வெள்ளி, 28 ஏப்ரல், 2017

கடவுள் இல்லை என்று கூறுவோர்
அதை நிரூபிக்க வேண்டும்! இது கடமை!
-------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
--------------------------------------------------------------------------
1) கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அதை
நிரூபிக்கத் தேவையில்லை. கடவுள் உண்டு என்று
சொல்பவர்கள்தான் அதை நிரூபிக்க வேண்டும்.

2) இப்படி ஒரு கருத்து தமிழ்நாட்டில் உலவுகிறது.
இது அறிவியலுக்கு எதிரானது. இக்கருத்தை அறிவியல் ஏற்பதில்லை.

3) ஒரு கூற்று (a statement) என்று இருந்தால், அது
நிரூபிக்கப்பட வேண்டும். நிரூபிக்கப் பட்ட
கூற்று ஒரு தேற்றம் ஆகும். நிரூபிக்கப் படாத
கூற்று இகழ்ச்சியுடன் நிராகரிக்கப் படும்.

4) A statement with a PROOF is called a THEOREM whereas a statement
WITHOUT a proof will find its place in a dust bin.

5) கடவுள் இருக்கிறார் என்பது ஒரு கூற்று.
கடவுள் இல்லை என்பதும் ஒரு கூற்று.
பின்னது ஓர் எதிர்மறைக் கருத்தைக் கூறுகிறது
என்பதாலேயே அது நிரூபிக்கப் பட வேண்டியதில்லை
என்று பொருளாகாது.  

6) உண்டு-இல்லை என்பது ஒரு பிரிக்க இயலாத
பைனரியாக உள்ளது. இது பரஸ்பரம் விலக்கத்
தக்கதாக (mutually exclusive) உள்ளது.

7) MUTUALLY EXCLUSIVE என்பதை சரியாகப் புரிந்து
கொள்ள வேண்டும். ஒரு நாணயத்தைச்
சுண்டும்போது, தலை விழலாம்; அல்லது பூ
விழலாம். தலை விழுந்தால் பூ விழாது.அதாவது
விழ இயலாது. அதே போல, பூ விழுந்தால் 
தலை விழாது; விழ இயலாது. இந்த நிலையே
MUTUALLY EXCLUSIVE எனப்படும். 

8) MUTUALLY EXCLUSIVE நிகழ்வுகளில், அதாவது
கடவுள் உண்டா, இல்லையா என்பது போன்ற
விஷயத்தில், ஒன்றை நிருபிப்பது என்பதே
இன்னொன்றைப் பொய்ப்பிப்பது என்று
பொருள்படும்.

9) என்றாலும், இரு தரப்பாரும் தங்களின்
கருதுகோளை நிரூபிக்க கடமைப் பட்டவர்கள்.
இதில் எவ்விதமான தப்பித்தல்வாதமும் (ESCAPISM)
அனுமதிக்கப் படாது.

10) எனவே கடவுள் உண்டு என்று சொல்பவர்கள்
அறிவியல் வழியில் அதை நிரூபிக்க வேண்டும்.
அதே போல, கடவுள் இல்லை என்பவர்களும்
தங்களின் கருத்தை அறிவியல் வழியில் நிரூபிக்க
வேண்டும்.

11) கடவுள் இல்லை என்பதை நியூட்டன் அறிவியல்
மன்றம் அறிவியல் வழியில் நிரூபித்து இருக்கிறது.
மீண்டும் நிரூபிக்கும். இதற்காக ஒரு சிந்தனைப்
பரிசோதனையை நாங்கள் வடிவமைத்து
வருகிறோம்.
(working hard on devising a THOUGHT EXPERIMENT).
********************************************************** 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக