செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவும்
பத்ம விருதுகள் குறித்த தவறான பொய்யான பட்டியல்!
காசு பெற்றுக் கொண்டு எழுதும் அடையாள அரசியல் கயமை!
-------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------------------------------
1) பேரா சென்ன பசவய்யா என்பவர் வெளியிட்டுள்ள பத்ம
விருதுகள் பட்டியலில் சாதி என்ற புள்ளி விவரம் அடங்கிய
பட்டியல் போலியானது; தவறானது; திரித்துக் கூறப் படுவது.

2) இந்தியச் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுண்ட சமூகம்
என்ற உண்மையை மறைத்து விட்டு, இந்தப் பட்டியல்
வெளியிடப் பட்டுள்ளது.

3) 1954 முதல் இன்று வரை (2015) பத்ம விருதுகள் வழங்கப்
பட்டு வருகின்றன.  இந்தப் பட்டியல் 2015ஆம் ஆண்டிற்கானது
என்று குறிப்பிடப் படவில்லை. எனினும் 2015 என்றே கொள்ளலாம்.

4) பத்ம விபூஷண்-9; பத்ம பூஷண்-20; பத்மஸ்ரீ-75; ஆக மொத்தம் 104
பத்ம விருதுகள் வழங்கப் பட்டுள்ளன. (2015க்கு உரிய விருதுகள்).

5) மொத்தமுள்ள 9 பத்ம விபூஷன் விருதுகளில்
சிறுபான்மையினருக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.
அ) பிரகாஷ் சிங் பாதல் ஆ)ஹுசைனி ஆகா கான் (பிரான்சு)
இ) முஹம்மது யூசுப் கான்.

6) முஹம்மது யூசுப் கான் என்பவர்தான் இந்தி நடிகர்
திலீப்குமார் என்று அறியப் படுபவர். 

7) பத்ம பூஷண் விருதுகள் 20இல், 5 விருதுகள் வெளிநாட்டவர்க்கு
வழங்கப் பட்டு உள்ளன. இவற்றில் 4 விருதுகள் இந்தியரல்லாத
மற்றும் இந்திய வம்சாவளியைச் சேராத பின்வரும்
நால்வருக்கு கிடைத்துள்ளது.
அ) பில் கேட்ஸ் ஆ) மெலிண்டா கேட்ஸ் இ)டேவிட்  ஃபிராலி
(இம்மூவரும் அமெரிக்கர்கள்) ஈ)சைச்சுரோ மிசுமி (ஜப்பான்).
இவர் நேத்தாஜியின் சீடர்களில் இன்றும் உயிரோடு இருப்பவர்.

8) பேரா சென்ன பசவய்யா என்பவர் தீய உள்நோக்கத்துடன்
எழுதிய பட்டியல் பொய்யானது என்பதை மேலே தரப்பட்ட
உண்மையான புள்ளி விவரங்கள் நிரூபிக்கின்றன. ஒரு
சாம்பிள் என்ற அடிப்படையில் மட்டுமே ஒரு சில
விவரங்கள் மட்டும் இங்கு எடுத்து உரைக்கப் பட்டன.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு.
-----------------------------------------------------------------------------------------------------       
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக