ஞாயிறு, 28 மே, 2023

ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு 
வீணான அலப்பறை!
சேக்ஸ்பியரின் நாடகத் தலைப்பு:
Much Ado about nothing!
--------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------
பிரிட்டிஷ்காரன் போய்த்தொலைந்தான்!
நமக்கும் சுதந்திரம் கிடைத்தது!
நம்மை நாமே ஆளத் தொடங்கினோம்!

சுதந்திரம் கிடைத்த இந்த 75 ஆண்டுகளில் 
எவ்வளவோ மாற்றங்கள்! அந்த வரிசையில் 
நாடாளுமன்றத்திற்கு ஒரு புதிய கட்டிடம் 
வந்திருக்கிறது.

இது இயல்பு! 
பழையன கழிதலும் புதியன புகுதலும் 
வழுவல கால வகையி னானே.

அவ்வளவுதான்! 
அதற்கு மேல் அதில் ஒன்றுமில்லை.
ஆனால் இந்தியாவில் ஆளுமை வளராத 
IQ குன்றிய அரசியல்வாதிகள் புதிய 
கட்டிடத்தின் திறப்புவிழாவை முன்னிட்டு 
பெரும் ஆரவாரத்துடன் தங்களின் 
அறியாமையை இயலாமையை 
வெளிப்படுத்திக்  கொண்டு இருக்கிறார்கள்.

ஷேக்ஸ்பியர் இதை Much ado about nothing என்கிறார்.
சேக்ஸ்பியரின் இந்த நாடகத்தைப் படித்து
இருக்கிறீர்களா? படித்திருக்கிறேன் என்று 
கூறுபவர்கள் இந்நாடகத்தின் கதாநாயகியின் 
பெயர் என்ன என்று கூற வேண்டும். இது 
காமெடியா டிராஜெடியா என்றும் கூற வேண்டும்.
இன்னும் சில கேள்விகளை வைத்திருக்கிறேன்.
நிற்க.

தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் குறித்த 
பல சட்டத் தொகுப்புகளை மோடி அரசு 
2019, 2020 ஆண்டுகளில் கொண்டு வந்தபோது 
இதே எதிர்க்கட்சிகள் மௌன விரதம் இருந்தார்கள்.
இப்போது நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் 
குறித்து இவ்வளவு தூரம் வாய் கிழிய வேண்டிய 
அவசியம் என்ன?

CPI, CPM போலிக் கம்யூனிஸ்டுகளே,
இப்போது நடந்து முடிந்த கர்நாடக சட்ட மன்றத் 
தேர்தலில் நீங்கள் வாங்கிய ஒட்டு என்ன?
பெற்ற இடங்கள் என்ன?
224 இடங்கள் உள்ள சட்ட மன்றத்தில் ஒரு இடம் கூட 
CPI, CPM போலிகளால் வெல்ல முடியவில்லையே ஏ?

வாக்கு சதவீதத்தில் நோட்டாவை விடக் குறைவாக
வாங்கிக் கேவலப்பட்டுப் போன போலிக் 
கம்யூனிஸ்டுகளே, கட்சியை வளக்கப் பாருங்கடா! 
வரம்பை மீறிய அளவில் பார்லிமென்ட் கட்டிட 
விவாதம் உங்களுக்கு ஏண்டா?

மோடியை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 
இந்தியாவை எதிர்க்கும் மூடர்களே, உங்களின் 
தப்பை உணருங்கடா!

தேசிய அந்தஸ்தைப் பறிகொடுத்த பாவிகளே,
பாஜகவை வீழ்த்தப் போகிறானாம்! உன்னால் 
எப்படியடா வீழ்த்த முடியும்? முதலில் நோட்டாவை 
வீழ்த்தப் பாருங்கடா!
****************************************************
     
     

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக