திங்கள், 1 பிப்ரவரி, 2016

மக்கள் நலக் கூட்டணியில் விரிசல்!
வலுக்கும் தலித் முதல்வர் கோரிக்கை!
வைகோ கொதிப்பு!
--------------------------------------------------------------
மக்கள்நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக
திருமாவளவனை அறிவிக்க வேண்டும் என்று வி.சி.க
கட்சியினர் வைகோவுக்கு கடும் நெருக்கடி
கொடுத்து வருகின்றனர். இதனால் வைகோ கடும்
அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நல்லகண்ணுவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாமே
என்று பக்கத்து இலைக்குப் பாயாசம் கேட்டு, இப்பிரச்சினையை
முதலில் தொடங்கி வைத்தார் திருமாவளவன். தற்போது
வி.சி.க பொதுச் செயலாளரான ரவிக்குமார் தலித் முதல்வர்
என்ற முழக்கத்தை வலுவாக எழுப்பி வருகிறார்.

தலித் முதல்வர் என்ற கோரிக்கை கோட்பாட்டு ரீதியாக
சமூகத்தைப் பிளவு படுத்தி விடும் என்பதால், அக்கோரிக்கை
தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று கம்யூனிஸ்ட்கள்
வைகோவிடம் தெளிவு படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணி என்றாலே வைகோதான் முதல்வர்
என்பதுதான் இங்கு எழுதப் படாத சட்டம் என்று வி.சி.க
தோழர்களிடம் மதிமுகவினர் தெரியப் படுத்தி விட்டனர்.
இது வி.சி.க கட்சியினரை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி
இருக்கிறது.

திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கா விட்டால்
கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று வி.சி.க
தொண்டர்கள் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
வைகோவின் கொடும்பாவியை ஆவேசத்துடன்  கொளுத்த
முயன்ற கட்சித் தொண்டர்களை பொறுமை காக்குமாறு
அறிவுறுத்தி உள்ளார் திருமாவளவன்.

ஆக முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல்
ஆகி விடுமோ  ம.ந.கூ என்று பெருங்கவலையில்
இருக்கிறாராம் வைகோ.

அத்தைக்கு மீசை முளைத்தால்தானே சித்தப்பா;
அதற்கு முன்பே இப்படி குஸ்தி போடுகிறார்களே
என்று எள்ளி நகையாடுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
*************************************************************     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக