வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

நான் ஏன் வேண்டுமென்றே தப்பாக எழுத நேர்கிறது?
தமிழறிஞர்கள் கவனத்திற்கு!
----------------------------------------------------------------------------------
1) நாளை முழு அடைப்பு; பஸ்கள் ஓடாது.
2) ரயில்பாதை பராமரிப்பு; உள்ளூர் ரயில்கள் ஓடாது.
3) அதிரசம் ஒரு எண்ணெய்ப் பண்டம்; அது உடலுக்கு
நல்லது அல்ல.
4) புகை பிடித்தல் நல்ல பழக்கம் அல்ல.

மேற்கூறிய நான்கு வாக்கியங்களும் பிழையானவை.
அப்படியானால் சரியான வாக்கியங்கள் எவை?

1) பஸ்கள் ஓடா.
2) ரயில்கள் ஓடா.
3) உடலுக்கு நல்லது அன்று.
4) நல்ல பழக்கம் அன்று.

இன்னும் சொல்லப் போனால், "நல்லதன்று" என்று சேர்த்துத்தான்
எழுத வேண்டும். நல்ல பழக்கமன்று என்றுதான் எழுத வேண்டும்.
அப்படி எழுதுவதுதான் சரி.

ஒரு எண்ணெய்ப் பண்டம் என்று எழுதுவது பிழை.
ஓர் எண்ணெய்ப்பண்டம் என்றுதான் எழுத வேண்டும்.

ஆனால், உண்மை நிலை என்ன? இரண்டாம் பத்தியில்
உள்ளபடி சரியாக எழுதினால் சராசரி வாசகனுக்குப்
புரியாது. நாம் தப்பாக எழுதி விட்டோம் என்று அவன்
நினைப்பான். எனவே நாம் எழுதுவது நூறு சதமும்
புரிய வேண்டும் என்ற நோக்கில் நான் வேண்டுமென்றே
பிழையாக எழுதுகிறேன்.

இவற்றை எல்லாம் வழுவமைதியாக மாற்றி என்னைக்
காப்பாற்றுமாறு தமிழுக்குப் புதிய இலக்கணம்
சமைப்போரைக் கேட்டுக் கொள்கிறேன்.
-------------------------------------------------------------------------------------------        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக