ஞாயிறு, 28 மே, 2023

 மோடி அரசு 8 மணி நேர வேலையை 
12 மணி நேரமாக உயர்த்திஎப்போது வாயில் 
கொழுக்கட்டை அடைத்துக் கொண்டிருந்த 
போலி கம்யூனிஸ்டுகளே, போலி நக்சல்பாரிகளே!
--------------------------------------------------------------------
இந்தியாவின் தொழிலாளர் துறை அமைச்சர் 
யார் என்று தெரியுமா போலி நக்சல்பாரி
போலி மாவோயிஸ்டு அன்பர்களே?  
தெரியாது!

இன்றைக்கு பூபேந்தர் யாதவ் என்பவர் தொழிலாளர் 
துறை அமைச்சராக இருக்கிறார். இவர் 
Labour and employment ministerஆக இருக்கிறார்.

இவருக்கு முந்தி ஒருவர் இருந்தார். அவர்தான் 
தொழிலாளர் மற்றும் தொழிசாலை சட்டத் 
தொகுப்புகளைக் கொண்டு வந்தார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்.
அவர் பெயர் சந்தோஷ் கங்வார்.

8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக 
ஆக்கி சட்டத் திருத்தம் செய்தவர் சந்தோஷ் 
கங்வார்.இதெல்லாம் 2019, 2020 ஆண்டுகளிலேயே 
நடந்து முடிந்து விட்டது.

தொழிலாளர் விரோதச் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் 
கொண்டுவரப்பட்டபோது, நிறைவேற்றப் பட்டபோது 
1) போலி மாவோயிஸ்டுகள் 
2) போலி நக்சல்பாரிகள்
3) போலி இடதுசாரிகள் 
4) போலி முற்போக்குகள்
ஆகிய அனைத்துக் கபோதிகளும் வாயையும் 
ஆஸனத் துவாரத்தையும் பொத்திக் கொண்டு
இருந்தார்கள். ஒரு பயலும் எதிர்க்கவில்லை.

AITUCயும் CITUஉம் 12 மணி நேர வேலையை 
எதிர்த்து எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள்?
பூஜ்யம்! பூஜ்யம்!!

இன்றைக்கு, உப்புப்பெறாத நாடாளுமன்ற புதிய 
கட்டிடத் திறப்பு விழாவை  இவ்வளவு ஆரவாரத்துடன் 
எதிர்ப்பவர்கள், அன்று தொழிலாளர் சட்டத் 
தொகுப்பை எதிர்த்து மூச்சு விடவில்லையே!   

இன்றைக்கு குதித்துக் கும்மாளம் இட்டு நாடாளுமன்ற 
புதிய கட்டிடக் திறப்பு விழாவை எதிர்ப்பதாகக் 
கூச்சல் போடும் குட்டி முதலாளித்துவ விடலைகள் 
அன்று கோமாவில் இருந்தது ஏன்? 

12 மணி நேர வேலை சட்டமாகி விட்டதே 
கோமாளிகளே! கேரளத்தில் பினராயி விஜயன் 
அமல்படுத்தி விட்டாரே! உங்களால் என்ன செய்ய 
முடியும்? போங்கள் போய் பகிடுத்துத் தூங்குங்கள்!
*************************************************** 
           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக