திங்கள், 13 பிப்ரவரி, 2017

வானத்தின் விளிம்பு!
லண்டன் இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியரின் உரை!
சென்னை பிர்லா கோளரங்கில் அறிவியல் கூட்டம்!
------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------------
இன்று (13.02.2017, திங்கள்) மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி
வரையிலான இரண்டு மணி நேரம் பொன்பொழுதாய்க்
கழிந்தது. தமிழகத்தின் இழிந்த அரசியலில் இருந்து
வெகுதூரம் விலகி நிற்க முடிந்தது.

வானத்தின் விளிம்பு (The Edge of the Sky) என்ற தலைப்பில்,
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர்
Prof Roberto Trotta (Theoretical Cosmologist) பிரபஞ்சம் குறித்து
உரையாற்றினார். power point presentation இணைந்த உரை/

பிரிட்டிஷ் கவுன்சில் இந்த நிகழ்வுக்கு ஸ்பான்சர்
செய்து இருந்தது. TANASTRO (TN Astronomical Assn) இந்த
நிகழ்வை நடத்தியது. கோளரங்க இயக்குனர் திரு
அய்யம்பெருமாள் அவர்களும், துணை இயக்குனர்
திரு சவுந்திரராஜப் பெருமாள் அவர்களும் அறிமுகவுரை
ஆற்றினர்.

உரை முடிந்தபின் அவையோரின் கேள்விகளுக்கு
பேராசிரியர் ரொபேர்ட்டோ பதிலளித்தார். மொத்த
நிகழ்வும் ஆங்கிலத்தில் மட்டும் இருந்தது.

அழைப்பிதழ் அனுப்பப் பட்டவர்களுக்கு மட்டுமே
அனுமதி என்பதால், இக்கூட்டம் பற்றி முன்னமே
நாங்கள் தெரிவிக்கவில்லை.

அற்புதமான நிகழ்வு
*************************************************************************!           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக