திங்கள், 19 பிப்ரவரி, 2018

எந்த அசைவையும் ஏற்படுத்தாமல்
கடந்துபோன டார்வின் பிறந்த நாள்!
மக்களைச் சென்றடையாத பரிணாமக் கொள்கை!
----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------
1) இது பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய
கட்டுரை அல்ல.

2) இங்கிலாந்து விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் (1809-1882)
பரிணாமக் கொள்கை இன்று இந்த 2017இல் கூட
மக்களிடம் சென்று சேரவில்லை.

3) குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்பதைத்
தாண்டி, பரிணாமக் கொள்கை பற்றி மக்கள்
அறிந்திருக்கவில்லை. இது மிகவும் கருநிலையிலான
புரிதல் மட்டுமே.

4) மதங்கள் அனைத்தும் படைப்புக் கொள்கையை
(creationism) வலியுறுத்துகின்றன.

5) படைப்புக் கொள்கையை அறிவியல் ஏற்கவில்லை.
பிரபஞ்சம் (universe) எப்படி உருவானது என்பதற்கு
பெருவெடிப்புக் கொள்கையை (big bang theory)
அறிவியல் முன்வைக்கிறது.

6) உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பதற்கு
டார்வினின் பரிணாமக் கொள்கையை
(theory of evolution) அறிவியல் முன்வைக்கிறது.

7) ஆக இந்த உலகத்தில் இரண்டே இரண்டு
கொள்கைகள்தான். ஒன்று, மதங்கள் கூறும்
படைப்புக் கொள்கை. இன்னொன்று, அறிவியல்
கூறும் பெருவெடிப்பு மற்றும் பரிணாமக் கொள்கை.
மூன்றாவதாக ஒரு கொள்கை கிடையாது.

8) இயற்பியல் படித்தவர்கள் பெருவெடிப்புக்
கொள்கையை அறிந்திருப்பர். உயிரியல் படித்தவர்கள்
பரிணாமக் கொள்கையை அறிந்திருப்பர்.

9) மதங்கள் இன்றும் தங்களின் படைப்புக்
கொள்கையை  பரப்பி வருகின்றன. இதற்கு
எதிரான பெருவெடிப்புக் கொள்கையும் பரிணாமக்
கொள்கையும் மதங்களின் பரப்புரைக்கு ஈடு
கொடுக்கிற அளவுக்கு மக்களிடம் சென்று சேரவில்லை.

10) டார்வினின் பரிணாமக் கொள்கை தவறு என்றும்
அதைப் பள்ளிகளில் கற்பிக்கக் கூடாது என்றும்
சமூகத்தில் குரல்கள் எழுகின்றன. எனவே பரிணாமக்
கொள்கை சரியானது என்று நிறுவப் பட்ட கொள்கையே 
என்ற உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்ல
வேண்டிய கடமை அறிவியலுக்கு உள்ளது.
அறிவியலுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும்
உள்ளது.

11) தங்களை கடவுள் மறுப்பாளர்கள் என்றும்
பகுத்தறிவாளர்கள் என்றும் போலியாக உரிமை
கொண்டாடும் பெருங்கூட்டமே தமிழ்நாட்டில்
உள்ளது. எனினும் இவர்களில் ஒருவர் கூட
பரிணாமக் கொள்கை மீதான தாக்குதலைக்
கண்டு கொள்ளவில்லை. பெருவெடிப்புக்
கொள்கையையும் பரிணாமக் கொள்கையையும்
மக்களிடம் கொண்டு செல்வது பற்றி இந்தக்
கூட்டத்திற்குத் துளியும் அக்கறை இல்லை.

12) கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன்,
விடுதலை ராசேந்திரன் போன்ற போலிப்பகுத்தறிவு
மூடர்கள் பரிணாமக் கொள்கையை மக்களிடம்
பரப்ப இதுவரை என்ன செய்துள்ளனர்? ஒரு
ரோமமும் இல்லை.

13) டார்வின் பிறந்த நாள் (பெப்ரவரி 12) அண்மையில்
கடந்து போனதே! அந்த நாளைப் பயன்படுத்தி
டார்வினின் பரிணாமக் கொள்கையை மக்களிடம்
கொண்டு செல்ல இவர்கள் செய்தது என்ன?

14) பெரும்பணமும், அரங்க வசதிகளும், ஆள் பலமும்
பிற வசதி வாய்ப்புகளும் கொண்டிருக்கும் இவர்கள்
குறைந்தபட்ச அறிவியலை மக்களிடம் பரப்ப
இதுவரை செய்தது என்ன? இனிமேலும் செய்யப்
போவது என்ன?

15) அறிவியல் கூட்டம் என்றால் மேடை மட்டும்
போதாது. ப்ரஜெக்ட்டர் ஏற்பாடு வேண்டும். காணொளிக்
காட்சி இல்லாமல் அறிவியல் கோட்பாடுகளை
விளக்க முடியாது. குறைந்தபட்சம் கரும்பலகை
சாக்பீஸ் வேண்டும். வெறுமனே மைக் முன்னால்
கத்துவதற்கு அறிவியல் விளக்கம் என்பது இலக்கியக்
கூட்டம் போன்றதல்ல.

16) அண்மையில் BREAKTHROUGH SCIENCE SOCIETY என்ற
மார்க்சிய டிராட்ஸ்கிய அறிவியல் அமைப்பு டார்வின்
பிறந்த நாளை ஒரு வாரமாக (Darwin week) கொண்டாடியது.
சென்னையில் லயோலா கல்லூரியில் பரிணாமக்
கொள்கையை விளக்கி ஒரு சொற்பொழிவும், ஒரு
ஆவணப்படத் திரையிடலும் நடைபெற்றது. இதற்கு
தங்களின் வகுப்பறையை (smart class room) இலவசமாக
வழங்கிய லயோலா கல்லூரிக்கு நன்றி.

17) 50 லட்சத்திற்கு மேல் மக்கள்தொகையைக்
கொண்டுள்ள சென்னை நகரத்திற்கு ஒரே ஒரு கூட்டம் போதுமானதல்ல. உண்மையில் இது கடலில்
காயம் கரைத்த கதைதான். என்றாலும் ஒரு
அமைப்பானது தன்னிடம் உள்ள வசதி வாய்ப்புகளைக்
கொண்டு  இவ்வளவுதான் செய்ய இயலும்.

18) பெரும் பணமும் வசதி வாய்ப்புகளும் கொண்டுள்ள
போலிகள் இது போன்ற விஷயங்களில் தாங்களாகவே
முன்கை எடுக்க வேண்டாமா?

19) பணியில் இருக்கும்போது தன்னுடைய
சம்பளத்திலும், ஒய்வு பெற்ற பின் தன்னுடைய
பென்சன் பணத்திலும் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் நிறுவனர் அறிவியல் கூட்டங்களை
நடத்தி வந்தார்: வருகிறார். என்றாலும் ஒரு கூட்டம்
நடத்துவதற்கு குறைந்தது ரூபாய் பத்தாயிரம்
இல்லாமல் ஒரு ரோமமும் பிடுங்க முடியாது.

20) Every activity is associated with money input.பணம் இல்லாமல்
அறிவியலைப் பரப்ப முடியாது. யாருடைய தாலியை
அறுத்து அறிவியலைப் பரப்புவது?
***********************************************************


       

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக