செவ்வாய், 11 ஏப்ரல், 2017

அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் நடந்த
இடைத்தேர்தல்களில் ஏன் திமுக வெற்றி பெற
முடியவில்லை? திமுகவுக்கு மக்களிடம் செல்வாக்கு
இல்லை என்பதாலா? இல்லை. அங்கே பணம் விளையாடியது.
ஏழை எளிய ஜனங்கள் விலைபோய் விட்டார்கள்.
ஆர்கே நகரில் நிலைமை படுமோசம். எல்லோரையும்
விளக்கு வாங்கி விட்டார் தினகரன்.

1967 முதல் தேர்தல்களில் நேரடியாகப் பங்கேற்று
வருகிறேன். இங்கு நான் கூறியுள்ளது கள யதார்த்தம்.
இது கற்க வேண்டிய பாடம். படிக்க வேண்டிய படிப்பினை.
தளபதி அவர்களும் மூத்த தலைவர்களும் இந்த உண்மையை
உணர்ந்து தக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்
என்பதை உணரவும்.
------------------------------------------------------------------------------------------
ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் யார்?
-----------------------------------------------------------------------------------------
வரும் 2017 ஜூன் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான
வேட்புமனு தாக்கல் தொடங்கி விடும். ஜூலை 22இல்
முடிவு அறிவிக்கப்படும்.

பாஜக வேட்பாளர் வெற்றி பெற 5,50,000 வாக்கு மதிப்புகள்
(அதாவது வாக்குகள்) தேவை.பாஜகவின் சொந்த
பலத்திலேயே 5.25,000 வாக்குகள் உள்ளன. அதன்
கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஆதரவு தெரிவிக்கும்
கட்சிகளின் வாக்குகளை சேர்த்தால், பாஜகவின்
வெற்றி உறுதியாகிறது. தெலுங்கு தேசம், சிவசேனை
ஆகிய கட்சிகள் பாஜகவை ஆதரிக்கும்.

ஒரிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப்பெண்மணியான
திரௌபதி முர்மு என்பவரை பாஜக ஜனாதிபதி
வேட்பாளராக நிறுத்தலாம் என்று கூறப் படுகிறது.
இது உண்மையானால், ஒரிசாவின் பிஜு ஜனதாதளம்
கட்சி பாஜகவை ஆதரிக்கக் கூடும்.

அண்ணா திமுகவின் 48 எம்.பி.க்கள் மற்றும்
122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாமலேயே
பாஜகவால் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியும்.

காங்கிரஸ் வேட்பாளர் யார்? மீண்டும் பிரணாப்
முகர்ஜி நிறுத்தப் படுவாரா? வெற்றி வாய்ப்பு
அறவே இல்லாத நிலையில் முகர்ஜி நிற்கவே
மாட்டார்.

தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீது  அன்சாரியை
காங்கிரஸ் நிறுத்தலாம். அவரும் நிற்க முன்வரலாம்.
சிறுபான்மையினரைக் கவரும் விதத்தில் காங்கிரஸ்
இவ்வாறு செய்யக்கூடும்.

அதைவிட, சோனியா குடும்ப விசுவாசியான ஏ கே
அந்தோணியை காங்கிரஸ் நிறுத்தக் கூடும்.
இதுவும் சிறுபான்மையினரின் வாக்கைக் கவர
உதவும். இல்லையேல் மீரா குமாரை நிறுத்தக் கூடும்.
எனினும் காங்கிரஸ் முகாமில் இது குறித்து
சந்தடி எதுவும் எழவில்லை.

பழங்குடி இனப் பெண்மணியை பாஜக
நிறுத்துமானால், அரசியல்ரீதியாக பாஜகவுக்கு
அதனால் பெரும் ஆதாயம் கிட்டும்.

என்ன நடக்கப் போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்.
********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக