வெள்ளி, 14 ஏப்ரல், 2017

எந்தக் கொம்பனாலும் இடஒதுக்கீட்டை
ரத்து செய்ய முடியாது!
உபியில் இடஒதுக்கீட்டை எவராலும்
ரத்து செய்ய முடியாது!
---------------------------------------------------------------------
1) இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டுமென்றால்,
இந்திய நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத்
திருத்தம் கொண்டு வந்து, அதை மூன்றில் இரண்டு
பங்கு மெஜாரிட்டியுடன் நிறைவேற்ற வேண்டும்.
அப்போதுதான் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியும்.
எந்த ஒரு மாநில முதல்வராலும் இட ஒதுக்கீட்டை
ரத்து செய்ய முடியாது.

2)உபியில் யோகி அரசு இடஒதுக்கீட்டை ரத்து செய்து
விட்டதாக வரும் செய்தி பொய்யானது.

3) உபி மாநிலத்துக்கு தனியாக ஒரு அரசமைப்புச்
சட்டம் (constitution) கிடையாது. உபி முதல்வர் என்பவர்
ஒரு முதல்வர்தானே தவிர, பிரதமர் அல்ல. எனவே
உபி முதல்வரால், அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த
இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது.

4) ஒருவேளை அப்படி முட்டாள்தனமாக, உபி முதல்வர்
அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த இடஒதுக்கீட்டை
ரத்து செய்வார் என்று வைத்துக் கொள்வோம்.
அப்போது என்ன நடக்கும்? ஆட்டமேட்டிக்காக,
அவரின் ஆட்சி 356ஆவது பிரிவின்கீழ் உடனே
கலைக்கப் பட்டு விடும்.

5) எனவே இட ஒதுக்கீடு ரத்து என்று பொய்ச் செய்தி
 தங்களின் தவறை உணர்ந்து திருந்த வேண்டும்.

6) அரசமைப்புச் சட்டம் உறுதி செய்த இட ஒதுக்கீடு
இன்றும் உபியில் தொடர்கிறது. நாளையும் தொடரும்.
எனவே பொய்யான தகவல்களை, ஆராயாமல்
பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

7) தனியார் துறையில் இட ஒதுக்கீடு கிடையாது என்பதை
நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டப்படி, அரசுத் துறையில் மட்டுமே இட ஒதுக்கீடு உண்டு.உபியில்
அகிலேஷ் முதல்வராக இருந்தபோது, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கான
50 சதம் இட ஒதுக்கீடு என்ற பெயரில்,2016 செப்டம்பரில்
ஒரு  தெளிவற்ற இடஒதுக்கீடு முறையைக் கொண்டு
வந்தார். இதை எதிர்த்து
அநேக வழக்குகள் லக்னோ உயர்நீதிமன்றத்தில்
தாக்கல் செய்யப் பட்டன. லக்னோ உயர்நீதிமன்றம்
அகிலேஷ் கொண்டு வந்த இடஒதுக்கீடு முறையை
ரத்து செய்து விட்டது.

8)உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று, அகிலேஷ் அரசு
இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுவது என்று முடிவு
எடுத்தது. அந்த முடிவை இப்போது யோகி அரசு
செயல்படுத்துகிறது. இதுதான் விஷயம்.

9) இதை நன்கு மனதில் பதிக்கவும்.
2016 செப்டம்பரில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில்
இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் அகிலேஷ்.
அதை ரத்து செய்தவரும் அகிலேஷ். இதுதான் உண்மை.

10)  அம்பேத்கார் ஏகப்பட்ட பாதுகாப்பு அரண்களுடன்
இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச்
செய்தார். அதை அவ்வளவு சுலபமாக எந்த ஒருவராலும்
ரத்து செய்ய முடியாது.
************************************************************************
பின்குறிப்பு:
நான் கடந்த கால் நூற்றாண்டு காலத்திற்கும்
மேலாக இடஒதுக்கீடு சார்ந்து போராடி வருகிறேன். இடஒதுக்கீடு
குறித்து அகில இந்திய அளவில் மட்டுமின்றி, ஒவ்வொரு
மாநிலத்திலும் உள்ள நிலையை அறிவேன். மேற்கு வங்கத்தில்
பிற்பட்டோர் ஒதுக்கீடு கிடையாது. அதைக் கொண்டுவர
பாடுபட்டோரில் நானும் ஒருவன். எனவே உபி அரசு
குறித்த இந்த விவகாரம் அகிலேஷ் யாதவ் காலத்தில்
எடுத்து அறிவிக்கப்பட்ட முடிவு. அதை இப்போதைய
முதல்வர் யோகி செயல்படுத்துகிறார்.
**************************************************************************  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக