், தமிழகத்தின் உரிமைகள்
மறுக்கப் படுகின்றன என்பது உண்மையே. உலக
வரலாற்றிலேயே  பல்வேறு தேசிய இனங்கள், பிரிந்து
செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய
உரிமையைப் பெற்று ஒரே குடியரசாக இணைந்தன
என்றால் அது சோவியத் சோஷலிஸக் குடியரசில்
மட்டுமே. லெனின் காலத்தில் விரும்பி இணைந்த
குடியரசுகள்,  கோர்பச்சேவ் காலத்தில் பிரிந்தன.
இந்திய ஒன்றியத்தில் பிரிந்து செல்லும் உரிமை
எந்த தேசிய இனத்திற்கும் வழங்கப்படவில்லை.

7) அதே நேரத்தில், தற்போதைய காவிரிநீர்ப் பங்கீட்டுப்
 பிரச்சினை இந்திய ஒன்றியத்திற்கும்
தமிழகத்திற்குமான பிரச்சினை அல்ல என்பதையும்
கவனம் கொள்ள வேண்டும்.

8) இது கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்குமான
பிரச்சினை என்பதே உண்மை. இந்தப் பிரச்சினை
இத்தனை ஆண்டு காலமாக நீடிப்பதும், இதில்
தமிழகம்  தொடர்ந்து வஞ்சிக்கப் படுவதும்
மூடத்தனமான திராவிட நாட்டுக் கொள்கையின்
மீதான சம்மட்டி அடியாகும்.

9) போலியானதும் பொருந்தாததுமான திராவிட
இனவியல் கோட்பாடே தமிழகத்தின் உரிமைகள்
பொசுக்கப் படுவதற்கு காரணமாகும்.
இதை உணராத வரையில் விடிவு இல்லை.

11) நடுவர்மன்றத் தீர்ப்பான 192 டிஎம்சியே இப்போதும்
தீர்ப்பாக வந்திருக்குமானால், இந்நேரம் கர்நாடகம்
எரிமலையாக வெடித்திருக்கும். ஆனால் தமிழகத்தில்
என்ன நடந்திருக்கும்? ஒரு மயிரும் நடந்திருக்காது.

12) காரணம், இங்கு தமிழ் தேசிய இனத்தின்
எழுச்சியானது, பொருந்தாத திராவிட இனவியல்
கோட்பாட்டால் கடந்த நூறாண்டு காலமாக
நயவஞ்சகமாக  அடக்கியும் ஒடுக்கியும்
வைக்கப்பட்டு இருக்கிறது.

13) காவிரி எங்கே போய் விடுகிறது? அதுவும்
திராவிடத்தில்தானே இருக்கிறது!  கூச்சல் ஏன்?
இதுதான் திராவிட இனவியல் கொள்கை
வழங்கும் தீர்ப்பு!
*********************************************************
பின்குறிப்பு:
-----------------------
1)1991இல் வழங்கப்பட்ட 205 டிஎம்சி தீர்ப்பை கர்நாடகம்
மதிக்கவில்லை. கர்நாடகம் முழுவதும் இருந்த
தமிழர்கள் மீது தாக்குதல் தொடுக்கப் பட்டது.
ஒரு லட்சம் தமிழர்கள் அடித்து விரட்டப் பட்டனர்.

2) கடந்த 2016 தீர்ப்பின்போது (192 டிஎம்சி), தமிழர்களின்
உடைமைகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
கர்நாடகத்தில் 250 பேருந்துகள் (KPN பேருந்துகள் உட்பட)
தீவைத்து எரிக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக