செவ்வாய், 9 மே, 2023

 OBC இடஒதுக்கீட்டின் தந்தை வி பி சிங் வாழ்க!
-------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------------
பெரியாரும் அம்பேத்காரும்தான் 
இடஒதுக்கீட்டையே கண்டுபிடித்தார்கள்; 
கொண்டு வந்தார்கள் என்று அவர்களின்
ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டு 
திரிகிறார்கள். 

OBCக்கான இடஒதுக்கீட்டுக்கும் 
அம்பேத்காருக்கும் எள்முனையளவும் 
சம்பந்தம் கிடையாது.
அவர் ஒரு SECTARIAN LEADER.   
 
OBC இடஒதுக்கீடு, மண்டல் கமிஷன், 
வி பி சிங் உத்தரவு ஆகியவற்றால்தான் 
OBCக்கு 27% ஒதுக்கீடு கிடைத்தது. 

இதற்குப் பாடுபட்ட பலரில் முக்கியமானவர் 
ஆனைமுத்து. OBC 27% இடஒதுக்கீட்டில் 
பெரியாருக்கு எப்பங்கும் இல்லை. அவர் 
அதற்கெல்லாம் வெகுகாலத்துக்கு 
முன்னரே இறந்து விட்டார்.

ஒரு விஷயத்தை முழுமையாக கற்றுக் 
கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் 
பெரியார் அம்பேத்கார் என்று ஸ்தோத்திரம் 
சொல்வதால் பயனில்லை. உண்மை 
அதைத் தாண்டி இருக்கிறது.

OBC இடஒதுக்கீடு என்றால்,
1) பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல்        
2) ஆனைமுத்து 
3) வி பி சிங் 
ஆகியோரைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.
அங்கு ஈ வெ ராமசாமி பற்றியோ 
அம்பேத்கார் பற்றியோ பேசுவதற்கு 
ஒன்றுமே இல்லை. 

சாகு மகாராஜை அடுத்து இந்தியாவை ஆண்ட 
பிரிட்டிஷ்காரன் பல சமூகங்களுக்கும் 
இடஒதுக்கீடு கொடுத்தான். பிரிட்டிஷ்காரனைப் 
பின்பற்றி அன்றைய பல சமஸ்தானங்களிலும் 
இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ்காரன் கொடுத்த இடஒதுக்கீட்டில்தான் 
அம்பேத்காரே படித்தார். இதுதான் உண்மை.
இதுதான் மெய்யான வரலாறு.

தன சொந்தசாதிக்கு மட்டுமே (SC,ST) 
இடஒதுக்கீடு வேண்டுமென அம்பேத்கார் 
உழைத்தார்.

இந்திய மக்கள்தொகையில்பாதிக்கும் மேலாக 
உள்ள OBC மக்களை அம்பேத்கார் கிஞ்சித்தும் 
பொருட்படுத்தவில்லை. அவர் வெறும் 
SECTARIAN LEADER.

எவர் ஒருவருடைய வீட்டில் சாஹு மகராஜ்,
B P மண்டல், வி பி சிங், ஆனைமுத்து 
ஆகியோரின் படம் இருக்கிறதோ அவர் 
மட்டுமே OBC ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசும் 
அருகதை உடையவர். 

பி பி மண்டல், வி பி சிங், ஆனைமுத்து 
ஆகியோரின் உழைப்பால் விளைந்ததே OBC 
இடஒதுக்கீடு. இவர்களின் பாத்திரத்தை 
மறைத்து விட்டு தொட்டதெற்கெல்லாம் 
அம்பேத்கார் பெரியார் என்று கூறுவதில் 
உண்மையும் இல்லை; நேர்மையும் இல்லை.

தமிழ்நாட்டில் 69 சதவீதம் அளவு இடஒதுக்கீட்டை 
உயர்த்தியவர் அன்றைய முதல்வர் எம் ஜி ஆர்.
பின்னர் ஜெயலலிதா அதை எட்டாவது 
அட்டவணையில் வைத்தார். இன்று 69 சதவீத 
இடஒதுக்கீடு சாசுவதமான, நிலைபேறு 
உடையதாக இருக்கிறது என்றால் 
அதற்குக் காரணம் எம்ஜியாரும் 
ஜெயலலிதாவுமே.

இதெல்லாம் யார் எவராலும் மறுக்க முடியாத
வரலாறு. ஆனால் முழுப்பூசணிக்காயைச்
சோற்றில் மறைக்க முயல்வதைப்போல, 
மேற்கூறிய இவ்வளவு பேரையும் மறைத்து 
விட்டு, அவர்களின் உழைப்பை அபகரித்துக்
கொண்டு தொட்டதெற்கெல்லாம் அம்பேத்கார் 
பெரியார் என்ரூ பேசுவது நியாயம் அல்ல.

அம்பேத்காருக்கும் பெரியாருக்கும் 
இடஒதுக்கீடு முறையை வளர்த்ததில் 
நிச்சயம் பங்குண்டு. அவர்களின் பங்கைப் 
பற்றிச் சொல்லுங்கள். அதற்குப்பதிலாக 
இடஒதுக்கீடு என்றாலே அம்பேத்கார் 
பெரியார்தான் என்று சொல்லி 
OBC இடஒதுக்கீட்டுக்காகப் பாடுபட்ட 
மற்றப் பலரின் பங்களிப்பை அபகரிக்காதீர்கள். 
       






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக