செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கண்ணுக்குத் தெரியாத மனிதன்!
யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழ முடியுமா?
-------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------------------
இது மறு வாசிப்புக்கான காலம். இது பின்நவீனத்துவம்
கூறுகிற மறுவாசிப்பு அல்ல. இளவயதில் படித்ததை
தற்போது மீண்டும் படிப்பது.

The Invisible Man என்று ஒரு நாவல். எழுதியவர்  ஹெச் ஜி வெல்ஸ்.
இங்கிலாந்து நாட்டு அறிஞர். காலம்: 1866-1946. உண்மையில்
இது ஒரு அறிவியல் புனைவு (science fiction).

என்னுடைய 30ஆவது வயதில் இதைப்படித்தேன்.
இன்று ஒரு பழைய புத்தகக் கடையில் இதைப்
பார்த்ததும் வாங்க விரும்பினேன். புத்தகத்தின்
விலை ரூ 50 மட்டுமே. உண்மையில் இன்று இப்புத்தகம்
ரூ 400 விலைக்கு குறைவாகக் கிடைக்காது.

complete and unabridged புத்தகம் இது. இன்றிரவு இதைப் படிக்கத்
தொடங்குவேன்.

இது அறிவியல் புனைவு என்று சொன்னேன் அல்லவா?
எனவே இயற்பியலில் குறிப்பாக ஒளியியலில் (optics)
சிறிது அறிவு தேவை. அப்போதுதான் இதைப் படித்துப்
புரிந்து கொள்ள இயலும்.

கதாநாயகன் கிரிஃபின் (Griffin) தன் உடலின்
ஒளிவிலகல் எண்ணை (refractive index) காற்றின்
ஒளிவிலகல் எண்ணுக்குச் சமமாக வைத்துக்
கொள்வதன் மூலம், யார் கண்ணுக்கும் தெரியாமல்
வாழ்கிறார் என்பது கதை.

நிற்க. ஒளிவிலகல் குறித்த ஓர் எளிய கணக்கைச்
செய்து மகிழ்வதன் மூலம் ஹெச் ஜி வெல்சுக்கு
மரியாதை செய்வோம். கணக்கு இதுதான்:

The refractive index of a dense flint glass is 1.65 and for alcohal
it is 1.36 both with respect to air. Now determine the refractive index
of the dense flint glass with respect to alcohal.

ஒரு அடர்த்தியான கண்ணாடி மற்றும் ஆல்கஹாலின்
ஒளி விலகல் எண்கள் காற்றைப் பொறுத்து முறையே
1.65 மற்றும் 1.36. அப்படியானால், ஆல்கஹாலைப்
பொறுத்து அடர்த்தியான கண்ணாடியின் ஒளி விலகல்
எண்ணைக் கண்டுபிடிக்கவும்.

விடைகள் வரவேற்கப் படுகின்றன.
*********************************************************************

                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக